பக்கங்கள்

Wednesday, March 18, 2015

மகளுக்காக நடிப்பை நிறுத்திக் கொண்ட நடிகர்...

படம்- கே.பாலாஜி


நடிகராக இருந்து பின்னாளில படத் தயாரிப்பாளராக மாறிய நடிகர் இவர். முதலில் சினிமாவில் நடிக்க வந்தபோது வில்லனாகவே அறிமுகமானார். இப்படி இவர் வில்லனாக நடித்த பல படங்களில் ஒன்று “மாதர் குல மாணிக்கம்”

பழைய படங்களில் வில்லனாக இருந்தால் அந்த வில்லனுக்கு ஒரு கற்பழிப்பு காட்சி கண்டிப்பாக இருக்கும். இது அப்போதைய படங்களில் ஒரு விதி...

அந்த விதியின் படி வில்லனாக நடித்த அந்த நடிகருக்கும் “மாதர்குல மாணிக்கம்” படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சி...

இந்தப் படத்தை பார்த்த வில்லன் நடிகரின் மகள் “ தன் வயதுடைய பெண்களை கற்பழிப்பது போல நடிக்க வேண்டாம்” என்று தன் தந்தையான அந்த வில்லன் நடிகரிடம் அழுதார்.

தன் சக நடிகரின் மகள் என்று தெரிந்தும்தன் மகள் வயதுடைய  அந்தப்பெண்ணை கதாநயாக்கி.. கிழடு தட்டிபோயியும் கதாநாயனாக ஆட்டம் போட்ட இன்றைய நடிகர்கள் மத்தியில் அந்த  பழைய வில்லன் நடிகர்.

தன் மகள் அழுவதையும் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையும் பார்த்த அந்த நடிகர். தன் மகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்று முதல் வில்லனாகவும், கற்பழிப்பு காட்சிகளிலும் நடிப்பதை தன் மகளுக்காக அறவே நிறுத்திக் கொண்டார்.

அதன்பின்தான் சுஜாதா சினி ஆர்டஸ் என்ற திரைப்பட துறையை தொடங்கி, படத் தயார்ப்பாளராகி பல படங்களை தயாரித்தார். அந்த நடிகர் 

23 comments :

 1. தன் சக நடிகரின் மகள் என்று தெரிந்தும்தன் மகள் வயதுடைய அந்தப்பெண்ணை கதாநயாக்கி.. கிழடு தட்டிபோயியும் கதாநாயனாக ஆட்டம் போட்ட இன்றைய நடிகர்கள் மத்தியில் //
  விடுங்க இவங்களேல்லாம், எப்போ ?சொந்த மகளுடனே சோடி சேர்ந்து நடிப்பாங்களோ? தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. சொந்த மகளுடனே சோடி சேர்ந்து நடிப்பதற்க்கான கதைகளை யாரவது எழுதி தயாரிக்க முன்வந்தால் அவர்கள் நடிப்பார்கள். அதற்கும் ஒரு வியாக்கினம் வைத்து இருப்பார்கள்..நடிப்புவேறு...உறவு வேறு...என்று..வருகைக்கு நன்றி! திரு. யோகன் பாரிஸ் அவர்களே!!

   Delete
 2. /தன் சக நடிகரின் மகள் என்று தெரிந்தும்தன் மகள் வயதுடைய அந்தப்பெண்ணை கதாநயாக்கி.. கிழடு தட்டிபோயியும் கதாநாயனாக ஆட்டம் போட்ட இன்றைய நடிகர்கள் மத்தியில் அந்த பழைய வில்லன் நடிகர்?
  செம குத்து ......

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் விடும் குத்துகளைவிடவா...இது செம குத்து..நன்றி! திரு. பரிதி முத்துராசன் அவர்களே!!

   Delete
 3. பேத்தி வயதுடைய பெண்ணுடன் ஆட்டம் போடும் இன்றைய உச்ச நட்சத்திரங்கள் இதை உணர்ந்து பார்ப்பார்களா ?

  ReplyDelete
  Replies
  1. உச்ச நட்சத்திரங்கள்தான் உச்சத்தில் இருக்கும்போது இதை எப்படி உணர்ந்து பார்ப்பார்கள் ஜீ..நன்றி! திரு. பகவான்ஜி அவர்களே!!!

   Delete
 4. Replies
  1. கருத்துரைக்கு நன்றி! திரு. மகேஷ்வரி பாலசந்திரன் அவர்களே!!

   Delete
 5. Replies
  1. நன்றி! திரு. மகேஷ்வரி பாலசந்திரன் அவர்களே!!

   Delete
 6. பாலாஜி . என்ன ஒரு சமூக சிந்தனை?

  ReplyDelete
  Replies
  1. இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது திரு. காரிகன் அவர்களே!!!

   Delete
 7. Replies
  1. தங்கள் கருத்துரைக்கு நன்றி!!திரு.ஹமிது ஜமான் அவர்களே!!

   Delete
 8. பாலாஜி பாராட்டப்பட வேண்டியவர், இன்றைய கிழட்டு நடிகர்களை நல்ல குத்து விட்டீர்கள் நண்பா..
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் விடும் கும்மாங் குத்துவை கண்டுதான் இந்த லேசான குத்து நண்பரே...

   Delete
 9. வழிப்போக்கன்,

  அது நான் என் போனிலிருந்து தட்டச்சு செய்தது. அது சற்று சிரமமாக இருந்ததால் ஒரே வரி. நான் சொல்ல வந்தது பாலாஜிக்கு என்ன ஒரு சமூக சிந்தனை இருந்திருக்கிறது என்பதைத்தான். தன் மகளையே அக்கா என்றழைக்கும் வயது கொண்ட பெண்ணுடன் ஆடிப்பாடி குரங்கு சேஷ்டைகள் செய்யும் நடிகர் பற்றி மிகச் சரியாகவே எழுதியிருந்தீர்கள். அதையும் கூட எங்க ஆள் என்ன வேணா செய்வார் நீ யாரடா கேக்கறதுக்கு என்று சொல்லும் கூட்டம் இருக்கிறது.

  நல்ல தகவலை எழுதியதற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி! திரு. காரிகன் அவர்களே!!

   Delete
 10. Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!

   Delete
 11. நல்ல சாட்டை யடி! அவர்களுக்கு வலி ஆக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஐயா....

   Delete
 12. பாலாஜி பாராட்டப்பட வேண்டியவர்,தங்கள் பகிர்வுக்கு நன்றி
  latha

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com