பக்கங்கள்

Monday, February 16, 2015

சிவன் ராத்திரி விரதம் தோன்றியகதை,
எங்க ஊரு சிவாவுக்கு
தை மாசி யில் உண்ட
உணவு செரிக்காமல்
வயிற்று வலி,வயிற்று
பொருமல் வந்தது..

செமியாக் குணத்தால்
சீரணகோளாறால் வந்த
வலியால் துடித்தான்

இதற்கு பரிகாரம் காண
பாட்டி வீட்டிற்கு சென்று
மருந்து கேட்டபோது
பாட்டி சொன்னாள்


இரவில் விரதமிரு
உண்ணா விரதமிரு
தூக்கம் வராது  அந்த
நேரத்தில் விழித்திரு
காலையில் பலன்
தெரியும் என்றாள்

பாட்டி வைத்தியத்தால்
சிவன் ராத்திரியில்
முழித்து உண்ணா
 விரதமிருந்து குனம்
கண்டான்.

அன்று முதல் சிவன்
ராத்திரி விரதமாயிற்று..
16 comments :


 1. அடடே இப்படித்தானா,,,
  இது தெரியாமல் நம்ம அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுகிறார்களே...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. நம்ம அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுவதற்கே தவழ்ந்து பிறந்து வளர்ந்து வந்தவர்களேச்சே....

  ReplyDelete
 3. mrராதா பாணியில் இது நீங்கள் விடும் கதையா :)
  த ம 2

  ReplyDelete
 4. சிவ ராத்திரிக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்கா !?

  இது தெரியாம போயிடுச்சே !!

  தம+

  ReplyDelete
 5. சிவ ராத்திரிக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்கா !?

  இது தெரியாம போயிடுச்சே !!

  தம+

  ReplyDelete
 6. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 7. அடடா...! இது தெரியாமப் போச்சே...!

  ReplyDelete
 8. நேற்று போட்ட கமெண்ட்டை எந்த காக்கா தூக்கிட்டு போச்சு ,அந்த சிவாவுக்குதான் வெளிச்சம் :)
  M R ராதாவின் பாணியில் நீங்கள் விட்ட கதை அருமை !
  த ம +1

  ReplyDelete
 9. நான்விடும் கதையல்ல ஜி.. பாட்டி சொன்ன வைத்தியம் ஜி

  ReplyDelete
 10. இனி தெரிஞ்சுகிக்க... திரு. மேக்னேஷ் அவர்களே!!!

  ReplyDelete
 11. நல்லது சிறந்த பதிவை தொடருகிறேன்.திரு. யாழ் பாவணன் அவர்களே!!!

  ReplyDelete
 12. அடுத்து வருவதை தெரிந்து கொள்வோம் திரு. பொன் தனபாலன் அவர்களே!!!

  ReplyDelete
 13. நல்ல தகவல் சகோ.... என் பதிவுகளை தமிழ்மணத்திரட்டியில் இணைக்க இயலவில்லை ... கொஞ்சம் உதவவும்.. என் தளம் : www.naveensite.blogspot.com

  ReplyDelete
 14. நரி இடம் போனால் என்ன? வலம் வந்தால்தான் என்ன?
  போகும் இடம் தெரிந்தாலே போதும் தோழரே!
  உண்ணவிரத பந்தலில் உட்கார ஆள் பிடிக்கும் முயற்சி
  வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  (எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்கள் நண்பரே!)

  ReplyDelete
 15. சகோ நவின் அவர்களே! தமிழ்மணத்திற்கு சென்று வலது பக்கத்தில் உள்ள “பதிவை இணைக்க” என்ற பகுதியை படித்து பார்க்கவும் ..

  ReplyDelete
 16. உண்ணாவிரத பந்தலில் உட்காருவதற்கும் விலை உண்டு திரு. புதுவை வேலு அவர்களே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com