ஞாயிறு 26 2015

விடுதலை வேண்டிய கூத்துகளில் புதுவிதமான கூத்து...!!!

படம்-makkalkural.net


ஒரு ரூபா சம்பளத்தில் 66 கோடியே 65 லட்சம் சம்பாதித்தவர். எப்படியாவது எந்த வகையிலாவது விடுதலை பெற வேண்டி.. ஆளும் கட்சியின் தொண்டர் என்ற மட்டத்திலிருந்து அமைச்சர்கள் என்ற மேல் மட்டம் வரையிலும். அரசு நிர்வாகத்தின் சாதாரண கடைநிலை ஊழியர்லிருந்து உயர் அதிகாரிகள் வரை

விதவிதமாக, டிசைன் டிசைனாக பல கூத்துக்கள் நடத்தியது எல்லாருக்கும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து அவ்வகையான கூத்துக்கள் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. இப்படியான கூத்துக்களின் புது வகையான கூத்து ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்ற எல்லா அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் கட்சி நிர்வாகிகளையும் ஓவர்டேக் செய்து முன்னேறி விட்டார்.

சாமியார் போல் தாடியுடன் காட்சி தரும் அமைச்சர், கரூரில் குடி கொண்டுள்ள மாரியம்மனுக்கு, அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி தூக்கி, மூன்று கிலோ மீட்டர் காவடியோடு நடந்து வந்து............

கோயிலுக்குள் நுழைந்து காவடியை இறக்கி வைத்த கையோடு தரையில் விழுந்து கோயிலை, சுற்றி சாஷ்டங்கமாக உருண்டு  வந்தார்.

இவருடைய கூத்தில்...,  மாரியம்மனுக்கு  மஞ்சள் நீராடி மஞ்சள் ஆடை உடுத்தி கையில் வேப்பிலையுடனோ, தீச்சட்டியுடனோ  வலம் வந்து ஆட்டம்போடுவதை  தமிழ் சினிமாவில் காட்டப்படும் விதிகளுக்கு மாறாக...“ஆம்பளை சாமியான முருகனுக்கு காவடி தூக்கி வரும் மரபை மாற்றி.... மாியம்மனுக்கும் காவடி தூக்கி ஒரு புது வகையான கூத்தை அரங்கேற்றி உள்ளார்.

 இதைப்பற்றி கேள்வி கேட்கும் ஆன்மீக ஊடகவியலார்க்கு, கோழி, குருடோ? நொண்டியோ? அதுவா முக்கியம் ருசி தானே முக்கியம் !!என்று சினிமா நடிகர்களான செந்திலிடம் -மணி கூறுவது போல...

 முருகனோ, மாரியம்மனோ, காவடியோ, வேப்பிலையோ, அதுவா முக்கியம், வேண்டுதல்கள் தானே முக்கியம் என்கிறார் இவர்.

பத்து தேங்காய்க்காக பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றும் பிள்ளையாரைப்போல.......  அமைச்சர் பாலாஜியின் வேண்டுதல்களினால் மனம் குளிர்ந்த அம்மன்....  அமைச்சரின் அம்மாவை விடுதலை ஆக்கிவிட்டால்.......

 அமைச்சர் அய்யாவுக்கு அடுத்த 2016ல் அமைய போகும் அம்மாவின் ஆட்சியில்  தன் பக்தனின்  பக்தியை மெச்சி பக்தனின் ஆசையை  மக்களின் அம்மா நிறைவேற்றாமலா  ..இருப்பார்.???????????

படம்-senthilvayal.com



10 கருத்துகள்:

  1. இதென்ன கூத்து இதை கேட்க ஒரு நா(ஜா)தியும் இல்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கிற நா(ஜா)தியிடம் பவர் இல்லாததால் இந்த கூத்து .

      நீக்கு
  2. புதிய கூத்து
    புதிய சிந்தனை
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

    பதிலளிநீக்கு
  4. விடுதலை வேள்விக்கு
    "சித்திரை வெய்யில்"
    தந்த பரிசு என்னவோ?
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. இதுதான் அரசியல். என்ன செய்வது? இவற்றையெல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. 2016 தேர்தலில் மாற்றுக் கட்சிதான் ஆட்சி அமைக்குமாம் - தந்தி டிவி தேர்தல் கருத்துக் கணிப்பு

    பதிலளிநீக்கு
  7. அம்மா பக்தர்களின் சகிக்க முடியாத கூத்துக்கள். அதை நீங்க சொன்னவிதம் ரசிக்கதக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் வெல்வார்.யார் வீழ்வார் என்ற போட்டி இதிலதான் கடுமையாக இருக்கிறது நண்பரே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...