சனி 25 2015

ஒரு குடிமகன் குடிக்காமல் சொல்லியது....!!!

படம்-tamil.oneindia.com



அய்யா..வணக்கம்... 

66 கோடியே 65 இலட்சம் சம்பாதித்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி..சிங்கை  நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரி நடந்த வழக்கில் பாவானியின் நியமனம் பற்றி இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பற்றி இந்தியக் குடிமகனான தங்கள் கருத்தை சொல்லுங்கள் அய்யா...


ஓ....அதுவா....? அந்தத் தீர்ப்புதான் ரெண்டுக் கெட்டான் தீர்ப்பு என்று இந்தக் குடிமகனுக்கு தெரியுமே???  நல்லது.. தங்களுக்கு அரசியலை பற்றிய அக்கறையெல்லாம் இருக்கிறதுக்கு .வாழ்த்துக்கள்.

“ உங்கள் கணிப்பு படியே,அந்த ரெண்டுக் கெட்டான் தீர்ப்பை பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்”

இந்தியக் குடிமகன் பார்வையில் நிணைப்பது என்றால், “ சத்தியமா..நான் குடிக்கிற குடிமகன் இல்லப்பா,“ குடிக்காத குடிமகன் சொல்லியது என்று தலைப்பிட்டுக் கொள்ளவும்...

“..........................““

மதுரை தெற்கு மாசி  பழைய டி.எம் கோர்ட்டிலிருந்து வடக்குமாசி வீதி சந்திப்பு வரை  ஒரு வழிப் பாதையின்னு  அறிவிச்சா...... வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி வரக்கூடாது. இது அணைவருக்குமான ஒரு சட்டவிதி.. இது உதாரணமாக வச்சுகுங்க...

.....“..............”

.... ஒருவழிப்பாதையின்னு அறிவிச்ச சட்டத்தை மதித்து எல்லோரும் ஒரு திசை வழியிலே போய்கிட்டு இருக்கும்பொழுது. ஒரு ஆளு மட்டும் அந்த விதிய மீறிக்கிட்டு எதிர் திசையில் வருவான், அவன யாரும் கேள்வி கேட்க முடியாது.. பெரும்பாலனவர்கள் நமக்கு எதுக்கு வம்புன்னு  வாய்மூடி, மெய்பொத்தி  எதையும் கண்டுக்கிடாமா போய்கிட்டே இருப்பாங்க..... எதிர்திசையிலே போறவனும் நம்மல எதித்து எவன் கேப்பான் என்ற அதிகாரத்துல   எந்தவித கூச்சம் இல்லாமல் எதிர் திசையிலே போவான் அவரு யாருன்னா??  சட்டம் ஒழுங்கை காப்பத்துரதா சொல்லிக்கிற காக்கி சட்டை அணிந்த போலீசு

“..........???????????”

.”என்னப்பா..”.

“ ஒன்னுமில்லங்கய்யா.......  நீங்க சொல்லுங்க........”

“என்னடா, சட்டம் ஒழுங்கை காப்பாத்துற நீயே சட்டத்த மீறிப்போற என்று தைரியமுள்ள ஒரு மனிதன் ஒருவர் கேட்டால்.... திருடனை பிடிக்கப் போறேன்  என்பான்.      இதுமாதிரிதானாப்பா.....

பாவனி சிங் வழக்கில தீர்ப்பு அளித்த வழக்கிலே ரெண்டு பேர்ல ஒருத்தரு சட்டத்தை மீறி  சொல்லி இருக்காரு...... மற்றவர்கள் பார்வையில் சொல்வதென்றால் சட்டத்தை வளைத்து இருக்கிறாரு 

”அத வளச்சது யாருன்னு சொல்லங்கய்யா....”

“ அது யாருன்னு  இன்னுமா...அல்லாருக்கும் தெரியல......?????? எனக்கு முன்பு இருந்த  மூத்த குடி மகன் சொன்னதுதான் என்  நிணைவுக்கு வருதய்யா....

