சனி 09 2015

அவர்கள்தான் தேச பக்தர்களாம்.....!!!!!!!!


modi-cartoon
படம்-வினவு.
அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று பறை
சாற்றிக் கொண்டார்கள்.

அவர்களின் தேச பக்தியை
தேச மக்களுக்கு வெளி
காட்ட பன்னாட்டு முதலாளிகளுக்கு
நாட்டை கூறு போட்டு
விற்றார்கள். அவர்களின் போலி
தேச பக்தியை எதிர்போர்களுக்கு
தேச விரோதிகள் என்று முத்திரை
பட்டம் கொடுத்து கௌரவித்தார்கள்.

அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று காட்டிக்
கொண்டார்கள். கூறு போட்டு
விற்ற தேசத்தின் வளர்ச்சிக்காக
 வேலை வாய்ப்பை பெருக்குவோம்
என்று முழங்கினார்கள்.-- ஆனால்
அடிமை வேலை செய்ய வேண்டும்
 என்று உத்தரவு போட்டார்கள்

அவர்கள் தங்களை தேச
பக்தர்கள் என்று பீற்றிக்
கொண்டார்கள். தேசத்தில்
தொழில் வளர்ச்சியை அதிகப்
படுத்துவதற்க்காக தொழிலாளர்
சட்டத்தை திருத்தினார்கள். அதோடு
அந்த தேசத்தின் தொழிலாளர்
உரிமைகளை ஒழித்துக் கட்டினார்கள்.

அவர்கள் தாங்கள்தான் உன்மையான
தேச பக்தர்கள் என்று மார் தட்டினார்கள்
அந்த மார்தட்டின் ஊடே  தேசத்தின்
முதுகெலும்பு விவசாயிகள் என்றார்கள்.
அந்த முதுகெலும்பு விவசாயிகளின்
நிலத்தை புடுங்குவதற்கு வஞ்சமாகமாய்
நில எடுப்பு சட்டம் கொண்டு வந்தார்கள்.

இன்னும்அவர்கள் தாங்கள்தான்
இந்தநாட்டின் தேச பக்தர்கள்
என்று  கொக்கரித்தபடி 56
இஞ்ச் மார்பை காட்டிக்கொண்டு
பெருமையோடு வலம் வருகிறார்கள்.


11 கருத்துகள்:

  1. மார்தட்டுபவன் ஒருவனின் மார்பில் குண்டுகள் போட்டால் மற்றவன் தட்ட மாட்டான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  2. இவர்களின் தேசபக்திக்கு இன்னும் யார் யாரெல்லாம் சாக வேண்டியிருக்குமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு நாட்கள் தானே ஆகியிருக்கிறது. போகப்போகத் தெரியும்.நண்பரே.......

      நீக்கு
  3. தேசத்தின் முதுகெலும்பு விவசாயிகள் என்ற
    தேச பக்தர்களா - அந்த அவர்களின்
    நிலத்தை புடுங்குவதற்கு வஞ்சமாகமாய்
    நில எடுப்பு சட்டம் கொண்டு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் அந்த தேசபக்தர்களின் தேச பக்தி ..நண்பரே....

      நீக்கு
  4. பதில்கள்
    1. கொடுமை..கொடுமையின்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஆடிக்கிட்டு வந்த கதைதான் நண்பரே...

      நீக்கு
  5. தங்கள் வார்த்தைகள் தான் விவசாயிகளுக்கு ஆறுதல்.வேறு என்ன செய்ய முடியும்.விவசாயை மதிக்காத நாடு அழியும் என்பது உண்மையானால் நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. என் கருத்தைக் கானோம். விவசாயம் விவசாயி மதிக்கப்படாதவரை நாடு உருப்படாது. தன் நலனுக்காக விவசாயி பற்றி இங்கு ஆட்சியாளர்கள் பேச ,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவசாயை மதிக்காத நாடு அழியும் என்பது - உண்மையானால் நடக்கட்டும்.---ஒரு போதும் நடக்காது நண்பரே....

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...