வியாழன் 20 2014

ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற சாதிவெறி அய்யர்....!!!

Kathir Nilavan 2 புதிய படங்களைச் சேர்த்தார்.
## "குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்ட.......

'ஆஷ் துரை' சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.

'வாஞ்சிநாத சாதிவெறி அய்யர்' தற்கொலை செய்து கொண்ட நாள் 17.06.1911.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் தமிழ்நாட்டில் கலெக்டராக இருந்தவர் ஆஷ். 'கேரக்டர்' குறித்து பேச வேண்டுமானால் சில உதாரணங்களை சுட்டிக்காட்டலாம்.

"அருந்ததி இனத்தை சேர்ந்த பெண், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல ஊருக்குள் உள்ள அக்கிரஹாரம் வழியே செல்ல ஆஷ் முயன்ற போது, பார்ப்பனர்கள் 'அவள் தீட்டு சாதியை சேர்ந்தவள். அவளை ஊருக்கு ஒதுக்கு புறமான வழியில் அழைத்துச் செல்லுங்கள்' என்று கூச்சலிட்டதோடு வண்டியை நகர விடாமல் முற்றுகையிட்டனர். வேறு வழியில்லாமல் 'ஆஷ்' அவர்கள் மீது தடி அடி நடத்த உத்தரவிட்டு முற்றுகையிட்டவர்களை ஓட வைத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்."

"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்டார்."

சரி, ஆஷ் துரைக்கும் வாஞ்சிநாத அய்யருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

வழி மறைத்த பார்ப்பன கூட்டத்தில் 16 வயது இளைஞன் ஒருவனும் இருந்தான். அவனுக்கும் அடி விழுந்தது. 'இந்து சம்பிரதாயங்களை மதிக்காத இந்த வெள்ளைக்காரனை சாகடிப்பேன்' என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டான். விளைவு சில ஆண்டுகளுக்கு பின் இரயிலில் மனைவி, குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையை மாறுவேஷத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு சாகடித்தான். தப்பிச் செல்லவும் அவனுக்கு வழியில்லை. அங்கேயே அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய சட்டைப் பையில் ஒரு கடிதத்தையும் வைத்திருந்தான். அதில் இருந்து சில வரிகள்:

"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."

வாஞ்சிநாத அய்யரோடு 'பாரதியார்' என்கிற கவிஞனும் கொலை முயற்சியில் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். திட்டத்திற்கு மட்டும் உடந்தையாக இருந்த பாரதியார் கைது செய்யப்பட்ட போது 'மன்னிப்பு' கோரியதால் சில நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் பாண்டிச்சேரிக்கு ஓடிவந்த பாரதியாரின் பார்ப்பன விசுவாசம் ஆரியம், இந்து, இந்து தேசம் என்று கவிதைகளில் வெறியேற்றிக் கொண்டது.
thanks! - தமிழச்சி.
17/06/2014

14 கருத்துகள்:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற மாற்றுச் சிந்தனைகள் விவாதிக்கப்பட வேண்டியவை.
    என்ன...
    வலிப்போக்கரோடு விவாதிக்கும் அளவிற்கு வலிமை இருக்க வேண்டும்.
    நானோ நோஞ்சான் !
    அதனால் விடு ஜூட்..!
    த ம 1

    பதிலளிநீக்கு

  3. முற்றிலும் புதுமையான விசயங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. இதுநாள் வரையில் சுதந்திர வேட்கையில் அல்லவா அவர் சுட்டுக் கொன்றார் என்று நினைத்து இருந்தேன் ?நல்ல செய்தி தந்த பதிவு !
    த ம1

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. முன்னோரு காலத்தில் நானும் நோஞ்சான்தான். இப்போதும் சில விபரங்களில் தங்களைவிட நோஞ்சானாகத்தான் இருக்கிறேன்.திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது. நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  8. நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன் பலதரப்பட்ட பதிவுகளை படித்தப் பிறகுதான்...அய்யரின் சாதிவெறி தெரியவந்தது..ஜி.

    பதிலளிநீக்கு
  9. சும்மா தகவலுக்கு ....

    ஆஷ்துரை கொலை வழக்கில் சோமசுந்தரப்பிள்ளை எனும் சூத்திரரின் சாட்சியம் நீதிமன்றத்தில் பின்வருமாறு பதிவாகியது.

