“ நண்பரே! நான் ஏற்கனவே, தங்களிடம் தெரிவித்தப்படி ஞாயிற்றக்கிழமை காலை ஒன்பது மணிக்கு விழா அரங்கத்தில் இருக்க வேண்டும். ஆகையால் தாங்கள், உதவிக்கு தங்களின் மருமகனுடன்... ஞாயிற்றக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து. ரெடியாகி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்து விடவும் அங்கிருந்து நாம் சேர்ந்து செல்லலாம். நான் தங்களை எதிர்பார்த்து காத்திருப்பேன் .
நண்பரும்.பதிலுக்கு பேசினார். “ அதிகாலை பனி நேரமாக இருக்கும் முடிந்தவரையில் நான்கு மணிக்கு எழுந்திருக்க முயற்சி செய்கிறேன். நான் வருவதற்கு சற்று தாமதமானால் காத்து இருக்கவும். வந்துவிடுவேன்.”
நண்பரிடம் வருவதாக ஒப்புதல் சொல்லிய நண்பர். அன்றைக்குரிய வேலைகளை திட்டமிட்டு முடிப்பதற்க்கு ஆயுத்தமாயினார்.
சனிக்கிழமை காலையில் திட்டமிட்டபடி வேலையை தொடங்கி செய்து கொண்டு இருந்தபோது மின்சாரம் தடை ஏற்ப்பட்டது. தடை பட்ட மின்சாரம் உடனே வருமா..? அல்லது இரண்டு மணி நேரம் கழித்து வருமா...? என்பது பற்றி தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தது.
மின்சாரம் வந்து வேலையை தொடங்கி முடித்தபோது மணி பதினொன்றாகியிருந்தது. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு, படுக்கையில் சாய்ந்தபோது மணி பனிரெண்டாகியிருந்தது. வேலையின் அசதியில் துாங்கியபோது..... அவரின் மூத்த மருமகன் அவரை எழுப்பியது தெரிந்தது.
துாக்கம் கலைந்து எழுந்த போது மணி நாலேகால் ஆகியிருந்தது. அவரின் இளைய மருமகனை எழுப்பிவிட்டு . தன்னை தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.
இளைய மருமகன் தயாரானதும், இரண்டு சக்கர வாகனத்தில் மருமகன் ஓட்ட இவர் பின்னால் அமர்ந்து சென்ற போது மணி ஐந்தாகியது. அப்போது அவரின் நண்பர் கைப்பேசியல் அழைத்தார்.
“ நண்பரே.!... என்ன .. ரெடியாகி விட்டீர்களா? ................
“ கிளம்பி..வந்து கொண்டு இருக்கிறேன்... நீங்கள் வந்து விட்டீர்களா...?
“ நான். மற்றும் சில நணபர்கள் வந்து விட்டார்கள். தங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.”.
”காத்து இருங்கள், இதோ வந்து விடுகிறோம்”.
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் வண்டியை நிறுத்தவதற்க்காக மருமகன் சென்ற போது,
“ என்ன இன்ன நேரம் இங்கே.... நல்லாயிருக்கிங்களா..என்று ஒரு நண்பர். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்தவாரே.”..அவரைக் கேட்டார்.
அவருக்கு, அவர் யாரென்று சற்றென்று நிணைவுக்கு வரவில்லை. அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாதவாறு. சொட்டர் அணிந்திருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை..
அவரும் அனிச்சைசெயலாக..“ ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்வதற்க்காக வந்துள்ளேன். நான் நலம், தாங்கள் நலமா..? என்று வினவினார்.
இரண்டு சக்கர வாகனத்தில் இருந்த நண்பரும். பதிலுக்கு நல்லது. நான் நலம் என்றவிட்டு தன்வண்டியை நிநுத்தவதற்க்காக இவரிடம் விடை பெற்றுச் சென்றார்.
மருமகனுடன், நண்பர்கள் இருக்கமிடத்தை அடைந்தபோது, நண்பர்கள் இவருக்காக காத்திருந்த நண்பர்கள் எழுந்து அருகில் இருந்த தேநிர் கடையில் சூடாக தேநீர் அருந்திவிட்டு பயணமானார்கள்.
பாயின்ட் டூ பாயின்ட. பேருந்தாக இருந்ததினால் இடையில் எங்கும் நிற்காமல் சென்றது. அதனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்னரே , நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தை அடைந்தனர்.