“அது என்னாதுங்கய்யா........

” தின்னுவது ஒருத்தனாம் பேளுவது இன்னொருத்தனாம்.. கேட்டா, நான் தின்னுவதை அவன் பாத்தான். அதான் எனக்கு பதிலாக பேளுறான்னு சொன்னானம்.”    அது மாதிரி இருக்குதுய்யா    இந்த நடப்பு....

வேறு ஏதாவது.........

அடுத்து என்ன.. ரெண்டு கெட்டான் தீர்ப்புக்கு அடுத்து   மூம்முர்த்திகள்  சொல்லப் போறாங்கள.. அவுக என்னா சொல்லப்போறாங்கன்னு பாப்போம்....

”நல்லதுங்கய்யா...”


18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாத்தி சொல்ற குடிமகன்களும் இருக்கிறாங்களே நண்பரே..

      நீக்கு
  2. இது இரண்டும்கெட்டான் தீர்ப்பு ,இதை விட மோசமாய் இரண்டு பேர் ஒரு பக்கம் சாய்ந்து விட்டால் முழுதும் கெட்டான் தீர்ப்பாகி விடுமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து மூன்று பேர்கள் சொல்வதையும் பார்ப்போம்..முழுதும் கெட்டான் தீர்ப்பா என்று..!!!!

      நீக்கு
  3. அப்ப கண்டிப்பாக மாத்திதான் சொல்வாங்க என்று முடிவாகிவிட்டது, அப்படி தானே, வலிப்போக்கரே,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவாகி இருந்தாலும்,... சட்டம் தன் கடமையைச் செய்யும் நம்பிக்கை மாயை இருக்கிறதே திரு.mageswari balachandran அவர்களே.....

      நீக்கு
  4. ஆகா,,,,,,,,,,,,,,,,,,
    சட்டம் தன் கடமையைச் செய்யும்,,,,,,,,,,,,,,,,,,,
    செய்யும் செய்யும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் தன் கடமையை செய்வதை அடுத்து பார்க்கத்தானே போகிறோம்.

      நீக்கு
  5. பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்த கூட்டம் என்றதும் சட்டம் சரியாக தன் கடமையை செய்யும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கூட்டத்துக்கு யாருடைய சிபாரிசும் இல்லாமேலே சட்டம் சரியாகவேக தன் வேலையை செய்யும் தலைவரே....

      நீக்கு
  6. இவங்கே என்ன சொல்லி என்ன நடக்கப்போகுது சிந்திக்க வேண்டிய மக்கள் சிந்திக்கிறதையே மறந்துடுவாங்க போலயே.... நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சமாகவும் நஞ்சமாகவும் சிந்திக்கிற மக்களையும் சிந்திக்க விடாமத்தான் சினிமா. தொலைக்காட்சி. பக்கி.முக்தி,பயம்முன்னு ஏகப்பட்ட சமச்சாரங்கள், சிந்திக்கிற பக்கம் தாவிடக்கூடாதுன்னு கட்டிப் போட்டு வச்சிருக்கே நண்பரே...

      நீக்கு
  7. பதில்கள்
    1. சித்தர் சொன்னா பலிக்குமுன்னு சொல்லியீருக்காங்க.. அதுதான் நடக்கப்போகுது.....!!!!..

      நீக்கு
  8. I have not seen any comments from Nambalki in Iqbal Selvan's posts.
    It is quite strange that Namblaki did not post any comments for or against in Iqbal Selvan's multiple posts as they both have similar thinking!
    It surprises me.
    My million dollar question: Is he the real Iqbal Selvan???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல தலைவா...

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    ‘ஒரு குடிமகன் குடிக்காமல் சொல்லியது....!!!’- இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது. தமிழ்நாட்டு குடிமகன்கள் புரிந்தமாதரி தெரியவில்லை.

    நீதி நாணலாகிவிட்டது...!

    நன்றி.
    த.ம. 5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதி நாணலாகிவிட்டது என்றால் அடுத்து எல்லாமே கோணல்தான்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...