பக்கங்கள்

Sunday, February 22, 2015

சாதி வெறியர்களின் பரந்த உள்ளம்.....படம்-ta-in.facebook.com
ஊருக்கே குடி தண்ணீர்
இல்லாது போனாலும்
அவன்கள் பொதுக்
கிணற்றில் தண்ணீர்
எடுக்கக்கூடாது.....

எங்களைக் கருவறைக்குள்
நுழைய அனுமதிக்கா
விட்டாலும் பரவாயில்லை
அவன்களை கோயிலுக்குள்
விடக்கூடாது...........

எல்லோரும் கஞ்சிக்கு
இல்லாமல் செத்தாலும்
சரி. அவன்களை தனியாகத்
தான் புதைக்க வேண்டும்

இந்த நாடே  மறு  காலனியாக
ஆனாலும் சரி, எங்கள்
ஊரில் ஒரு காலனி(சேரி)
இருக்க வேண்டும்

14 comments :

 1. ஸூப்பர், ஸூப்பர் நண்பரே இதைப்போலவே வெளக்கமாத்தாலேயே... சாத்துங்க...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. எமக்கு முன்னாடியே ஏராளமானோர்கள் சாத்து சாத்துன்னு சாத்தியும் மனிதனாக மாறதவுக..இனிமேல்தானா மாறப்போறாவுக......

  ReplyDelete
 3. #எங்களைக் கருவறைக்குள்
  நுழைய அனுமதிக்கா
  விட்டாலும் பரவாயில்லை
  அவன்களை கோயிலுக்குள்
  விடக்கூடாது...........#
  இப்படி சண்டை வெளியே நடக்கவிட்டு ,இன்னொருவன் கருவறைக்குள் எல்லா ஜோலியும் பார்த்துக் கிட்டிருக்கான் ,எல்லாவற்றையும் கல்லு சிலையும் பார்த்துகிட்டேதானே இருக்கு ?
  த ம 2

  ReplyDelete
 4. கடவள் இல்லை அது கல்லு சிலை ன்னு மற்றவர்களைவிட கருவறைக்குள் இருக்கிறவனுக்கு நல்லா தெரிந்து இருக்கிற காரணத்தால்தான் எல்லா ஜோலியும் அங்கே பயமில்லாமல் பதட்டமில்லாமல் நடக்கிறது.

  ReplyDelete
 5. நோண்ட பரம்பர, நொங்கு பரம்பர எல்லாம் லைன் கட்டி வாங்கப்பா...

  ReplyDelete
 6. காலனியில் ஒரு காலனி. வேதனையை சொற்களாகப் பதிந்து யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 7. மாறவே மறுக்கிறார்கள் தான்.

  ReplyDelete
 8. சாதி வெறியர்களுக்கு உள்ளம் என்பது வேறு இருக்கிறதா...?

  ReplyDelete
 9. சாதி வெறியர்களுக்கு சாட்டை அடி

  ReplyDelete
 10. எல்லா பரம்பரையும்...ஏற்கனவே லைன் கட்டிதான் இருக்காங்க திரு.மலரின் நினைவுகள் அவர்களே..!!

  ReplyDelete
 11. காலனி வேதனை தீராத வேதனை ...ஐயா..!!

  ReplyDelete
 12. இந்த சமூகம் மாறாதவரை அவர்கள் மாற வாய்ப்பு இல்லை. திரு. வேக நரி அவர்களே!!!

  ReplyDelete
 13. சாதி வெறியர்களின் உள்ளம்... அவர்கள் .பிறந்தலிருந்து வாழையடி வாழையாக வேறு மாதிரியாதகத்தான் வளர்ந்து, வளர்க்கப்பட்டு வருகிறது. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

  ReplyDelete
 14. எத்தனை சாட்டையடி கொடுத்தாலும் சாதி வெறியர்கள் உதிர்த்து விடுகிறார்களே! திரு. பரிதி முத்துராஜன் அவர்களே!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!