பக்கங்கள்

Tuesday, February 17, 2015

டெங்கு கொசுவின் சாதி பற்றிய ஒரு ஆய்வு...

கொசு
படம்-http://eluthu.com/


டெங்குவின் பிடியில் சிக்கி பத்துநாளில் ஒன்பது பேர் உயிரிழப்பு” என்று செய்தியை பற்றி படித்துக் கொண்டு இருக்கும்போதே  அருகில் இருந்த இருவருக்கு  கடவுள்,சாதியை படைத்தது  பற்றிய பேச்சு ஆரம்பித்தது.

இருவரில் ஒருவர் சாதி பிறந்த வரலாற்றைச் சொன்னார். ஆதியில் கடவுள் தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன், மார்பில் பிறந்தவன் சத்ரியன். தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் ..இந்த நாலு வர்ண சாதியை படைத்தவர் உலக முதற்க்கடவுளான கிருஷ்ண பரமாத்மா என்றார்.  கூடவே இந்த நாலு சாதிக்கு அடுத்ததாக பிறக்க  இடமில்லாததால் தரையில் பிறந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி முடித்தார்.

 முதலாவது நபர் சொல்லி முடிக்கும்வரை கேட்டுக் கொண்டு இரண்டாவது நபர். தலையை நிமிர்த்தி அங்கும்மிங்கும் பார்த்துவிட்டு அருகில்  சிறு பிள்ளை கள் யாருமில்லைஎன்பதை உறுதிப்படுத்திவிட்டு மெதுவான குரலில் சொன்னார்.

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நாலு வர்ண சாதிக்காரன்களை விட தரையில் பிறந்தவன்தான் உண்மையிலேயே.. மனிதர்களின்  சூத்துக்கு. யோனிக்கும் பிறந்தவன்னு  எனக்கு தெரியுது..   

முதலாவது நபர். சற்று அதிர்ச்சியடைந்தவராக.... நாலு வர்ண சாதிக்காரர்கள் கடவுளால்  படைக்கப்பட்டவர்களாப்பா....

அதைத்தான் நானும் சொல்கிறேன். நாலு வர்ணத்து சாதிக்காரங்களெல்லாம் கிருஷ்ணபரமாத்மாவால் படைக்கப்பட்டவர்கள். பொறக்க இடமில்லாமல் தரையில் பிறந்ததாக சொன்னீர்களே அவர்கள் . மனித சூத்துக்கும் யொனிக்கும்  ஏற்ப்பட்ட இணை சேர்க்கையில்பெண்னின் வயிற்றிலிருந்து   தொடங்கி  யோனி  வெளியே வந்து  தொபக்கடின்னு தரையில் விழுந்தவர்கள். அதாவது நீங்கள் சொன்ன படி தரையில் பிற்ந்த சாதிக்காரர்கள்.

என்னப்பா.... கொஞ்சம்கூட நாகரிகம் தெரியாமல் இப்படி பச்சையாக சொல்ற...

இப்படி பச்சையா சொன்னாத்தானெ எனக்கும்...நீங்க என்ன சொல்ற விபரம் கிளியரா புரியும்.... அதுக்குத்தான் இப்படிச் சொன்னேன். 

இருவரும் அமைதியாக இருந்த இடைவெளியில் செய்தியை வாசித்துக் கொண்டு இருந்தவர் சொன்னார்.

நீங்க என்னாதான்  விஞ்ஞான விளக்கம் சொன்னாலும். இயற்கை விளக்கம் சொன்னாலும். சாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது.  பச்சையாக விளக்கம் சொன்னவர் தன் கையில் அமர்ந்திருந்த கொசுவை “டப்“பென்று அடித்ததைக் கண்டும்.  “ இப்படி கடித்துவிட்டு கண்இமைக்கும் நேரத்தில் பறந்தோடும்  கொசுவையும் ஒழிக்க முடியாது என்றார்.

நாலு வர்ண சாதியை படைக்கப்பட்டதாக சொன்னவர் “உண்மைதான் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட சாதியை மனிதனால் ஒழிக்க முடியாதுசார். அது மாதிரி, கொசுவுக்கு எவ்வளவுதான் கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடித்தாலும் கொசுவை ஒழிக்க முடியலையே சார்.”