அங்கு கூடியிருந்த தெரிந்த நண்பர்களின் நலங்களை விசாரித்தப பின். சில நேரங்களில் நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சி முடிந்தபோது மணி எட்டுக்கு மேலாகியிருந்தது. நிகழ்ச்சி அரங்கத்திலே இரவு உணவை முடித்துவிட்டு, பேருந்து பிடித்து மாட்டுத்தாவணிக்கு வந்து செர்ந்தபோது மணி பணிரெண்டுக்கு மேல் ஆகியிருந்தது.
இரண்டு சக்கர வாகனத்தில் இவரின் வீட்டுக்கு அருகில் வந்து கொண்டு இருந்த நேரத்தில் இரண்டு காவலர்களால் இவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு. வண்டிக்கான ஆவணங்களை எடுத்து இவரின் மருமகன் காட்டினார். ஒவ்வொன்றாக பார்த்து வந்தவர். வண்டியின் கலர் மாற்றபட்டிருக்கிறது. ஆர்டிஓ ஆபிஸில் பதிந்து இருக்கனுமே என்றுவிட்டு வண்டி ஓனர் யார் என்று கேட்டார்.
வண்டியின் உரிமையாளர் என்னுடைய மாமாதான். இவர்தான் என்று தன் மாமாவை சுட்டிக்காட்டினார்.
அந்தக் காவலரை பார்த்தபோது. தன்பகுதி காவல்நிலையத்தில் சிறப்பு எஸ.எஸ்.ஐயாக பனியாற்றியது அவரது நிணைவுக்கு வந்தது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒருவழியாக எல்லா ஆவணங்களையும் பார்த்துவிட்டு போக அனுமதித்தார்.
அவரின் மருமகன் வண்டியை எடுத்த போது . சிறப்பு எஸ்எஸஐக்கு கீழ் இருக்கும் காவலர்.. வண்டியின் கலரை மாற்றிவிட்டீர்கள் நிறுத்துங்கள் என்றார்.
அபபோது, . “ சார் என்னைத் தெரியாதா என்று கேட்டு ,தான் தொழில் செய்யும் அறிமுகக் கார்டைக் கொடுத்தார். வண்டியின் எப்சி. அடுத்த ஆண்டு முடியப்போகிறது. அப்பொழுது ஒரேடியாக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அதனால்தான்.....என்றார் இவர்.
“சிறப்பு எஸ்எஸ்ஐ இவரின் அறிமுகக் கார்டைப் பார்த்துவிட்டு, தெரியும் தெரியும், என்று சொல்லி போக அனுமதியளித்தார். உடன் இருந்த காவலர்க்கோ அவர்களை போகச் சொல்ல விருப்பமில்லை என்பது அவரது வார்த்தைகளளும் நடவடிக்கைகளும் தெரிவித்தன..
இதுவும் அனுபவம் தானே வலிப்போக்கரே!
பதிலளிநீக்குபலாபலன்கள் பார்த்து ஒரு பக்கமாய் என்றோ் சாய்ந்து விட்டதல்லவா நீதியின் தராசு?
த ம1
பதிலளிநீக்குஎல்லா ஊரிலுமே இப்படித்தானே நண்பரே,,,,
த,ம.1
இதுவும் என் அனுபவம்தான் திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!! காசு உள்ளவர் பக்கம்தானே நீதியின் தாராசு சாயும் என்பது தெரிந்தும் அதற்க்காக போராடாமல் இருக்க முடியாதல்லவா...
பதிலளிநீக்குதாங்கள் உலகம் சுற்றிய வாலிபர்..தாங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் திரு. கில்லர்ஜி அவர்களே!!
பதிலளிநீக்குநாய் சும்மா இருந்தாலும் ...நாயின் வால் சும்மாயிருக்காது என்றால் நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப்பு வைச்சுக் கொடுத்து விட வேண்டியதுதானே :)
பதிலளிநீக்குத ம 3
செய்யலாம்தான்..வாலை வெட்டும்போது நாய் சும்மா இருந்தால்.. தாங்கள் சொல்வது போல் சூப் போட்டு நாய்க்கு என்ன மனிதர்களுக்கே கொடுத்துவிடலாம்.
பதிலளிநீக்கு