பக்கங்கள்

Tuesday, November 18, 2014

குருவை மதிக்க மறந்த குருநாதன்...........

படம்-www.vikatan.comதிரைபடத்துறையிலே மேற்கத்திய(பிரமலை) கள்ளன் என்ற அடை மொழியுடன் புதிய,பழைய இயக்குநார்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் குருநாதன்.

அந்த குரு நாதனின சிஷ்யர்கள் எல்லாம் தங்கள் குருவானவரை மதிப்பது போல் இந்த குருவான குருநாதன் தன் குருவானவரை மதித்தாரா..?? நிணைத்தார..??? என்றால்....இந்த குருநாதனின்  வாயிலிருந்து வரும் வார்த்தைகளே இல்லை என்றே மெய்ப்பிக்கிறது.

நடிப்பதற்க்காகவே சினிமாவிற்கு வந்த இந்த குருநாதன் அதற்க்காக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் திரைப்பட இயக்குநாராக ஆகலாம் என்று முடிவெடுத்து அன்றைய பெரிய இயக்குநார்களான எஸ்.பி. முத்துராமன், சி.வி.இராஜேந்திரன் போன்றவர்களிடம் உதவி இயக்குநாராக ஆகும் வாய்ப்பு கிடைக்காததால்...

புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்தார். அன்றைய இயக்குநர் புட்டண்ணா இவரை மதித்து தனது உதவி இயக்குநாராக சேர்த்துக் கொண்டார் புட்டண்ணாவிடம் பணிபுரிந்து... அதன்மூலம் இயக்கு நாராக மாறி இன்று தன்னுடைய சிஷ்யர்களின் உதவியால்  இயக்குநர் இமயம் என்று புகழ் பெற்ற இந்த குருநாதன்.

தான் பேசும் மேடைகளில் இயக்குநர் தொழில் கற்றுக் கொடுத்த புட்டண்ணா கனகலை மறந்து.... தனக்கு குருவே அல்லாத  ஸ்ரீதரை தன்  சினிமா பயணத்துக்கான  முன்னோடி என்று பீத்திக் கொள்கிறார்.

இந்த குருவை மதிக்க மறந்த இந்த குருநாதன்.........!!!


6 comments :


 1. நன்றி மறப்பது நன்றன்றே,,,,

  ReplyDelete
 2. அவர் ஏன் மறந்தார் என்பதை அவர்தான் சொல்லணும் !
  த ம 1

  ReplyDelete
 3. நமக்கு தெரிந்தது குருநாதனுக்கு தெரியவில்லையே......!!!

  ReplyDelete
 4. பேசுற மேடையில் சொன்னால்தானே நமக்கும் தெரியவரும்........

  ReplyDelete
 5. நடிகராக விரும்பிய பாரதி ராஜாவுக்கு, திடீரென்று டைரக்ஷன் மீது நாட்டம் ஏற்பட்டது. பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணாவிடம் உதவி டைரக்டர் ஆனார்.

  http://www.maalaimalar.com/2013/02/25231302/puttanna-asst-director-bharath.html

  ReplyDelete
 6. எனக்கு தெரியாத தகவலை தெரிவித்தற்கு நன்றி! திரு.ZREYAS அவர்களே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com