 மனிதர்களை நான்கு வர்ண சாதிகளாக படச்ச கிருஷ்ண பரமாத்மாதான்  இந்த டெங்கு கொசுவையும் படச்சு இருப்பாரு.... என்று விட்டு,  நாலு வர்ணத்த சொன்னவரிடம் டெங்கு கொசு படைக்கப்பட்டதா??..அல்லது பிறப்பிக்கப்பட்டதா?? என்று சந்தேகம் கேட்டார் பச்சையாக பேசியவர்.

படைக்கப்பட்டாலும் பிறப்பிக்கப்பட்டாலும் ரெண்டும் ஒன்றுதானே என்றார் செய்தி படித்துக் கொண்டு இருந்தவர்.

அப்படி இல்ல சார், படைக்கப்பட்டதென்றால்.அந்தமும் ஆதியுமில்லாமல் கிருஷ்ண பரமாத்மாவின்  அருளால் ஒரு நொடியில் உருவாணவைகள்தான் படைக்கப்பட்டவை, மனித இனத்தின் சூத்தும் யோனியும் இணைந்துஅதன் மூலம் அனு அனுவாக உருவாகி  மாதங்கள் கடந்து தரையில் வந்து விழுவது பிறப்பிக்கப்பட்டவை.....

ஓ....நீங்க...அந்த..அர்த்தத்தில் சொல்றிங்களா..???? என்றவர். நீங்க.. சொல்வதின்படி பார்த்தால் டெங்கு கொசுவும் கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப் பட்டது.  டெங்கு கொசுவும் நாலு வர்ண சாதியில்தான் வருகிறது.

என்ன கொசு படைக்கபட்டதா..?  குப்பைகளிலும் சாக்கடைகளிலும் அல்லவா உற்பத்தி ஆகிறது. என்றார் கிருஷ்ணனின் நாலு வர்ணத்தை சொன்னவர்.

அப்படியா.... தாங்கள் எதைக் கொண்டு கொசு  கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப்பட்டது என்று சொல்கிறிர்கள் என்று கேட்டார் பச்சையாக பேசியவர்..


டெங்கு கொசு எந்தெந்த வழிகளில்  பரமாத்மாவால் படைக்கப்படுகிறது  என்றால் நாலு வர்ண சாதிக்காரர்களை தலை,மார்பு, தொடை,.காலு  எ என்ற இடங்களில் படைத்தது மாதிரி சுத்தமான  ,சேமித்துள்ள, தேங்கியள்ள  தண்ணீர் நிலைகளில் இருந்தும், டப்பா,.டயரு, சிரட்டை,.குப்பைக போன்ற இடங்களில் முட்டையாக ஆசிர்வதிக்கப்பட்டு, அதிலிருந்து அக்னி பாகவானின் அனுக்கிரக பார்வையால் கொசுவாக, டெங்கு கொசுவாக படைக்கப்படுகிறது. டெங்கு கொசு படைக்கப்பட்டபின் நாலு வர்ண சாதிக்காரர்களைப்போல் சாதி வெறி அதாவது கொலை வெறி கொண்டு  தரையில் பிறந்தவர்களையும்,   நாலு வர்ணத்திலே உள்ள கீழ்நிலையுள்ள  உள்ளவர்களையும் கடித்து சின்னாபின்னப் படுத்துகிறது.

இதனால்தான் முன்னபே சொன்னதுபோல  கிருஷ்ண பரமாத்மாவால் படைக்கப்பட்ட நாலு வர்ண சாதியையும் ஒழிக்கமுடியாது. அதே கிருஷ்ணபரமாத்மாவால் புதிதாக படைக்கப்பட்ட டெங்கு கொசுவையும் ஒழிக்க முடியாது என்று..

இப்படி  செய்தியை படித்துக் கொண்டு இருந்தவர் சொன்னதைக் கேட்டதும் முதலாவது நபர். அமைதியானார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது நபரும்  பேச்சை நிறுத்திக் கொண்டார்..இவர்கள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு மூன்றாவது நபரும் செய்தி பேப்பரை விட்ட இடத்திலிருந்து அமைதியாக படிக்க ஆரம்பித்தார்.

