படம்- |
கேழ்வரகிலே நெய் வடிகிறது என்றால்..கேட்கிறவனுக்கு புத்தி எங்க போச்சுன்னு. என்று.கேள்வி கேட்கிற பழமொழி ஒன்று உண்டு. இந்த பழமொழிக்கு விளக்கம் தெரியாமல் இருந்த காலம் உண்டு. அந்தப் பழமொழிக்கும் இந்த பதிவின் தலைப்புக்கும் உள்ள சம்பந்தம் இது.
மதுரை மாவட்டத்தில் 1300க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் ஆளும்கட்சி பிரமுகர்கள், ஆளும்கட்சியின் அதிகாரிகள், ஆளம்கட்சி ரவுடிகள் என அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்கிறார்கள்.
இந்த மாமூல் வசூலுக்கு கொடுக்கும் பணத்தை சரி கட்டுவதற்க்காகத்தான் ரேஷன் கடை க்கு வரும் பொது மக்களிடம். ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுடன் சம்பந்தமில்லாத வேறு பொருட்களை கூடுதலாக வாங்கச் சொல்கிறோம் என்கிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.
ரேஷன் கடைகளில் பெரும்பாண்மையாக பெண்களே அதிகமாக பணியாற்றுவதால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பயந்து மாமூல் பணத்தை கொடுத்து விடுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் கதைக்கிறார்கள்.
மாதந்தோறும் மாமூல் பணம் கட்டாயம் வேண்டும் என்று ஆளும் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், ரவுடிகள் வந்து வசூல் செய்கிறார்கள் என்றும் மாமூல் பணம் கொடுக்கவில்லை என்றால் ரேஷன் கடையிலுள்ள பொருட்களை அள்ளி சென்று விடுகிறார்களாம்..
இது பற்றி மாவட்ட ஆட்சியரிடமும் ,டிஎஸ்ஓ உள்ளிட்ட அதிகாரிடமும் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் ரேஷன் கடைக்காரர்கள் எல்லாம் மாமூல் கேட்கும் ஆளுங்கட்சி பிரமுகரைப்பற்றி ஆளுங்கட்சி அதிகாரிகளைப பற்றி, ஆளுங்கட்சி ரவுடிகளைப் பற்றி, ஆளுங்கட்சி முதல்வருக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார்களாம்.
இப்போது முன் சொன்ன பழமொழியை திரும்பவும் படித்துப் பாருங்கள். பழமொழியின் அர்த்தங்கள் புர்ர்ர்ரியும்.
பதிலளிநீக்குஎனக்கு வேணும், உனக்கு வேணும், நமக்கு வேணும்.
அனுப்பியுள்ளார்கள் என்றால் நகலை வெளியிட வேண்டியதுதானே ?அதுக்கு துணிச்சல் இல்லையோ ?
பதிலளிநீக்குத ம 1
ஆம் இப்போதுதான் புர்ர்ர்ரிகிறது.
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கரே!
த ம 2
ஆம் இப்போதுதான் புர்ர்ர்ரிகிறது.
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கரே!
த ம 2
எல்லாத்துக்கும் வேணும் கில்லர்ஜி
பதிலளிநீக்குதங்களின் விடாதுரைத்த பல கருத்துரைக்கு நன்றி! திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!
பதிலளிநீக்குதுணிச்சல் இருந்திருந்தால்..அவர்கள் ஏன்? ஆளும்கட்சி முதல்வருக்கு புகார் மனு அனுப்புகிறார்கள்..பகவான்ஜி
பதிலளிநீக்கு