திங்கள் 06 2015

காந்தியின் செல்வாக்கை ஒழித்த ஜின்னா.....

படம்-www.kalachuvadu.com


மதுரை வந்த காந்தி . எப்படி! அரை ஆடை காந்தியாக மாறி.. ஏழைகளை கவர்ந்திழுக்க  தந்திரம் செய்தாரோ...அதே பாணியில் பாகிஸ்தான் நாட்டுத் தலைவரானவர் எம்.ஏ.ஜின்னா..

ஜின்னாவும் மேல் நாட்டு நாகரிக உடைகளை கைவிட்டு, பின்தங்கிய இசுலாமிய மக்களிடையே, இந்திய பாணி உடைகளோடு சென்று கலந்துறவாடினார். சல்வார் வகைத் காற்சட்டையும்,ஹெர்வானியும் அணிந்த ஜின்னா, கீழ்தட்டு இசுலாமிய மக்கள் கூட்த்தில் கலந்து நின்றார். அவசர அவசரமாக கற்றுக் கொண்ட உருது மொழியில் பொதுக்கூட்டங்களில் பேசினார். இவையெல்லாம் மக்கள் தலைவராகும் செயல் நோக்கம் கொண்ட வெளி நடிப்பு என்று  தெரிந்திருந்தாலும்..

 மதவுணர்வகளைத் தூண்டிவிட்டு இந்து தீவிரவாதி அரக்கனை எப்படி காந்தி உருவாக்கினாரோ, அதே வழியை ஜின்னாவும் பின்பற்றி,“ இசுலாமிய தீவிரவாதக் கொடிய விலங்கை உருவாக்கினார். இவையெல்லாம் ஏழை இசுலாமியர்களிடம் காந்திக்கு இருந்த செல்வாக்கை ஒழித்தது.

பகத்தறிவுவாதிகளாலும்,தீண்டப்படாதவர்களாலும், இசுலாமியர்களாலும் கைவிடப்பட்ட காந்தி, மேல்சாதி இந்துக்களின் தலைவராகவும், பின் இந்து தேசியம் என்று அழைக்கப்படத் தொடங்கிய பார்ப்பனியத்தின் பேச்சாளாராகவும் காந்தி சுருங்கிப்போனார்.


நன்றி.....

இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

Product Description


இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.


20 கருத்துகள்:

  1. எப்படியெல்லாம் அரசியல் பண்ணி இருக்காங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு எண்ணிக்கையில் உள்ள உண்மையான வரலாற்று அறிஞர்கள், ஆசிரியர்கள் எழுதிய உண்மைகள் ...

      நீக்கு
  2. எமக்கு புதிய விடயங்கள் நண்பரே,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான புதிய விசயஙங்கள். உண்மையான விபரங்கள்.. நமக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வந்து சேராது நண்பரே...

      நீக்கு
  3. //மதவுணர்வகளைத் தூண்டிவிட்டு இந்து தீவிரவாதி அரக்கனை எப்படி காந்தி உருவாக்கினாரோ//
    காந்தி அப்படி செய்தார் என்று நம்புகிறீர்களா?
    //பகத்தறிவுவாதிகளாலும் தீண்டப்படாதவர்களாலும் இசுலாமியர்களாலும் கைவிடப்பட்ட காந்தி//
    காந்தி ஒரு காபீர். இஸ்லாமியர் கைவிட்டிருக்கலாம், பகத்தறிவுவாதிகளும்,ஒதுக்கபட்ட மக்களும் ஏன் கைவிட்டனர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பெரிய துரோக ... வரலாறுங்க..... திரு. வேகநரி அவர்களே!!

