புதன் 14 2015

காவியும்...மஞ்சளும் கூறும் புத்தாண்டு ...

Enact Law Check Honour Killing Says Ramagopalan
காவித்துறவி.
திமுக ஆட்சியில் புத்தாண்டு தினம் மாற்றப்பட்டதை இந்து தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்து தமிழ்ர்கள் கொண்டாடும் பண்புகளை.விழாக்களை கேலி செய்வதம், மேற்கத்திய  நாகரித்தை புகுத்துவதும் திமுகவின் தந்திரமாகும்

அதை செயல்படுத்தவே கலைஞர் தொலைக்காட்சியில் இந்துக்களின் பண்டிகைகளை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்றும். மற்ற பண்டிகைகளை பெயர் குறிப்பிட்டும் வெளிப் படுத்துகிறார்கள்.

கருணாநிதியின் கொள்கையை அவரது குடும்பத்தினரும், கட்சியினருமே ஏற்ப்பதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இனியாவது இந்து மத உணர்வுகளுக்கு கருணாநிதி மதிப்பளிக்க வேண்டும்.
                                                            


மஞ்சல் துண்டு
அ.தி.மு.க.வின் தலைவி 2011ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்ககு மூடுவிழா நடத்தப்பட்டது போல.. தமிழின அடையாளத்தை காட்டும்  தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக  அறிவித்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்த ஏற்பாடுகளை அவசரமாக அவசரமாக செய்தார்

அதிமுக தலைவியின் அறிவிப்பு வந்த நேரத்திலே மிகச் சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான் ஐராதவதம் மகாதேவன், “ இன்றைய பஞ்சாய்கங்களை? வான நூல்களை, பருவங்களின் சுழற்சிகளின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில் அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவை புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்டார்.

போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவை நடை முறைப்படுத்த, திமுக ஆட்சியிலே நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக ஜெயலலிதா ஆட்சியிலே மாற்றப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே,“ தரணியாண்ட தமிழருக்கு தை  முதல் தமிழ்புத்தாண்டு” என்று பாடியதையும் நிணைவு கூற விரும்புகிறேன். இந்த வரலாற்று உண்மையை மறைக்கத்தான் இன்றைக்கு ஆட்சியாளும் ஆட்சியாளர்கள் பெரு முயற்சி எடுத்து சித்திரைத் திங்களை தமிழ் ஆண்டின் தொடக்கம் என்று மாற்றி ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த மரியாதையும் கொடுத்தாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையை புரிந்து கொண்டு, தைத் திங்கள் முதல் நாளைதான் தமிழர்களின் திருநாள், தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடுகிறார்கள்.

எனவே, தைத்திருநாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாக சீரும் சிறப்புமாக கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.“ தை முதல்நாளே, தமிழர் புத்தாண்டு திருநாள்!”




13 கருத்துகள்:


  1. இவங்கே சும்மாவே இருக்க மாட்டாங்களா ?பாஸூ
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. அவுக சும்மா...இருந்தா..அவுக பொழப்பு ஓடாது பாஸூ...!!!

    பதிலளிநீக்கு
  3. நல்லாத்தான்யா பரப்புறாங்க கொள்கைகளை !

    பதிலளிநீக்கு
  4. பொங்கல் புத்தாண்டை ஒட்டி சினிமா தியெட்டர் எல்லாம் ஐந்து காட்சி ஓட்டும்போது.......

    பதிலளிநீக்கு

  5. அப்புறம்...

    எது அறிவு...? - மனிதனுக்கு......!!!

    நாளை

    வரலாம்...!!!

    பதிலளிநீக்கு
  6. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. எது அறிவு...? - மனிதனுக்கு......!!!

    நாளை

    வரலாம்...!!!---- நல்லது .தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  9. புத்தாண்டு தகவலுக்கு நன்றி.
    ஏன் எல்லோரும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்றாங்க புத்தாண்டு என்று வாழ்த்து தெரிவிக்க விரும்பல்ல?
    வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையை புரிந்து கொண்டுதைத் திருநாளை புத்தாண்டாக கொண்டாடுவாதக சொன்னீர்கள் பிரான்ஸ் தமிழர்கள் அப்படி செய்வதாக நானும் அறிந்திருக்கிறேன். வேறு நாடுகள் தெரியாது. இலங்கை தமிழர்களும் அவர்களது சகோக்கள் சிங்கலவர்களும் புத்தாண்டை சித்திரையில் தான் கொண்டாடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துரையில் தெரிவித்த தகவலுக்கும் நன்றி!! திரு் வேக நரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....