(கடைசியாக டெங்கு கொசு என்ன  சாதி என்று கண்டுபிடிக்கப்பட்டது.)17 comments :


 1. என்ன நண்பரே இப்படிப்போட்டு தாக்குறீங்க....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. ஏடிஸ் கொசு ,மலேரியா கொசு ஆகியவை உயர்ந்த சாதியா ,தாழ்ந்த சாதியான்னு என்றும் ஆராய்ச்சி செய்யலாமே :)
  த ம 3

  ReplyDelete
 3. தோழரே!
  நான்கு வகை கொசுக்களின் பெயர்களை கடைசி வரையில் சொல்லாதது ஏன்?
  கொசுவின் சமூகம் தங்களை கடித்தே................ விடும் என்ற பயமா என்ன?
  கொசுவை ஒழிக்க மருந்து கண்டு பிடிக்கின்றோம்!
  சாதி செழிக்க இட ஒதுக்கீடு தருகிறோம்!
  என்ன விந்தையான வித்தியாசம் தோழரே?

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 4. அண்ணே ! இதெல்லாம் கரக்டு . வைசியன் அப்படிங்றது யாரு ???

  ReplyDelete
 5. டெங்கு கொசுவுமா?

  ReplyDelete
 6. விபரம் கிளியரா புரியுது ஜி...

  ReplyDelete
 7. உங்களிடம் பேசலாமா...? 9944345233

  ReplyDelete
 8. ஏரியா..கொசுக்கடி தாங்க முடியல... அதான் பதிலுக்கு இப்படியாச்சும்...தாக்குவோமே..ன்னுதான் நண்பரே...!!

  ReplyDelete
 9. ஏடிஸ்சும் மலேரியா கொசும்-- ரெண்டுமே... நாலு வர்ண சாதியில் அடங்கிய ,ஐக்கியமான ஒரே குலமாகிவிட்டதால்..ஆராய்ச்சி தவிர்க்கப்பட்டுள்ளது. ஜீ

  ReplyDelete
 10. மீண்டும் கடி வாங்க தகிரியம் இல்லாததால நாலுவகை கொசுக்களின் பெயர்களைச் சொல்லவில்லை திரு.யாதவன் நம்பி அவர்களே!!

  ReplyDelete
 11. வைசியன் என்பவர் பலவகை வியாபாரி வகையைச்சேர்ந்தவருன்னு சொன்னாங்க...

  ReplyDelete
 12. தூணிலும் துரும்பிலும் இருக்கும்போது டெங்கு கொசுவுல இல்லாமா இருக்குமா??..ஐயா..!!!

  ReplyDelete
 13. தங்களுக்கு புரிந்தது.புரியவேண்டியவுகளுக்கு புரிய மாட்டேன்கிதே..திரு. பொன் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 14. தாராளமாக பேசலாம். தங்களின் ஓய்வு நேரத்தை தெரிவித்தால் ..நானே தங்களிடம் பேசுகிறேன் தலைவரே!!!

  ReplyDelete
 15. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 16. //yathavan nambi சொன்னது…
  கொசுவை ஒழிக்க மருந்து கண்டு பிடிக்கின்றோம்!
  சாதி செழிக்க இட ஒதுக்கீடு தருகிறோம்!//

  முற்றிலும் உண்மை.
  ஜாதி வேறுபாடுகள் செழித்து வளர்ந்து ஓங்கும்.

  ReplyDelete
 17. ////yathavan nambi சொன்னது…
  கொசுவை ஒழிக்க மருந்து கண்டு பிடிக்கின்றோம்!
  சாதி செழிக்க இட ஒதுக்கீடு தருகிறோம்!// கூடவே

  --வரண்டு போகாமல் இருக்க செழித்து வளர்ந்து ஓங்கும்(டாஸ்மாக்) தண்ணியும் தறும்போது செழித்து வளர்ந்து ஓங்குத்தானே செய்யும் திரு. வேகநரி அவர்களே!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!