பக்கங்கள்

Monday, February 09, 2015

பாவம் போக..கோயில் கோபுரம் கட்டு,அன்னதானம் போடு..

20150209_114651.jpg ஐக் காண்பிக்கிறது
படம்-  பாவம் போக கோயில் கோபுரம் கட்டு.
தாழ்ந்த ,ஒதுக்கப்பட்ட
சாதியில் பிறந்தவன்
அண்ணல் அம்பேத்கர்
தந்தை பெரியார்களின்
உதவியால் மாநகராட்சி
கடைநிலை ஊழியராக
பணி சேர்ந்து படிப்படியாக
வருவாய் அதிகாரியாக
உயர்ந்து இன்னுமொரு
ஆதிக்கச்சாதியக்காரனாய்
வளர்ந்தான்..............

டோல்கேட் வசூல்  வருவாய்
பொறுப்பு அதிகாரியா பணி
ஆற்றியதில் ரிங்ரோட்டுக்
கடன் முடிந்தும் வசூல்
செய்த பணத்தில்  மேல் நிலை
அதிகாரிக்கும் கீழ்நிலை அதிகாரிக்கும்
 பங்கு பணம் போக ஊழல் பணம்
அவனிடம் அடுக்அடுக்காக சேர்ந்தது.

அந்தப் பணத்தைக் கொண்டு
தந்தையின் பூர்வீக இடத்தோடு
புறம்போக்கு இடத்தையும் வளைத்து
போட்டு எண்ணி முப்பதே நாளில்
வீட்டைக்கட்டினான்...........

கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு
 சேர்த்து வைத்த பணத்திற்கு வருமான
கணக்கு காட்டியபோதும் டோல்கேட்டில்
வசூலித்த ஊழல் பணம் மூட்டையாக
சேர்ந்து போனது..........

தணிக்கை ரிஷிகள் வழி காட்டினார்கள்
ஊழல் பணத்தால் வந்த பாவம்
தீர.பேருக்கு கணக்கு காட்ட
புதிதாய் கட்டிய வீட்டின் முன்
உள்ள கோயிலுக்கு கோபுரம்
கட்ட நண்கொடை தாருங்கள்
என்று ஃப்ளக்ஸ் போர்டை வை

கோபுரம் கட்டி முடித்து கும்பாபிஷேகம்
நடத்து. அன்னதானம் போடு
ஊழல் பணத்துக்கு கணக்கும்
வந்துவிடும்.  பாவமும் போய்விடும்

பாவம் போவதோடு பேரும் புகழும்
வந்து சேரும். கடவுளே வந்து கேள்வி
கேட்க முடியாது.  வஞ்சகக் கடவுள்
கேள்வி கேட்டாலும். காட்டப்படும்
கணக்கு வழக்குகளால் அந்தக் கடவுளும்
வாய் மூடி மௌனியாகிவிடும்.

இதுதான் கடவுளை தோற்றுவித்த
மனிதனின் ஊழல் பாவம் போக்க
 தொன்று தொட்டு கைக்கொண்ட
வரலாற்று சான்று......

பாவம் போக..கோயிலுக்கு கோபுரம்
கட்டு, அன்னதானம் போடு....10 comments :


 1. திங்கிறவன் திங்க திருப்பாலைக்குடியான் தெண்டங்கட்டுறது இதுதானோ....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. வாழ்த்துகள் அண்ணே ! எளிமை அதேநேரம் அருமை . தொடருங்கள் அண்ணா

  தம+

  ReplyDelete
 3. உண்மையில் கடவுள் இருந்தால் ,இப்படிப்பட்டவர்களை அனாதைப் பிணமாக அல்லவா ஆக்கி காட்டவேண்டும் ?
  த ம +1

  ReplyDelete
 4. ஊழல் ஆரம்பிக்கும் இடம். தான் தவறு செய்து இறைவனைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் முறை?

  ReplyDelete
 5. “திங்கிறவன் திங்க திருப்பாலைக்குடியான் தெண்டங்கட்டுறது இதுதானோ”---அது இதுதான் தலைவரே...

  ReplyDelete
 6. தங்களின் வாழ்த்தக்களுக்கு நன்றி! மேக்னேஷ் அண்ணே...

  ReplyDelete
 7. கடவுள் மறுப்பு கொள்கையாளர்களைவிட, இந்தக் கொள்ளையர்கள்தான் கடவுள் இல்லை என்பதை நன்கு தெரிந்துவைத்துள்ளார்கள்... தலைவரே..

  ReplyDelete
 8. அப்படித்தான் விசயம் இருக்கிறது தலைவரே....

  ReplyDelete
 9. இறைவனை இழுத்துக் கொளவதில்லை, ஐயா.... தனக்கு பக்கபலமாக இருக்க..கடவுளுக்கும் இலஞ்சம் கொடுத்து சேர்த்துக் கொள்கிறார்கள் ஐயா....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com