திங்கள் 26 2015

அதிசியமே அசந்து போகும்“ குடியரசு 66” படப்பிடிப்பு

உலக கதாநாயகன் அண்ணன் நடிகர் ஓ..“பாமா”வும்  இந்து தேசியத்தின் தெற்காசிய கதாநாயகன் . தம்பி  நடிகர் மோடியும், புது தில்லி பிலிம் சிட்டியில் இணைந்து நடிக்கும் ”குடியரசு 66” படத்தின்  சிறப்பு படபிடிப்பில்.......

3 கி்.மீ. தூரம் கொண்ட ராஜபாதையில் 160 சிசிவி கேமராக்களும், இவற்றில் முகத்தை தெளிவாக படம் பிடிக்கக்கூடிய  18 மீட்டர் தொலைவுக்குள் படம் பிடிக்கக்கூடிய அதி நவீன கேமராக்களுடன் படப்பிடிப்பு  நடந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக டெல்லி முழுவதும் 15,000 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு  டெல்லிக்காரர்களும், அமெரிக்ககாரர்களும் கூட்டாக சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.

 “குடியரசு66” படத்தின் படப்பிடிப்பிள்போது  இரு கதாநாயகர்களுக்கும்  படத்தில் பங்கு கொள்ளும் நடிக-நடிகையர்களுக்கும் சேர்த்து பாதுகாப்புக்கு என 80.000 ஆயிரம் டெல்லி போலிசாரும், 20,000 துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆக.15,000 கேமராக்களுடனும் 1லட்சம் போலீஸ பாதுகாப்புடன் குடியரசு66 படத்தின் படபிடிப்பு  காட்சிகள் எடுக்கப்படுகின்றன.

“குடியரசு” படத்தின் படபிப்பின் போது எடுக்கப்பட்ட அரிய வகை காட்சிகள்.
படப்பிடிப்புக்கு முன்

ரசிகர்களுக்கு


படப்பிடிப்புக்கு முன்


இரு கதாநாயகர்கள் உலா வரும் “குடியரசு66”படத்தின் ஒரு காட்சி

10 கருத்துகள்:


  1. எல்லாம் சரி நண்பா, நாயகி யாரு ? வில்லன் யாருனு ? சொல்லவே இல்லை...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. இதுக்கு எவ்வளவு கோடி செலவோ ?போட்ட முதலாவது தேறுமா ?
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. பிரமாண்ட பட இயக்குநர் சங்கர் படத்தினையே
    மிஞ்சி விடுவார்கள் போல் உள்ளது. ஏகப் பட்ட
    எதிர்பார்ப்புகளோடு எடுக்கப் பட்ட புகைப் படங்கள்
    ஆஹா ரகம் தோழரே!
    குடியரசு ரீலீஸ் சூப்பெர் ஹிட் படங்கள்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  4. ம்... ம்...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான ரசனை. தங்கள் பாணி ஒருவகையில் ஏற்றுக்கொள்ளவேண்டியதே.

    பதிலளிநீக்கு
  6. கதாநாயகர்களே வில்லனாகவும்..வில்லன்களே கதாநாயகர்களாகவும் நடிப்பார்கள் .... கதாநாயகிக்கு இதில் முக்கிய பாத்திரம் இல்லாததால் கதாநாயகிகள் ரசிகர்களின் கனவில் மட்டுமே வருவதாக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்..நண்பா.

    பதிலளிநீக்கு
  7. போட்ட முதல் தேறாமையா... இவ்வளவு பில்டப்புல படமெடுப்பார்கள். அப்படியும் தேறவில்லை என்றால். இருக்கவே இருக்கிறார்கள் நாட்டுப்பற்றுள்ள குடிமக்கள்கள்....

    பதிலளிநீக்கு
  8. இந்தப் படத்துக்கு முன்னாடி சங்கரெல்லாம் ரெம்ப தூசு மாதிரி....

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே..

    பதிலளிநீக்கு
  10. ஏதோ...எனது சிற்றறிவுக்கு தோன்றிய ரசனை..ஐயா.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....