சனி 10 2015

மூனு என்ன..மூவாயிரம் இந்துக் குழந்தைகளை உற்பத்தி பன்னிடலாம்..சாமி

rss-wants-4-babies
படம்- வினவு

ஏஞ்....... சாமி  ஒரு பிள்ளைக்கே கஞ்சி தண்ணி ஊத்த வக்கு இல்லாம தவிக்கும்போது....  வீட்டு ஆம்பளையான் எல்லாம்  அரசு சாராயக்கடையே கதின்னு கிடக்கும்போது இன்னும்  மூனு கொழந்த சாத்தியமா..சாமி


 சாமி உத்தரவுபடி    வரிசையாக அஞ்சு பொட்டையா  பிறந்து போச்சுன்னு தூக்கி குப்ப தொட்டில போட்டுட்டு திரும்பி பார்க்கமா போகுதுக..... இந்த பாழாய் போன போலீசு வேற , குழந்தைய தூக்கி போட்டுவிட்டு போனவங்கள கண்டு பிடிச்சு அவுககிட்டயே ஒப்படைச்சிருது.


பொட்ட புள்ள வேணா... ஆம்பிள புள்ள தான் வேணுமுன்னு என்னனெனமோ செய்யுறாங்கே...சாமி.

 ஏஞ்.... சாமி......  ஒங்க சாமி தானே நாலு வர்ணத்தோட  இம்மாம் பெரிய ஒலகத்த படைச்சதுன்னு மூச்சுக்கு மூவாயிரம் தடவை சொன்னீங்க......... அந்தச் சாமி தானே  இந்த மகா..... பாரதத்தை படச்சது.. அந்தச் சாமி மூலமா....

பாண்டுவின் மனைவி குந்தி தேவிக்கு, தர்மத்தின் தலைவன், வாயு, இந்திரன் மூலமா...மூனு பிறந்தது மாதிரி  இந்தக் காலத்துக்கு ஏத்தமாதி மூனு என்ன முன்னூறு  இந்து குழந்தைகள  படைக்க முடியாதங்களா..??.சாமி......

 வியாசர் வழி காட்டல்படி காந்தாரிக்கு   நூறு  ஆண்கள்   பிறந்தது மாதிரி  வியாசரிடம் வேண்டி  மூனு என்ன ...மூவாயிரம்  இந்துக்கள உற்ற்பத்தி பண்ணிடலாமே..... சாமி...... நாட்டின் வளர்ச்சியோட..இந்துக்களின் வளர்ச்சியையும் காட்டிபுடலாம்  சாமீ,,..........


பிரதமரு மோடியே... ஒரு ஆஸ்பத்திரி திறப்பு விழாவுல.... பிள்ளைாயருக்கு யானைத் தலையை மாட்டி அப்பவே  மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றி வாகை சூடியிருக்காங்கன்னு பெருமையா  சொல்லியிருக்காரு...சாமி.......

நாமதான் செவ்............வாயில கழிப்பறை கட்டுவதற்கு ராக்கெட்டுலாம் விட்டுருக்கோமே..சாமி..... பிறகென்ன சாமீ

  மனுசங்க  மூலமா... ஏற்றுமதி  இறக்குமதி பன்னிக்கிட்டு......

 சாக் ஷி மகராஜ்-படம்-http://indrayavanam.blogspot.in/


என்னங்க...சாமி.... பேசா...ம......... பார்க்கிறீங்க..... நான் சொல்றது......... சரிதானே சாமீ



...


9 கருத்துகள்:


  1. சரிதான் சாமீமீமீமீமீமீ..
    தமிழ் மணம் 1

    நண்பரே எனக்கு ஓட்டுப்பெட்டி வைக்கச்சொன்னீங்க..... மறந்துட்டீயலே.....

    பதிலளிநீக்கு
  2. வேலிக்கு ஓணான் சாட்சி ,இந்துத்துவா
    கொள்கையேbjp கொள்கை என்பதற்கு சாக் ஷி உளறலே சாட்சி :)

    பதிலளிநீக்கு

  3. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு

  4. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  5. நான் மறக்கவில்லை நண்பரே!!..“எங்கோ ஓரிடத்தில் கோளாறு”....நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. நேரடி சாட்சி இருந்துமே... குற்றவாளிகளை தண்டிக்க முடியாதபோது.. சாக் ஷியை என்ன செய்துவிடமுடியும். நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன். நண்பரே.....

    பதிலளிநீக்கு
  8. சரி. வெடித்து பெருகும் ஜன தொகை பெருக்கம் நாட்டின் மிக பெரிய பிரச்சனையாக இருக்கும் போது எந்த மதவாதிகளின் பேச்சை கேட்டு அதிக பிள்ளை பெற்று கொள்ள கூடாது.

    பதிலளிநீக்கு
  9. மதவாதிகளின் பேச்சைதானே பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள். திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....