வியாழன் 30 2015

களவானிகள் களவானிகளிடம் புகார் செய்த கதை..

படம்-www.tamilsirukathaigal.com

தொழில் முறையில் பழக்கமான இரண்டு திருடர்கள் சந்தித்தபோது, தங்கள் தொழில் மற்றும் தொழிலின்பொது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை பற்றியும் கமிஷன்காரனைப்பற்றியும் அதாவது மாமூல் காரனின் தொல்லையைப்பற்றி பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஒருவன்.

அண்ணே, முன்ன மாதிரி,நம்ம தொழில்ல வருமானமே இல்லேண்ணே.... நமக்கு போட்டீயா தினுசா, தினுசா தொழில பத்தி தெரியாவதன்லாம் சக்கை போடு போட்டு இருக்காங்கேண்ணே. கிடைக்கிற ஒன்னு ரெண்டும், கிடைக்கிறதுல செலவுக்கே பத்த மாட்டுதுண்ணே, லம்பா, ஏதாவது கிடச்சா.. மாமூல்காரனுக்கு பாதிய கொடுத்துபுட்டு, இந்தத் தொழில விட்டுபுட்டு,இருக்கிற கொஞ்ச காலத்திலோவது நிம்மதியாக இருக்கலாம் பாக்குறேண்ணே....ஒன்னும் அமைய மாட்டுதுண்ணே என்றான்.

அப்படீயா  நீ..நிணக்கிற ...,அடப்போடா... நாம சும்மா இருந்தாலும் அடிக்கிற திருட்டுல பாதி வாங்கியே பழக்கப்பட்டவன். நம்மல சும்மா இருக்க விடமாட்டான்டா... இன்னிக்கி, நிலயில..அரசியல்வாதிகளும்.அதிகாரிகளும் களத்தில் குதித்து... நம்ம தொழில்ல இறங்கிட்டான் பாரு....இந்த லட்சனத்தில நம்மல நிம்மதியா இருக்க விடுவான்களா....???? அவிங்க திருடனத்துக்கு எல்லாம் நம்மளத்தான்டா புடுச்சு உள்ளே போடுவாங்கே......

என்னண்ணே..நீங்களே...இப்படிச் சொல்றீங்க.......

“நான்.என்ன..தமிழ்சினிமா பார்த்த கற்பனையிலா சொல்றேன். நாம அனுபவிச்சதையும்  நாட்டுல நடந்துகிட்டு இருக்கிறதையும்தாண்டா சொல்றேன்”.

“ஏண்ணே.....”..

ஏன்னா..? என்னத்தடா சொல்றது... அவனவன் அம்மாம் பெரிய படிப்பு படிச்சு வந்தது எதுக்கு தெரியுமா,?? கிடைப்பதையும்,கிடைக்கிறதையும், கொள்ளையடிப்பதிலும், சுருட்டுவதிலும்தாண்டா கண்ணும் கருத்துமா?? இருக்காங்கே... இவிங்க அடிக்கிற கொள்ள. கொலய கேட்க ஒரு நாதியமில்லடா, அப்படியே யாராவது கேட்டா...” ஆமா நாங்கதான் அடிச்சோம் செய்தோம் உன்னால முடிஞ்சத பாரு” இப்ப..என்னாங்கிற என்று 55 இங்ச் மார்ப தூக்கி காட்டுறாங்கேடா........

“அப்படி தூக்கி காட்டுற மார்ப வகுந்துதெடுத்துடுறும்ண்ணே...”

எங்கிட்டு எடுக்கிறது.,.அவிங்க படைய வச்சு நம்மல ரெண்டா பொளந்துதெடுத்தவாங்கே..... ஆந்திராவில இருபது பேத்த பொளந்தெடுத்த பாத்தியா......???? பெரிய பெரிய கொள்ளக்காரன்களை காப்பாத்த... இப்படி போட்டுத்தள்ளி கதை விடுறாங்கே.....

“ஆமாண்ணே........ரெம்ப கொடுமைண்ணே........”.

“நாமெல்லாம் அன்றாட வேல வெட்டி இல்லாத சின்னஞ்சிறு திருட்டு பயல்க...
ஆட்சியிலேயும் பதவிலேயும் இல்லாத பயல்க.... நமக்கு உதவ யாரும் இல்லாத பயல்க..... ஆட்சியிலும் பதவியிலும் இருக்கிற பெரிய திருட்டு பயல்களுக்கெல்லாம். யாருன்னு தெரியாதவனெல்லாம், சொந்தக்காரன் சாதிக்காரன் ,நண்பன்னு சொல்லிகிட்டு எம்புட்டு பேரு வாரங்கே பாத்தியா.......

நமக்கு கிடைக்கிற மரியாதையான, அடி,சித்ரவதை, வசவு, கொட்டடிச்சிறை, எல்லாம் அவிங்களுக்கெல்லாம் கிடைக்கா..தண்ணே.......

“யே..... அவிங்க எல்லாம் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறவங்கடா..... அதிலும் பரம்பரை பணக்காரன்க வேற, மக்களுக்கு சேவை செய்யனுமுனு  பரந்த உள்ளத்தோட வந்தவங்கேடா...... அவிங்க  எல்லாம் திருடமாட்டாங்க, ஏன்?பொது மக்கள் பணத்த மோந்துகூட பார்க்க மாட்டாங்கன்னு “ கக்கூல ஏசி வச்சுருயிருக்கிவங்கேடா.,அதுவும் அகில உலகமான மேலோகத்திலிருந்து அருள் பெற்று வந்தவிங்கன்னு சந்து பொந்துகளில் கூவுகிட்டு இருக்கிறத  கேட்கலியா....டா...”  

