பக்கங்கள்

Thursday, November 20, 2014

முதலாளியின் கஷ்டநஷ்டங்களை கண்டு வேலையை முடித்துக் கொடுத்த ருத்ரம்மாதேவி....

படம்-tamil.webdunia.com

“ருத்ரம்மாதேவி” என்ற படத்துக்கான கிளைமாக்ஸ் காட்சியின் வாள் சண்டையின் போது,ருத்ரம்மாதேவியின் வலது கை மணிக்கட்டில் சிறியளவிலான எலும்பு முறிவு எற்ப்பட்டது.

மருத்துவ சோதனையின் போது ருத்ரம்மாதேவி வாரக் கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை பட தயாரிப்பு முதலாளிகளும் ஏற்றுக் கொண்டு,தயாரிப்பு வேலையை தள்ளி வைக்க முன்வந்தது.

ஆனால் உழைப்பாளியான ருதரம்மாதேவி.முதலாளிகளின் கஷ்டநஷ்டங்களை புரிந்து கொண்டு தான் உழைக்க...அதாவது நடிக்கத் தயார் என்று அறிவித்தது.

எலும்புமுறிவு ஏற்பட்ட  கை மணிக்கட்டில் 5 ரோஸ்தோல் நிறம் கொண்ட பேண்டேஜ் கொண்டு கட்டு போடப்பட்டு, வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண ஊசிகளை போட்டுக் கொண்டு...

குறித்த நேரத்தில் சண்டைக்காட்சிக்கான உழைப்பை முடித்து கொடுத்தது ருத்ரம்மாதேவி.

சூப்பர்களுக்கும், தசவதாசர்களுக்கும், கத்தியில்லாமல் கத்தியவர்களுக்கும் ருத்ரம்மாதேவி-யும் சளைத்தவரல்ல என்று தெரியப்படுத்தப்பட்டது.

ருத்ரம்மாதேவியின் உழைப்பை பற்றி அந்தப்படத்தின் இயக்கநரும் தன்னுடைய இணையதள பக்கத்தில் ருத்ரம்மாவியின் மகிமையைப்பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.

8 comments :


 1. எல்லாம் அடுத்த வாய்ப்புக்காகத்தான்,,,,

  ReplyDelete
 2. ஆம்பளை நடிகருக்கு இணையாக சண்டை போட்டதாக கேள்வி... நண்பரே!!..... அதான் இந்தப்பதிவு..

  ReplyDelete
 3. வலிப்போக்கரே,
  உங்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அய்யா!
  சண்டை போடுவதில் ஆம்பளைக்கு இணையென்ன அதற்கு மேலே இருப்பார்கள் பெரும்பாலும் ஜெயிப்பார்கள் என்பது தாங்கள் அறியாததா,?
  த ம 2

  ReplyDelete
 4. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
 5. ஹலோ..நண்பரே... தாங்கள் தகவல் அனுப்பவதற்கு முன்னமே..வருகைதந்து அறிந்து.எனது கருத்தை அறிய தந்துவிட்டோம்...

  ReplyDelete
 6. கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா :)
  த ம 3

  ReplyDelete
 7. நிறுத்துச் பார்த்து சொல்வதற்கு தாராசு இல்லாததால் அளவே இல்லாமல் போய்விட்டது..ஜி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com