    ‘ஆங்கிலேய ஆட்சி இந்திய நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியை நீக்கவேண்டுமென்றால், இந்தியாவிலிருக்கும் அனைத்து ஆங்கிலேயர்களும் கொல்லப்படவேண்டும். அதற்கு முன்மாதிரியாக ஆஷ் கொல்லப்படவேண்டும். ஏனென்றால் அவன் தான் ஜில்லா கலெக்டராக இருந்து, சுதந்தரப் போராட்ட வீரரான வ.உ.சி தோற்றுவித்த சுதேசி கப்பல் கம்பெனியை மூடச்செய்தவன் என்று வாஞ்சிநாதன் என்னிடம் தெரிவித்தான்.’

    பதிலளிநீக்கு
  10. சும்மா தகவலுக்கு 2

    ஆ.இரா. வேங்கடாசலபதி எனும் ஆய்வாளர் ஆஷ்துரையின் பேரனான ராபர்ட் ஆஷை சந்தித்து ஆஷ் கொலை தொடர்பான ஆவணங்களை பெற்ற போது அவர் வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு கொடுத்தனுப்பிய கடிதம்...

    "துயரமும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த இன்றைய தினத்தில் ராபர்ட் வில்லியம் ஆஷ் பேரனுமாகிய கொள்ளுப் பேரன் பேத்திகளுமாகிய நாங்கள் வாஞ்சி அய்யரின் குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலையும் நட்பையும் வெளிபடுத்தும் முகமாக இச்செய்தியை விடுக்கிறோம். லட்சிய நோக்கம் மிகுந்த அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சி. வாஞ்சியின் விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. அரசியல் களத்தில் தீவிரமாக பாடுபடுபவர்கள் அவர்கள் ஆட்சியாளர்களானாலும் சரி ஒடுக்கப்படுபவர்களானாலும் சரி, பெரும் பிழைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகின்றது. இன்றைக்கு உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்ற நாம், பழையவற்றை மறந்து சமாதானமாக உடன்வாழ்தல் இன்றியமையாதது. அன்புடன் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து"

    பதிலளிநீக்கு
  11. சும்மா தகவலுக்கு 3

    ஆஷ்துரை கொலை குறித்து பாரதியார் பத்திரிக்கையில் எழுதியதாவது...

    “ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். (இதை எதிர்பாரத விபத்து என்று நான் சொல்லட்டுமா? ஏனென்றால், இந்த மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததேயில்லை.)

    கொலையுண்ட மனிதர் தமது மனைவியுடன் இருந்திருக்கிறார். அவர்கள் யுவர்கள்; தெரிந்தவரையில் ஒருவரையொருவர் பரஸ்பரம் காதலிக்கும் தம்பதிகள். ஜோடிகள் இருக்கும் குதூகலத்துடன் உல்லாச யாத்திரை போகிறார்கள்.

    இது போன்றதொரு நிலைமை, பக்தி சிரத்தையுள்ள எந்த இந்துவின் உள்ளத்திலும் புனிதமான எண்ணங்களையே தூண்டிவிடும்.

    தன்னைக் கைது செய்ய வந்தவர்களையெல்லாம் வெற்றிகரமாகப் பயமுறுத்திவிட்டு, கலெக்டரைக் கொன்று சில நிமிடங்களில் வாஞ்சி அய்யர் தம்மைத் தாமே சுட்டு மாய்த்துக்கொண்டார். இதற்குப் பிறகு இந்த மாதிரி சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்குப் பெருமையளிக்கிறது.” -பாரதியார்

    பதிலளிநீக்கு
  12. கடைசியாக கீழ்காணும் இணைப்பிலுள்ள பதிவில் உள்ள திரவியம் நடராஜன் அவர்களது பின்னூட்டத்தையும் படிக்கவும்

    http://koottanchoru.wordpress.com/2009/03/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE/

    நன்றி!!!

    பதிலளிநீக்கு
  13. கீழ்கண்ட கருத்துகள் உங்கள் சும்மா தகவலுக்காக.....

    Suki Venkat முத்துராமலிங்க தேவர் சாதி ஒற்றுமைக்காக போராடினார்னு பள்ளியில் சொல்லி தரமாதிரி, வாஞ்சினாதன் விடுதலைக்காக போராடினான்னு சொல்லராங்க. எங்க ஊர்ல (செய்யார்ல) வங்கிலேந்து பணாம் திருடிய ஒரு ஆள சதந்திர போராளியாக ஆக்கி விட்டாங்க. இவங்க பிரிடிஷ் காரனிடம் நீங்க எங்களுக்கு சுதந்திரம் தரலைனா, சைனா, ரஷ்யா மாதிரி கம்யுனிசம் வந்துடும்னு சொல்லிதான் சுதந்திரம் வாங்கினாங்க ... இன்னும் அதை வச்சிதான் ஒட்டராங்க..
    நேற்று 12:55 PM மணிக்கு · திருத்தியது · பிடித்திருக்கிறது · 7

    Jahn Mohamed Bin Amanullah வாஞ்சிநானுள் மேலதிக்க வஞ்சனை,

    தோலுரித்தமைக்கி நன்றி
    14 மணிகள் · பிடித்திருக்கிறது · 1

    Ahmed Ahmed நல்ல பதிவு நண்றி
    10 மணிகள் · பிடித்திருக்கிறது

    Salli Nazir மரைக்கபட்ட உண்மை ஏறாலம்
    7 மணிகள் · பிடித்திருக்கிறது · 1

    பதிலளிநீக்கு
  14. நந்தவனத்தானுக்கு சும்மா தகவலுக்கு..