”ஆமாண்ணே....”.ஒரு ரூபா சம்ளம் வாங்கி 66கோடி கொள்ளை அடித்தவுக ஜெயில்ல இருந்தபோது எவ்வளவு ராஜ மரியாதை, எவ்வளவு வசதி வாய்ப்பு,. நாம ஜெயில்ல இருந்தபோது பேளுவதற்கு கூட வசதியில்லாம தவித்த  தவிப்ப நெணச்சா  ....கோபமா வருதுண்ணே.....

 கோபப்ப்படாதே.... கோபப்பட்டா உனக்குத்தான் நோக்காடு, உன் கோபத்தை குறைக்க இந்தக் கதையை கேளு......

 ..
திருச்சியிலே சுங்கத்துறைன்னு ஒரு அலுவலகம் உள்ளது. இந்தச் சுங்கத்துறையின் வேலை என்னான்னு தெரியுமா???  களவாடி கடத்திகிட்டு வருகிற களவானிகளிடமிருந்து அந்தப் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்கிற வேலை.. அப்படி களவானிகளிமிருந்து கைப்பற்றிய களவாடிட்டு வந்தப் பொருள்களை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள். அப்படி சமீபத்தில் களவாடிய பொருள்களில் பாதுகாப்பு பொட்டகத்தில் வச்சிருந்த  18 கிலோ தங்கத்தில் 15 கிலோ தங்கத்தை காணாம போச்சுடா...  காணமா போன தங்கத்தை இன்னும் தேடிக்கிட்டு இருக்காங்கேடா......!!!!


பெட்டகத்தில் இருந்தது எப்படியண்ணே..காணமால் போகும்...????

ஒரு தொழில் தெரிஞ்ச தொழில்காரன் கேட்குற கேள்வியாடா  இது...!!!

“இல்லேண்ணே....பாதுகாப்புடன் பெட்டகத்தில் வச்சிருந்தது., ......????


வடநாட்டு கொள்ளையர்களான கிரில்கொள்ளையர்கள், பீரோ கொள்ளையர்கள் கேள்விப்பட்டதில்லையாடா......????

“...............................”

அப்பேர்ப்பட்டவர்களுக்கு மேலான கடத்தல் கொள்ளையர்களையே பிடித்தவர்களுக்கு கொள்ளை அடிப்பதற்கு சொல்லியாடா..தரனும், மீன் குங்சுக்கு நீந்த கத்து தருவது மாதிரியில்ல பேசுற....”

“இல்லண்ணே....”

“என்ன  லொல்லண்ணே......”...

”அப்புறமென்ண்ணே.........”திருடன புடுச்சுட்டாங்களண்ணே....

“நீயோ,நானோ, இல்ல நம்மள மாதிரி யாராவது இருந்தா ஒடனே தூக்கி இருப்பாங்கேடா....???  


“.............................““

15 கிலோ தங்கத்தை கொள்ளை அடிச்சவன் ஆபீசருடா.....!!! அதுவும் மத்திய ஆபிசருடா..... என்ன ஆதாரம் கிடச்சிடுமா...? அப்படியே ஆதாரம் கிடச்சாலும் தணடிக்க முடியுமா,? ஓ,,,,,மயிரையும், ஏ..மயிரையும் புடுங்கிற மாதிரி..அந்த மயிர புடுங்க முடியுமாடா.....?  அப்படியே அந்த ஆபிசர்ரு மயிறு கீழே விழுந்தா......கூட.....“சார் உங்க மயிறு கீழே விழுந்திருச்சுன்னு எடுத்துக் கொடுப்பாங்கேடா......!!!

“ஆமண்ணே....சரியாச் சொல்லறீங்கண்ணே.....” இத விசாரிச்சு கொள்ளக்காரன புடுச்சு , தண்டனை கொடுத்து  எல்லா வசதியும் உள்ள அந்தச் ஜெயில்ல அடைக்கிறதுக்கு, 18, 20 வருசம் ஆகுமாண்ணே......

“ம்.ம்.,,,,,ஆகும்....,ஆகலாம்,...., அதுக்கு மேலேயும்  ஆகலாம், அப்படியே கழுவியும் ஊத்தி மூடலாம்”..டா,

“...?????????????????????????????????””











14 கருத்துகள்:

  1. அதே திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் இன்னும் 15 கிலோ தங்கத்தையும் காணாமாம்,இது இன்றைய செய்தி ,வேலியே பயிரை மேயுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடே கொள்ளை போகும்போது சுங்கத்துறை பெட்டகத்தில் உள்ள தங்கம் மட்டும் என்ன கொள்ளை போகமா இருப்பதுதான் அதிர்ச்சி தலைவரே..

      நீக்கு
  2. அந்த ஆபிசர்ரு மயிறு கீழே விழுந்தா......கூட.....“சார் உங்க மயிறு கீழே விழுந்திருச்சுன்னு எடுத்துக் கொடுப்பாங்கேடா...

    ஸூப்பர் நண்பரே நெத்தியடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் அவிங்க ...இருக்காங்கே ....நண்பரே......

      நீக்கு
  3. கதை, குத்தல், வெளிப்பாடு - அது
    உங்கள் தனிக் கலை
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஒன்னும் செய்ய முடியாதென்பது சரி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூகம்பமே வந்தாலுமே இங்கே ஒன்னும் செய்ய முடியாதுன்னு எனக்கு தோணுது தலைவரே....

      நீக்கு
  5. வித்தியாசமான நடையில் நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான பதிவு ! எனது வலைப்பூவுக்கும் வரலாமே ! எனது பதிவு கொத்து பரோட்டா !

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...