      நீக்கு
  4. வலிப்போக்கன் சார், காந்தியின் அத்தனை கொள்கைகளையும் எனக்கு உடன்பாடானதல்ல . அவர் மீது நீங்கள் சொல்லும் குற்றசாட்டை அவரது எதிரிகள் கூட சொன்னதில்லை. காந்தியின்மீது நீங்கள் தவறான புரிதல் கொண்டிருப்பது வேதனை .அவரது கொலைக்கு காரணமே முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று இந்து தீவிர வாதிகள் நினைத்ததுதான்.உங்கள் கூற்றுப்படி அவரை கொலை செய்ய அவரே தூண்டிவிட்டார்
    ஆயிரக்கணக்கானோர் படிக்கும் இணையதளத்தில் ஆதாரமற்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. டி.என். முரளிதரன்- மூங்கில் காற்று அய்யா அவர்களுக்கு.... பதிவில் எழுதியுள்ளது ஆதாரமற்ற.. தவறான தகவல்கள் இல்லை அய்யா...“ இந்திய வரலாற்றில் பகவத்கீதை” என்ற புத்தகத்தில் உள்ள ஆதாரம் உள்ள தகவலைத்தான் பதிவுட்டுள்ளேன்.. டிஸ்கவரி பேலஸ் புத்தகக் கடையில் அந்தப் புத்தகத்தை தாங்கள் வாங்கி படித்தீர்களானால் தங்களுக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன் அய்யா.....

      நீக்கு
  5. பதில்கள்
    1. எனது நண்பரிடம் இரவல் வாங்கி.... ஒருவாரமாக விடாமல் என் விட்டார்களிடம் முறைப்பும், முனுமுனுப்பும் பெற்று படித்த புத்தகம் அய்யா... என் பதிவை படித்துவிட்டு.அந்தப்புத்தகத்தை வாங்கிச் சென்று விட்டார். அய்யா.. திரும்ப கிடைத்தால் கண்டிப்பாக தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அய்யா....

      நீக்கு
  6. பதில்கள்
    1. இது சந்தர்ப்பவாத..சுயநல-காரியவாத அரசியல் அய்யா....

      நீக்கு
  7. பதில்கள்
    1. எனக்கு படிக்க கிடைத்த புத்தகத்தில் ..எனக்கு பிடித்ததை எனது கோணத்தில் எழுதியதை ஆமோதித்த தங்களுக்கு நன்றி!!!

      நீக்கு
  8. காந்தி பற்றிய மாற்றுப் பார்வைகள் உண்டு. ஏன் எனக்கே கூட.
    இதே நீங்கள் கோட்சேயின் மரண வாக்குமூலம் என்ற ஆரம்பகாலத்தில் தடை செய்யப்பட்டு, பின் தடைநீக்கப்பட்ட காந்தியைக் கொன்றவரின் வாக்குமூலத்தை ( தமிழில் சுப்பராயுலு என்பார் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். தஞ்சையிலிருந்து வெளியிடப் பட்டது) படித்தீர்களானால் அவர் காந்தியின் மீது வைக்கும் நூற்றிற்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை அதிலுள்ள நியாய அநியாயங்களைப் பார்க்க முடியும். அதில் கோட்சே சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளின் பொதுமை அவர் இந்துக்களைப் பாராமல் எல்லா நிலைகளிலும் இஸ்லாமியர்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கிறார் என்பதே!

    காந்தியின் நிலைமை இஸ்லாமியர்களாலும் ஏற்கப்படாமல் இந்துவவாதிகளாலும் ஒதுக்கப்பட்ட நிலைமைதான். ஜின்னாவாவது முகமதியர்களால் ஏற்கப்பட்டார்.
    ஆனாலும் காந்தி, மனிதன் என்கிற எல்லாருக்குரிய பலவீனங்களோடு இருந்தாலும் நம்மைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார் , வாழ்ந்திருக்கிறார் என்பதே என் கருத்து. அவர் தேசப்பிதா எனப் போற்றப்படுவதற்குக் காரணமும் இதுவே.

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  9. காந்தியை விமர்சனத்துக்கு அப்பால் வைத்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது !

    ஜின்னாவை பற்றி...

    உங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மை ! காந்தி தான் சொன்னதை வாழ்ந்து காட்டினார். ஆனால் தனது பொதுவாழ்க்கை பிம்பத்துக்கு மாற்றான, இஸ்லாம் தடை செய்யும் மதுவுடன் மேல்நாட்டு நாகரீக வாழ்க்கையில் திளைத்தவர் ஜின்னா !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறதொர சமயத்தில் காந்தியை ப்பற்றிய உண்கைளை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள நண்பர்களின் பதிவுப்பட்டியலை தங்களுக்கு தெரிவிக்கிறேன் நண்பரே...

      நீக்கு
  10. திரு டாருடா, நீங்க உங்க கருத்தை சொந்த பாஷையிலேயே தெரிவித்தால் பலர் அறிந்து கொள்வார்களல்லவா.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...