படம்- |
விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய அந்த நீதிபதி யார் என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அந்த ரெண்டு நண்பர்களுக்கு, அவர்களின் ஆர்வத்தை தீர்ப்பதற்கு தோதுவாய் ஒருவரை எதிர்பாரத்து கொண்டு இருந்தனர்.
வேண்டாத எதைஎதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருக்கும் நபர்களின் மத்தியில் அவர்களின் ஆர்வம் விசித்திரமாக இருந்தது. தங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் அந்த நண்பர்களின் ஆர்வத்துக்கு தடை போட்டவர்களாக இருந்தனர்.
தடையை மீறி... சோர்வையும் பயத்தையும் தூக்கி எறிந்ததன் விளைவாக அவர்களின் ஆர்வத்தையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொளவதற்க்காக ஒருவரை சுட்டிக்காட்டினார். ஒரு வக்கீல்
அதோ.. அந்த வக்கீலிடம் கேளுங்கள். அவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர். விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி யாருன்னு” உங்களுடைய சந்தேகத்தை உடனடியாக தீர்ப்பார் என்று ஒருவரை சுட்டிகாட்டியவரிடமிருந்து விடை பெற்றனர்.அந்த இரண்டு நண்பர்கள்.
வந்தவர்கள் அந்த வக்கீலிடம் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர். தங்களின் ஆர்வத்தையும் எழும் சந்தேகத்தையும் தெரிவித்தனர்.
அவர் இரண்டு நண்பர்களிடம் கைக்குலுக்கிக்கொண்டு “ ஒரு நிமிடம் என்று சொல்லியவாறு ஒலி எழுப்பிய செல்போனில் சில நிமிடங்கள் பேசிவிட்டு இரு நண்பார்களை பார்த்தார்.
விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி யாரென்று விளக்கமாக சொல்லுங்களேன் என்றார் ஒருவர். மற்றவர்களிடம் இதைப்பற்றி கேட்டபோது யாரும் சரியாக சொல்லாதததையும் சொல்லியவர்களில் பலர் தவறாக சொல்லியதையும் அவர்கள்.கூறினார்கள்.
அவர். கைவசம் என்னிடம் பிரசுரம் எதுவுமில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்கமாக சொல்கிறேன். தற்போது சுருக்கமாக சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு தன் அலுவலக அறிமுகச் சீட்டை இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்துவிட்டு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் யோக்கியத்தைப்பற்றி சொல்வதற்கு ஒன்றா? இரண்டா?என்பதைவிட எக்கசக்கமாக இருக்கிறது என்பதே உண்மை இருந்தாலும் நடப்பு விவகாரத்தில்“, விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” யைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
இப்போது தலைமை நீதிபதியாக இருப்பவர் தத்து என்பவர். இவர் ஜெயலலிதாவுக்கு முறைகேடாக பிணை வழங்கியவர்., ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை மூன்றே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டவர். இவைகள் சட்ட விரோத நடவடிக்கைகள், மற்றும் அதிகார துஷ்பிரோயகங்கள். இவரின் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை குற்றம் சாட்டியும், எதிர்த்தும்,“ ஜெயலலிதா வழக்கை தத்து விசாரிக்க கூடாது ”என்று ஆயிரம் வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளனர். கொடுத்த சில நாளில் இந்த தத்து ஒரு படி மேலே போய், “ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வகேலாவுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தபோது, அவர்களை விடுதலை செய்ய காங்கிரசின் மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்ததால், நாடு முழுவதும் 14 ஆண்டுகள் சிறை வாசம் முடித்த சுமார் 1500 கைதிகள் விடுதலையாக முடியாமல் சிறையில் வாடுகிறார்கள்,
ஓராண்டு காலமாக இதற்கு ஒரு சிறப்பு அமர்வை நியமிக்க முடியாத தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதா வழக்கில்,குற்றவாளி ஜெயலலிதாவுக்கு
ஆதரவாக செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானிசிங் தீர்ப்பை தொடர்ந்து . உச்ச நீதிமன்றத்தின் இதுகாறும் கடைபிடித்து வந்த நடைமுறையை மீறி, பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று ஜெயலலிதாவுக்காக, ஒரே நாளில் சிறப்பு அமர்வை நியமித்தார். இத்தகைய காரண காரியங்கள்.மற்றும் அவரின் செயல்பாடுகளால்தான் ” விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” இவர்தான்.
புரிந்துவிட்டது தோழரே.....!!! இதோடு தொடர்புடையதில் இன்னொரு சந்தேகம். கேட்கலாமா..??? என்றனர்
“ ம்.... கேளுங்கள்..”
“விசுவாசத்தில் வண்டு முருகனை விஞ்சிய நீதிபதி” விசுவாசத்தில் விஞ்சியது ”சாதி பாசத்தாலா...??? அல்லது சூட்கேஸ் பாசத்தாலா...???? ..
..இரண்டிலும்தான்.... இதைப்பற்றி அடுத்த சந்திப்பில் பேசுவோம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினுடன் தொடர்பில் இருங்கள்.. தாங்கள் எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று சொல்லி இரண்டு நண்பர்களிடம் மீண்டும் கை குலுக்கிவிட்டு, நீதிமன்றத்திற்குள் சென்றார் அவர்.
அடுத்த சந்திப்பை காண ஆவலுடன் இருக்கிறேன் :)
பதிலளிநீக்குதங்களின் ஆவலுக்கு நன்றி!
நீக்குவண்டின் ரீங்காரம் காதை அடைக்கிறது!
பதிலளிநீக்குத ம +1
வேறு வழியில்லை காதை அடைத்துக்கொள்வதைத்தவிர...
நீக்குசூட்கேஸ் அளவைப் பொறுத்து...!
பதிலளிநீக்குவக்கில் அய்யா....ரெண்டும்ன்னு சொன்னாரே.....
நீக்குஎப்பிடி எண்டாலும் தத்து களிஞ்சா சரிதான்
பதிலளிநீக்குஎப்பிடி எண்டாலும் தத்து களிங்சாலும் களியவிடமா பாக்குறதுக்கும் ஆளுக இருக்கே....
நீக்குவண்டு குடைச்சல் பயங்கரமாக இருக்கிறதே....
பதிலளிநீக்குபின்னே..குடைச்சல் இருக்காதா...???
நீக்கு