வெள்ளி 08 2015

மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வை,



ninaivu-koorthal
படம்-வினவு.
படிக்க----நூல் அறிமுகம்



 தோழர் லெனின்:


போல்ச்விக் கட்சியின் மத்தியக்குழு ஸ்மோல்னி இன்ஸ்டிடியூட் என்ற இடத்தில் இயங்கி கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்களில் லெனின் தலைமறைவாக இருப்பார். போல்ச்விக் கட்சிக்கு சோவியத்துகளில் பெரும்பாண்மை இல்லாத காரணத்தினால் ஆயுதந்தாங்கிய எழுச்சியை தொடங்குவதா? வேண்டாமா? என்று ஒரு தடுமாற்றம்  மத்தியக்குழு உறுப்பினர்களுக்கே இருக்கும். லெனினோ  ஆயுத எழுச்சியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியக் குழுவுக்கு கடிதம் அனுப்பிக்  கொண்டே இருப்பார். இருப்பினும் மத்தியக்குழு அவர் கருத்தை ஏற்றுக் கொள்ளாது.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. உடனே நான் மத்தியக் குழுவை நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று புறப்படுவார்.லெனின். அவருடைய பாதுகாப்புக்கு பொருப்பான தோழர் அதனை ஆட்சேபிப்பார். அதனை லெனின. நிராகரித்து வெளிக் கிளம்புவார். காரணம் புரட்சி எழுச்சியை உடனே தொடங்க வில்லை என்றால். இன்னும் சில பத்தாண்டுகளுக்கு புரட்சி தள்ளி போய்விடும். அந்த இழப்பை ஒப்பிடும்போது என்னுடைய உயிர் பெரிது அல்ல.. என்றார் லெனின்.

தோழர் பகத்சிங்:

உலகிலேயே போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம் பகத்சிங். தூக்கு மேடையேறியதுதான் பகத்சிங்கின் சிறப்பு என்று பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த முடிவின் பின்புலத்தில் அவருடைய குழுவில் நடைபெற்ற விவாதங்கள் ரெம்ப முக்கியமானவை, அவருடைய குழுவினர் மத்தியிலேயே அரசியல் ரீதியில் முன்னேறியவரும், அமைப்புத் துறையில் ஆற்றல்மிக்கவரும், தொலை நோக்கோடு சிந்திக்கக்கூடியவரும் சிறந்த கிளர்ச்சி யாளரும் பகத்சிங்தான்.

மற்ற தோழர்கள் சொல்கிறார்கள். “நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டாம் நாங்கள் போகிறோம். நீங்கள் போகக்கூடாது, நீங்கள் சாகும் நிலைமை ஏற்படக்கூடாது, நீங்கள் கட்சிக்கு தேவை. அந்த வேலையை நாங்கள் செய்கிறோம்” என்று வாதாடுகிறார்கள்.

பகத்சிங் சொல்கிறார், “ இது ஒரு அரசியல் நடவடிக்கை, நாம் யாரையும் கொல்லப் போவதில்லை. இது வெறும் வெடிச்சத்தத்தையும் புகையையும் உருவாக்கப் போகின்ற ஒரு குண்டு. இதில் கைதாகி நீதிமன்றத்தை, அந்த மேடையை  நம்முடைய அரசியல் கிளர்ச்சிக்கு, புரட்சி பிரச்சாரத்திற்கு, தேச விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல அதற்க்கான ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவனாக நான்தான் இருக்கிறேன்.. அதனால்தான் நான் இதை செய்வதன் மூலம்தான் இந்த நோக்கம் நிறைவேறும். இது மரணதண்டனைக்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். எனினும் அது செய்யப்பட வேண்டும் என்றுதான் நான் செல்கிறேன்.. நான் இறப்பதன் மூலம்தான், இந்த அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் மூலம் தான்,நம்முடைய புரட்சிகர அரசியல் என்பது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் என்று விளக்குகிறார். பகத்சிங.

ninaivu-koorthal-back

தகவல் --- “  கீழைக்காற்று வெளியீட்டகம்”  
நினைவு கூர்தல்: தடுமாற்றமும் போராட்டமும்- மேற்படி நூலிருந்து.......

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வழியிலே போறவன் அல்ல...வலிகளை சொல்கிறவன் நண்பரே....

      நீக்கு
  2. சிறப்பானதொரு பதிவு நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. மிகப்பெரிய உண்மையில்லையா?.அறிய வார்த்தைகள் அடங்கிய பதிவு. அருமை நண்பரே,,,, நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வையை வரவேற்கிறேன்.
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. உயிரை துச்சமென எண்ணி கடமையை செய்த பகத்சிங் அல்லவா ,உண்மையான புரட்சித் தலைவன் ?

    பதிலளிநீக்கு
  6. ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ள பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....