பக்கங்கள்

Sunday, April 05, 2015

வீரமாய் பொய்யுரைத்த சுவாமிஜி.......! ! !

படம்- மாலைமலர்


இந்து எழுச்சி பற்றிப் பேசும் இன்றைய இந்து தீவிர வாதிகள். பார்ப்பனிய மதம் பிற மதங்களுடன் மிகுந்த சகிப்பு தன்மையுடன் நடந்து கொள்வதாக   இன்று வரை விடாமல்  பொய்யுரைத்து  கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மையில்

பார்ப்பனிய இந்து மதத்தால்.. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் தென்னிந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்காதவை....

இந்த அரிய பெரிய உண்மைகளை, இவர்களுக்கு முன்னோடியாக “கட்டுச் சோற்றில் பெருச்சாளி” யை மறைத்த கதையாக...  1893 ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி அமெரிக்காவின் சிக்காகோவில் நடந்த ஆன்மீக மாநாட்டில் சுவாமிஜி ,“எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கி பேசியதை பெருமையாக சிலாகித்து  போனவர்களுக்கு, தென்னிந்தியாவில்  இருந்த சமனர்களும், பௌத்தர்களும் சகோதரிகளாக! சகோதரர்களாக தெரியவில்லை.   ஆங்கில உரை நிகழ்த்திய சுவாமிஜிக்கே அமெரிக்க மக்கள்தான் சகோதரிகளாக.....சகோதரர்களாகத்தான்  தெரிந்து இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் இருந்த பௌத்தர்களும் சமணர்களும் தெரியவில்லை. அதனால்தான்..சுவாமிஜி..உண்மையை மறைத்து. “பார்ப்பனிய இந்து மதம் பிற மதத்தினரை கொடுமைப் படுத்தியதும் இல்லை. இந்து மதத்தை பரப்புவதிலும் ஈடுபட்டதில்லை” என்று  போகுமிடமெல்லாம் கூறினார்.

கி.பி. 600ஆம் ஆண்டு வாக்கில் .மதுரையில் தமிழ் பார்ப்பனான திருஞானசம்பந்தன் என்பவன் .8000 எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றான்.

அந்த எட்டாயிரம் சமணர்களை கொன்றதன் வெற்றி விழாவாகத்தான் இன்றைய நாள் வரையிலும் மதுரை மீனாட்சி கோயிலிலும். வேறு சில கோயில்களிலும்  திருவிழாக்களாக நடத்தப்பட்டு வருகின்றன்.

இதோடு, தமிழக பௌத்தர்களும்,சமணர்களும் சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்ட காட்சிகள், அனேக கோயில் சுவர்களில், ஓவியமாக வரையப் பட்டுள்ளன.

பௌத்தருடைய சீடர்களும், பௌத்த மதத்தைச் சார்ந்த  பாமர மக்களும் ஈவு இரக்கமின்றி கொடுமை படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது, வாள் முனையில் இந்து மதத்திற்கு மாற்றவது போன்ற ஏகப்பட்ட கொடுமைகள் செய்தார்கள்.

இவற்றை எல்லாம்  வசதியாக மறைத்துவிட்டு  சுவாமிஜி..வீரமாய் கர்ஜனை செய்து அன்றே பொய்யுரைத்தார்.


நன்றி!:-

-இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

Product Description

இந்திய வரலாற்றில் பகவத் கீதை
உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.

17 comments :

 1. Replies
  1. அந்த வரலாற்று புத்தகத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது...ஜி

   Delete
 2. கழுவில் ஏற்றிய விஷயம் நம் மக்களுக்கே தெரியாது ,அமெரிக்கக் காரனுக்கு எங்கே தெரியப் போவுது :)

  ReplyDelete
  Replies
  1. நம் மக்களுக்கு தெரிந்திருந்தாலும் வீரமாய் எழுந்திருவாங்க.....பாருங்க....??ஃ

   Delete
 3. அறியாத தகவலாக இருக்கிறதே... நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. அறியாத தகவல்தான் நண்பரே......

   Delete
 4. இத்தகைய கட்டுக்கதைகள் பல உண்டு ..
  நம்பகமான ஆதாரம் உண்டா ?
  நிச்சயமாக சமணர்கள் கொல்லப்பட்டனரா?

  ReplyDelete
  Replies
  1. ஆதாரத்துக்கு பதிவில் நன்றி! என்று சொல்லப்பட்ட புத்தகம் தான் ஆதாரம்...

   Delete
 5. வீரமாய் மெய் உரைத்த "பகவான் ஜி கருத்தை வரவேற்கின்றேன்.
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. My friends pls read more this is not a new twist.There lot of story.Anal vatham punal vatham Such a magic did and destroy the Samanam and Powtham.Analvatham nna mathiram solli theeyil iduvathu atha sambal agamal iruppathu, punal vatham nna manthiram solli aatril (river) vesuvath veesiye eedu aatrin ethir pakkamaa varuvathu.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆங்கீலத்தை என்னால் படித்து தங்களின் கருத்துரை என்னவென்று புரியவில்லை...

   Delete
 7. இன்று ஒரு புதிய தகவல் தங்கள் மூலமாகக் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 8. விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கு உயர்வு வர்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதே பகவத்கீதை.என் மனதில் தோன்றிய நிச்சயமான உண்மை இது. இது வேறு ஒருவர் மனதிலும் தோன்றியிக்கு என்றால், இன்னும் எத்துனை மனம் திறக்கப்படாமல் இருக்கோ,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது மனம் திறப்பார்கள்......

   Delete
 9. சிவனடியார்கள் எப்பிடி பார்பனர் அக இருக்க முடியும் ??? தமிழன் தொன்று தொட்டு சிவ மதத்தினர் தானே ???? இடையில் புகுந்தது தானே பெருமாளும் பார்பனர்களும் ????

  நான் சரியாக கூருவதாக இருந்தால் ஆறாம் நூற்றாண்டு க்கு பிறக்கு தானே தமிழகத்தில் பெருமாள் என்பவர் உள்ளே வந்தார்... அது வரை தமிழர்கள் அனைவரும் சிவ மதத்தினர் தானே??? அதான் பிறக்கு தானே பெருமாள்,
  பிற கடவுள்கள் (அல்லாவும் ஏசு வும்) வந்த பிறக்கு தானே ஹிந்து மதம் என்று சிவனும் விஷ்ணுவ்ம் இன்னைந்து உருவான மதம்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com