வெள்ளி 20 2015

கடவுள் படும் பா..டு..!!!!!!!.


நானே உன்னை படைக்காத போது
ஏன் மனிடா என்னை நீ படைத்தாய்?
மிக எளிதாய் படைத்துவிட்டாய்!
வகை வகையாய் வணங்கியும் விட்டாய்!
புல்லுக்கா?புல்லை திங்காவிடில் சாகும் மானுக்கா?
மானுக்கா மானை திங்காவிடில் சாகும் புலிக்கா?
அல்லது எல்லாவற்றையும் திங்கும் மனிதனுக்கா?
அல்லது அவனை திங்கும் நுண்ணுயிரிகளுக்கா?
சொல்!யாருக்கு நீதிவழங்குவாய்?
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
சுனாமி வரும் போது கண்டுக்காம இருந்த கபோதி!
பூகம்பம் வரும்போது பூ பறிக்கபோன பன்னாடை!
பஞ்சம் வரும்போது பாராமுகம் காட்டுமன பரதேசி!
வெள்ளம் வரும்போது வெட்டியாய் நின்ற வெண்ணெய்!
இப்படி வண்ண்டிவண்டியாய் திட்டை கேட்டு
‪#‎கடவுளாகஇருந்துபார்‬ என் கஷ்ட்டம் தெரியும்?
எல்லாம் எனக்கு தெரியும் என்று எளிதாக சொல்லிவிட்டாய்
”பை”யின் துல்லிய மதிப்பு கேட்கிறான்?
வாணம் எங்கு முடிகிறது என கேட்கிறான்?
முட்டையா கோழியா எது முதலில் என கேட்கிறான்?
பிறக்கும் முன்பு உயிர் எங்கே இருந்தது?
ஆதாமுக்கு ஏன் தொப்புள்?
என் மனைவிகளுக்கு ஜாக்கெட்டு தைத்த டைலர் யார்?
இறுதியாக என் இனிஷியல் என்ன என்பதுவரை?
விழிபிதுங்கி பேதியாவது எனக்கு மட்டும்தான் தெரியும்!
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
போலியாய் என் வேஷமிட்ட மானிடர்கள் கூட
ஆண்டு நூறு வாழாமல் ஓடிவந்து ஒப்பரிவைக்கின்றனர்.
கண் முன்னே புரோகிதன் கருவறையில் கலவி செய்ய
புலன்களை அடக்கி அசையா அஃறினை கல்லாய் நான்
என் பெயர் சொல்லி சகமனிதன் கழுத்தை அறுக்கும்போது
கைகள் இரண்டும் கட்டபட்ட்ட்ட கைதியாய் நான்
ஏன் என்னை கைவிட்டீர்:என்ற குழந்தையின் இறுதிமுச்சுக்கு
முந்திய பார்வையை நான் சந்திக்கும் கனம்
கூணி குறுகி வெந்து சாகிறேன்.
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
எல்லாம் படைத்தவன் என்று சொல்லிக்கொண்டே.....
சந்தணம்ம் நெய் இரத்தம் சதை என வகையாய் லஞ்சம் கொடுத்து
செய்யபோகிற பாவத்தின் மண்ணிப்புக்கு
முன்பதிவு செய்வதை தடுக்க இயலாமல் பிண்டமாய் நிற்பதும்....
பிரித்து, அடக்கி ,சுரண்டி .கெடுத்து,கொழுத்து திரியும்
கூட்டத்தின் சிறையில் கையறு நிலையில் நான் இருபதும்.
ஆன்மா இல்லாத உலகில் ஆன்மாவாக ஆசைப்பட்டு
அஞ்சுக்கும் பத்துக்கும் சொல்லும் சுவாஹாவுக்கு கட்டுபட்டு
சதுர்த்தி முடிந்தவுடன் கடற்கரையில் மிதிபட்டு
கடவுளாக இருந்துபார் என் கஷ்ட்டம் தெரியும்?
கடவுளாக இல்லை என்பது உண்மை அல்ல
கடவுளாக இருக்க முடியாது என்பதுதான் உண்மை!
கடவுளாக இருப்பது முட்டைக்கு முடிபுடுங்குவது
கடவுளாக இருந்துபார் அப்படி இருக்கமுடியாது என்று புரியும்?
— Ilangovan Balakrishnan உடன்

11 கருத்துகள்:

  1. என்ன நண்பரே தங்களிடமிருந்து புதுமையான தத்துவம் அருமை.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. தளம் புதுமையாக மாறிவிட்டதற்கு அறிகுறியாக...இந்த புதுமையான தத்துவம் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. அப்படினா கடவுள் இருக்காரா ? இல்லையா அண்ணா ?

    தம+

    பதிலளிநீக்கு
  4. எனது அனுபவ சிற்றறிவுக்கு தெரிந்தவரை... இல்லாத ஒன்றை இருப்பதாக ஏமாற்றுகிறார்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. இந்த கண்றாவிகளை எல்லாம் சகித்துக் கொண்டு ஒரு கடவுள் இருக்க முடியாதுதான் :)
    த ம +3

    பதிலளிநீக்கு
  6. பித்தலாட்டங்கள் இருக்கும் வரை - மிகவும் சிரமம் தான்...

    பதிலளிநீக்கு
  7. புதிய வடிவில் தளத்தைக் கண்டேன். மாறுபாடான சிந்தையிலான பதிவையும் கண்டேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கண்றாவிகளை எல்லாம் சகித்து கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது..ஜி

    பதிலளிநீக்கு
  9. இந்த பித்தலாட்டங்கள் இருக்கும்வரை கடவுள் இருப்பது சிரமம் என்றா..சொல்கிறீர்கள் திரு் பொன் தனபாலன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  10. புதிய வடிவில் தளத்தை மறுசீரமைத்த புகழும் பெருமையும் வலை சித்தரான திரு. பொன்தனபாலன் அவர்களேயே சேரும்.

    பதிலளிநீக்கு
  11. எனக்கென்னவோ கடவுளாயிருந்தா இன்பமாயிருக்கும் போல் தெரிகிறது.
    கடவுள் "உண்டாகுக" என்றவுடன் உற்பத்தி பெருகுவதும் "போ" என்றவுடன் வந்த சுனாமி திரும்பி போய் இல்லாமலாகி விடுவதும் ரொம்ப நல்லாக தானே இருக்கிறது.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....