பக்கங்கள்

Saturday, October 25, 2014

கனவில் வந்ததும்..நிஜத்தில் வராததும்..பெருங்கூட்டம் அந்தக்
கூட்டத்திலே சிக்கிய
நான்- பாட்டுப் பாடு
வதற்க்காக தவியாய்
தவித்த வேளையிலே...

பெருங்கூட்டத்தின் மத்தியிலே
நெற்றியில் மூன்று பட்டை
நடுவிலே பெரிய பொட்டுட்ட
துறவியொருவர் மேடையிலே
வீரமாய் எழுந்து நின்றார்.

காவியுடை தரித்த வீர
துறவியைக் கண்டு
பெருங்கூட்டம் ஊளை
யிட்டு வரவேற்றது.

ஊளையிட்ட கூட்டத்தினை
கை சைகயால் சாந்தப்
படுத்திய துறவி வீரமாய்
முழங்கினார்......தப்பு
வீரமாய் கத்தினார்.

இந்துக்களே! இந்துக்களே!!
தீபாவளி பண்டிகையை
இந்துக்களாகிய நாம்
மட்டுமே கொண்டு ஆட
வேண்டும் என்ற நம்
மரபை மீறி கண்ட
வனும் கொண்டு ஆடுகிறான்.

தீபாவளி பண்டிகை வியா
பாரத்திலே..அவன் மட்டுமே
நல்ல லாபமடைகிறான்.

ஆகவே...இந்துக்களே! இந்து..க்களே!!
இந்து..க்களின் வீர மரபை
மீட்டெடுக்க..இந்துக்களாகிய
நாம் வரும் காலங்களில்...

தீபாவளியை கொண்டாடாமல்
புறக்கணிப்போம்..புறக்கணிப்போம்
புதுத்துணி வாங்காமல் புறக்கணிப்போம்
வெடி வெடிக்காமல் நிறுத்தி வைப்போம்.

பெருங்கூட்டமும் புறக்கணிப்போம்!
புறக்கணிப்போம்  !! இந்துக்கள்
அல்லாதவர்கள் லாபமடையும்
தீபாவளி பண்டிகையை புறக்
கணிப்போம் என்று வெடிச்
சத்தம ளவிற்கு  ஊளையிட்டது

அதி காலை நேரத்தில்
கேளாத செவியில் வெடிச்
சத்தம் கேட்டு எழுந்த
போது கனவு கலைந்தது
வெடிச் சத்தத்தின்.....
ஆத்திரத்தை அடக்கியவன்
மூத்திரத்தை அடக்க .....
முடியாமல் ஓடினே்ன்
விரைவாய் பாட்டு பாட....


குறிப்பு ---பாட்டுப்பாட என்பது சிறுநீர் கழிப்பதை  குறிக்கும்.


10 comments :

 1. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 2. அய்யா,
  முதலில் தாங்கள் பெருங்கூட்டத்தில் பாட்டுப்பாடுவதற்காக என்று கூறுவதும் அடிக்குறிப்பில் காட்டிய பொருளில்தானா?
  கண்டவனும் கொண்டு ஆடுகிறான்...
  கேளாத செவிகளில் விழுந்த வெடிச்சத்தத்தைக் கேட்டெழுத உங்கள் செவியாவது கொடுத்து வைத்திருக்கிறதே!!!
  இன்னுமோர் சாட்டயடி!
  நன்றி

  ReplyDelete
 3. தீபாவளி கதை சொல்லி மதம் வளர்க்க நினைபவர்கள் எப்படி புறக்கணிப்பார்கள் ?இது கனவிலும் நடக்காதே:)வேண்டுமானால் இந்து கடையில் மட்டுமே வாங்குவோம் என்று கோஷமிடுகிறார்கள் ?இப்படி கோஷம் போடுபவர்கள் துணியையும் ,வெடியையும் செய்தவர்களும் ஹிந்துதான் என்று கூற முடியுமா ?
  த ம 1

  ReplyDelete
 4. தீபாவளி பண்டிகையை பாகிஸ்தானிலும்,சவூதி அரேபியாவிலும் கொண்டாட அனுமதித்தால் இந்து துறவியின் கொட்டம் அடங்கிவிடும்.

  ReplyDelete
 5. பதிவர் விழாவுக்கு செல்ல இருப்பதால். தங்களின் கருத்துரைக்கு மறுமொழிகள் பிறகு வந்து கூறுகிறேன். பொருத்தருள்க... நன்றி!

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

  ReplyDelete
 7. பெருங்கூட்டத்தில் பாட்டுப்பாடுவதாக கூறியதில்..கனவில பாட்டுப்பாட தவித்தது உண்மை. அதை அடக்கமுடியாமல்தான் வேட்டு சத்தத்தில் தூக்கமும் கனவும் கலைந்து ஓடினதும் உன்மை. திரு. ஊமைகனவுகள் அவர்களே!!

  ReplyDelete
 8. அந்தத“தீபாவளி வியாபாரத்தில் அவர்களுக்கு பிடிக்காதவர்கள் கல்லா கட்டுவதை தடுக்கத்தான் துறவி கத்துகிறார்.அதனால் கனவில் வந்தது.நிஜத்தில் வராதது என்று குறிப்பிட்டேன்... ஜி

  ReplyDelete
 9. தீபாவளிய எல்லாரும் கொண்டாடடுகிறார்கள் என்றுதான் துறவி திபாவளிய புறக்கணிப்போம் என்று கணவில் சொல்கிறார் திரு. வேக நரி அவர்களே!!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com