புதன் 24 2014

ஒரு ரூபா சம்பளம் வாங்கீன காலத்திலிருந்து....

முதலமைச்சர் ஜெயலலிதா
படம்- வினவு.http://www.vinavu.com/2014/09/24/power-tariff-hike-not-under-elected-government-control/



ஒரு ரூபா சமபளம் வாங்கின் காலத்திலிருந்து  குடும்பம், குட்டி,வாரிசுன்னு எதுவுமே இல்லாம இப்பவரைக்கும்... ஒரு தொறவியப் போல தமிழ்நாட்டு ஜனங்களுக்காக ஒழச்சு..ஒழச்சு ஓடா தேஞ்சி போயி இருக்கிற ஆத்தா........ உங்களப்    போயி.................

சொத்து குவிப்பு, அது இதுன்னு வழக்கு போட்டு பதினேழரை  வருசமா இந்த வழக்குக்காக மாதத்தில் ரெண்டு வாட்டி பொங்களுர்க்கும் சென்னைக்குமாக அலைஞ்சு ஓஞ்சு போன நேரத்தில.....................

நம்ம சர்க்காருல. ஆவின் பால்வளத்துல இருந்த வைத்தியநாதன் புத்திசாலித்தனமாக ஒழைச்சதனாலே..சாதாரண ஒப்பந்தராக இருந்து இன்னிக்கு 104 டேங்கர் லாரி வச்சிருக்காரு...

நாம... உருப்படியா ஒழச்சு இருந்தா..    இந்தியாவையே ஏலத்துக்கு எடுத்து இருந்திருப்போமே   ஆத்தா.....

நாம ஏலம் எடுத்த நாட்டிலே.. ஆத்தாவின் 110 விதியின் கீழ் அறிவிப்பு இல்லாமல், ஆத்தாவின் ஆணையில்லாமல்  “ தீய சக்தி”யான மின்சார ஒழுங்குமுறை ஆணையம்   இப்படி பாரின் குத்தாட்டம் ஆடவிட்டுயிருப்போமா.. ஆத்தா...........




10 கருத்துகள்:

  1. புத்திசாலி வைத்தியநாதன் லாரிக் கணக்கே இவ்வளவு என்றால் சொத்துக் கணக்கு எவ்வளவு இருக்கும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. அந்த மாரியாத்தா தான் காப்பாற்றணும்.

    பதிலளிநீக்கு
  3. வைத்தியநாதன் சொத்து கணக்கைதான் இண்டர்போல் ஆய்வு செய்து கிட்டு இருக்காங்க.....

    பதிலளிநீக்கு
  4. அந்த மாரியாத்தாவுக்கு பூஜை,பரிகாரம் போன்றவறை மற்றவர்களைவிட கூடுதலாக கவனித்ததால்தான் மாரியாத்தாவே காப்பாத்தும்...

    பதிலளிநீக்கு
  5. அப்படியா!! போங்க சார்...அஞ்சு வருசம் பெயிலாகியவன... போனா போகட்டும் என்று அடுத்த வகுப்புக்கு தள்ளிவிட்டவன போயி...

    பதிலளிநீக்கு
  6. மாரியாத்தா இவங்ககிட்ட இருந்து எங்களை எல்லாம் காப்பாத்து.

    பதிலளிநீக்கு
  7. மாரியாத்தாவே..இவங்க தயவுலதான் பொழப்ப ஓட்டுது ...அது எப்படி மற்றவர்களை காப்பாத்தும்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு புது நம்பிக்கை இன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குரல் கொடுங்க நண்பர் கீழே இருக்கும் இருக்கும் மக்களின் முன்னேற்திற்காக.

    பதிலளிநீக்கு
  9. இந்த நம்பிக்கை நிரந்தரமில்லை... திரு.வேகநரி அவர்களே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...