    நாகு மகன் கணேசன்
    16 ஜூன், 2018, பிற்பகல் 9:04

    பெறுநர்: நான்

    ''குற்றால அருவியில்....
    குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
    ஏனைய சாதியைச் சார்ந்த யாரும்
    குளிக்க கூடாது....???
    என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
    ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர்
    என்பது....
    நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ????.
    இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை....
    சாதி வெறியனான
    வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஒரு நாள் ஆஷ் துரை
    மாலை நேரத்தில்
    தனது குதிரையோட்டி
    முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார்.
    நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது.
    ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.

    அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
    பின்னால் வந்த ராவுத்தர்
    ஓடி வந்து
    "துரை அங்கு போகாதீர்கள்"
    என்று தடுக்கிறார்.
    ஏன் என்று வினவிய
    துரைக்கு "
    அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும்
    நீங்கள்
    அங்கு போகக் கூடாது
    என்றும்
    சொல்லுகிறார்....!!!

    உடனே ஆஷ் துரை
    ராவுத்தரை பார்த்து
    சரி நீ போய்
    பார்த்து வா என்றார்.
    சேரிக்குள் போன
    முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்
    " முதல் பிரசவம் துரை....
    சின்ன பொண்ணு
    ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம்,
    பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம்"
    பரிதாபம்.....
    இனி எங்கிட்டு துரை
    பொழைக்கப் போகுது
    என்றார்.

    ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,
    அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க
    அய்யா....
    பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது ???
    என்றார் ரவுத்தர்.

    இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி
    அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்.....
    ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
    அருகிலிருக்கும் ஊருக்குள்
    சென்று
    உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை.

    ஓடிப் போன ராவுத்தர்
    ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது.....
    துரையின் வண்டியோட்டி எனத் தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறார்.
    விசயத்தை சொல்லி
    ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.

    அந்த வழியாய் செல்ல....
    வண்டிப்பாதை பிராமணர்களின் அக்கிரஹாரத்தை தாண்டித் தான் சென்றாக வேண்டும். சரியாய்
    அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.

    ஒரு சேரிப்பெண்ணை
    ஏற்றப் போகும்
    வண்டி
    இப் பாதை வழியே
    போகக் கூடாது என்று பார்ப்புகள் வழி மறித்து
    வழி விட மறுக்கிறார்கள்...!!!
    வண்டி கொடுத்த குடியானவனையும்
    ஊர்
    நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள்...???

    வண்டி கொண்டு வரச் சொன்னது
    துரையும்
    அவரின்
    மனைவியும் தான் என்று விபரம் சொன்ன
    பிறகும்
    ஏற்க மறுக்கிறார்கள் ....!!!

    இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்
    ராவுத்தர்.
    இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
    தனது வண்டியில்
    அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.

    குதிரையோட்டியின் பக்கதிலேறி
    அமர்ந்தும் கொண்டார்.
    வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது.
    பார்ப்புகள் கூட்டமாய்
    வழி மறிக்கிறார்கள்
    "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு
    இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய்
    இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"
    என்கிறார்கள்.

    வழி விட சொல்லிப் பார்த்த துரை
    அவர்கள் வழி விட மறுக்கவே.... வண்டியைக் கிளப்பு
    என்று
    உத்தரவிடுகிறார்.
    மீறி வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல்
    துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது.
    அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

    ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில்
    ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்
    அவன் பெயர் வாஞ்சிநாதன்.

    அப்போது வாஞ்சிநாதன் எடுத்த
    சபதம் தான்......
    17.06.1911 அன்று
    ஆஷ் துரை
    சுட்டுக் கொல்லப்பட வஞ்சகமாக
    அமைந்து விட்டது.

    மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு
    இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

    இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய
    Ash Official
    Notes.....
    என்னும் குறிப்புகளில்
    அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது...???!!!
    🙏 (நன்றி ÷ சுந்தர மகாலிங்கம் , வாட்ஸ் ஆப்)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....