ஞாயிறு 26 2014

ஒரு லிட்டர் பாலில் சிறு துளி விஷம்....!!!


http://ta.wikipedia.org/s/dr7
தமிழ்நாட்டில் பால் விலை விஷம் போல் ஏறிப்போய்விட்டது. விஷம் போல் ஏறிவிட்ட பாலில் உண்மையிலே சிறு துளி விஷம் கலந்தால் அந்தப் பாலே விஷமாகிவிடும் அல்லவா......

அப்படித்தான் லட்சிய நடிகர் என்று பெயரெடுத்து செத்துப்போன நடிகர் ஆரம்பகாலத்தில் இருந்து..அதாவது முன்னணி நடிகராக பரிணமித்து வந்த காலத்திலிருந்து தன் கடைசி காலம்வரை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

தனது திருமணத்தை ஜாதி மறுப்பு திருமணமாக செய்து கொண்டது போன்ற பல சிறப்புக்களை பெற்று  ஒரு லிட்டர் பாலாக இருந்தார்.

ஆனால் ஒரு லிட்டர் பாலாக சுத்த்மாக இருந்த நடிகர். தன் வாழ்நாளில் இடைப்பட்ட காலத்தில் கட்சி மாறியாக இருந்தவர். ஆதிக்கச்சாதி வெறியின் குலதெய்வம் தன் சாதிக்காரர் என்பதால் சாதி வெறி உணர்வு கொண்டவராக மாறிப்போனார். 

ஒரு லிட்டர் சுத்தமான பாலில் கலந்த சாதி வெறி உணர்வு என்ற சிறு துளி விஷம் கலந்ததால் ..கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி மறுப்பு திருமணம் போன்ற சிறப்புகள் எல்லாம் அழிந்தவராக போனார்.

இதோடு தள்ளாத காலத்தில் கொள்ளக்காரிக்கு ஆதரவாக அம்மா அடிமைகளில் ஒரு பிரிவான திரைப்படத்துறையினர் நடத்திய உன்னாவிரத போராட்டத்தில்.. கலந்து  கொண்டு மொத்தமாக விஷமாகிப் போகி லட்சிய நடிகர் பெயருக்கே அர்த்தமற்றவராகி ஆகிப்போனார்.

 ஆதிக்கசாதீய உணர்வால் பெரியார் கொள்ளை உடையவர்களிடமும் ஜனநாயவாதிகளிடமும், முற்போக்ககளார்களிடமும் சாதித்..தீயை எதிர்ப்பவர்களின் மனங்களில் இல்லாமல் செல்லாக் காசிப்போனார்.

10 கருத்துகள்:

  1. கொண்ட கொள்கையில் உறுதியாக இல்லாதவர்கள் மக்கள் மனதில் மட்டும் உறுதியான இடத்தை எப்படி பிடிக்க முடியும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. கொள்ளையடிப்பதில் உறுதியாக இருந்தவர்களெல்லாம் மக்கள் மனதில் இடம்பிடித்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்ததையும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. எதற்குமே இன்னொரு கோணம் உண்டுதான் நண்பரே!
    பலரும் காணாத காண விரும்பாத கோணம்..!
    பயிரின் நடுவில் களைகளைப் போலக் காண்பதும் பாலில் ஒரு துளி விஷம் போலக் காண்பதும் அந்தப் பார்வைதான்.
    லட்சிய நடிகரின் ஒரு படம் கூடப் பார்த்த நினைவில்லை. எங்கள் காலத்திலேயே அவர் காலங்கடந்தவர் ஆகி விட்டார்.
    இப்போது நடி கர் களை நினைத்துப் பார்த்தால் ஒரு குடம் விஷத்தில் ஒரு துளிப் பாலைத் தான் தேட வேண்டி இருக்கும்.
    த. ம 2

    பதிலளிநீக்கு
  5. இவரை ஊழல் செய்து தண்டனை பெற்றவருக்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரத செய்திகளில் பார்த்தது.மிகுதி பல உங்க மூலம் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் வாழ்த்தரைக்கும் நன்றி ! திர.யாழ் பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. ஒரு துளி விஷமே ... ஒரு குடத்து பாலை விஷமாக்கும்போது... விஷம் காலக்காத பாலாக ஒரு சிலர்கள் தான் இருக்கிறார்கள்...அதனால்தான் அநியாயக்காரர்கள் பெருத்து பெரும் ஆட்டம் போடுகிறார்கள் திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  8. இவரை ஆகா ஓகோன்னு புகழ்ந்தபோதுதான் அதனை பொருக்கமாட்டாமல்தான் இவரின் சாதிய உணர்வையும், கொள்ளககாரிக்கு ஆதரவானதையும் பதிவிட்டேன. திரு. வேக நரி அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.கில்லர்ஜீ அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....