செவ்வாய் 02 2015

அட ராமா..!!.நீ எப்படா..மாமாவானே...???

கூகுள் க்கான பட முடிவு
படம்-www.bbc.co.uk
தமிழ்நாட்டில்  பிளாக்கர் மூலமாக இந்தியை பரப்ப முன்வந்துள்ள கூகுள்...

யோவ் கூகுலு....என் தாய் மொழி தமிழையே  பிழை யில்லாமல் எழுத முடியல...... நீ கொடுக்கிற ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கும் தமிழையே சகிக்க முடியலை... இந்த லட்சனத்துல நீரு... நீங்கள் ஏன் இந்தியில் வலைப்பதிவை எழுதக்கூடாது ? என்ற கேள்வி வேறயா.......

மொதல்ல இந்திக்காரனுக்கு  இந்தியில வலைப்பதிவ எழுத சொல்லிக்குடும்மய்யா....

உம் மூலமாக தமிழ்நாட்டில் இந்தியை பரப்ப ஆணையிட்டு இருக்காங்களாா...

 கூகுளே...... இந்தியை பரப்பும் உம்மைப் பார்த்து எனக்கு இப்படித்தான் கேட்கத்தோனுதய்யா....


அட ராமா..!!.நீ எப்படா..மாமாவானே...???



எனது பிளாக்கர் டாஸ்போர்டில் மேலோட்டம் பகுதியில் ஒலிபெருக்கி படத்தை கிளிக் செய்த பின் வந்த இந்தி பரப்பு செய்தி..



நீங்கள் ஏன் இந்தியில் வலைப்பதிவை எழுதக்கூடாது? 

500 மில்லியனிற்கும் மேற்பட்ட இந்தி பேசும் மக்கள் நிறைந்த உலகில், ஆன்லைன் பார்வையாளர்களும் அதிகரித்து வருவதால், இந்தி உள்ளடக்கம் புதிய வாசகர்களைப் பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கலாம். இப்போது இந்தி உள்ளடக்கத்தின் மூலம் லாபம் பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே உள்ள AdSense கணக்கைப் பயன்படுத்தலாம் அல்லது புதிய கணக்கை உருவாக்கலாம். இப்போதே தொடங்கவும்.

31 கருத்துகள்:

  1. இந்தியில் வலைப்பதிவு வருவதில்லையா? தெரியாதே!

    பதிலளிநீக்கு
  2. ரா மா
    மா மா
    என்ன தோழரே முதலெழுத்தை மாற்றி கூகுளை ஆமாம் போட வைத்து விடுவீர்கள்
    போலிருக்கிறதே!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள்தான் என்னை ஆமாம் போட வைக்கிறார்கள் நண்பரே....

      நீக்கு
  3. அட ஆமா! அதானே! ஆனா இது புதுசா இருக்குதே! எங்கள் டாஷ் போர்டில எதுவும் வரவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளோட்டம் பார்க்கிறார்கள் என்னவோ...? இனி..தங்களுக்கும் வரலாம் !!!

      நீக்கு
  4. "கானா பாட்டுக்கு இசையமைக்க லண்டனுக்கு போறாங்க" - இசையமைப்பாளர்களை தாக்கிய ராதாரவி
    https://www.youtube.com/watch?v=HIEE_AP628A

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி. நானும் லண்டன்ல என்ன நடந்தது என்று இங்கேயிருந்து பாத்துக்கிறேன்

      நீக்கு
  5. இவங்கே வெள்ளோட்டம் விட நீங்கதான் வலியா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் தெரியுது நண்பரே.....

      நீக்கு
    2. வட நாட்டிற்குச் சென்ற போது இந்தி தெரியாது என்ற என்னை நோக்கி உணவகச் சிப்பந்தி ஒருவர் கேட்டார் வலிப்போக்கரே..!

      இந்தி நை மாலும்..! ஆர் யு இந்தியன் ? என்று.

      இந்தி பேசத் தெரியாவிட்டால் இந்தியனே இல்லை என்று சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது இந்தியாவில்!

      கூகுளும் இதை ஆரம்பிக்கிறதோ..?

      வேதனை.

      நன்றி.

      நீக்கு
    3. கருத்துரைக்கு நன்றி! நண்பரே....

      நீக்கு
  6. வாக்குப் பட்டையைக் காண வில்லை வலிப்போக்கரே?

    பதிலளிநீக்கு
  7. எனது வலைப்பதிவிலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தியில் வருமானம் பெரும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்து தமிழுக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கூடிய விரைவில் தமிழும் அட்சென்ஸ் வரும் என்று நம்பலாம்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் வரும் வருமானம் போன் பில் கட்டக்கூட போதாதென்று ஒரு பதிவில் படித்தாக நிணைவு நண்பரே..

      நீக்கு
  8. இவையெல்லாம் உங்களை வைத்துதான் நடக்கும் போலும்,
    உங்களிடம் வாங்கி கட்டிக்கொண்டால் வரமாட்டார்கள். நடக்கட்டும் நடக்கட்டும்,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கட்டும் நடக்கட்டும் நன்றாகவே நடக்கட்டும் நண்பரே...

      நீக்கு
  9. ஐரோப்பாவின் பிரான்சில் வசிக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்...

    வலையினால் உலகம் சுருங்கிய இன்றும் பெரும்பான்மை மேலைநாட்டினருக்கு தெரிந்தது இந்தியா என்றால் இந்தி என்பது மட்டும்தான் !...

    மேலும் இதில் இந்திய அரசின் பங்கும் இருக்கும்... சென்ற வருடம் ஊர் சென்றபோது ஸ்டேட் பேங்கில் ஒரு கரும்பலகை... அதில் நாளுக்கு ஒரு ஹிந்தி வார்த்தை கற்போம் என்ற தலைப்புடன் " பாணி என்றால் தண்ணீர் " என்று எழுதி வைத்திருந்தார்கள்... ஏன் ? தென் மாநில மொழிகளை கற்போம் என்று தெலுங்கையோ மலையாளத்தையோ கர்றுவிக்கலாம்தானே ?... மாட்டார்களே அந்த ஹிந்தியர்கள் !

    ராஜிவ் காந்தியின் நவோதயா தொடங்கி இன்றுவரை எதோ ஒரு வரையில் நாடு முழுவதையும் ஹிந்தி மயமாக்க மத்திய அரசு முயன்றுகொண்டுதான் இருக்கிறது!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். இந்த மாடு நல்ல மாடு இல்லை என்பது தெரிந்துவிட்டது அதான் இப்படி....

      நீக்கு
  10. என்ன வேலையெல்லாம் செய்றாங்க......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவுக செய்யிற வேலையைத்தான் பதிவு செய்துள்ளேன் நண்பரே...

      நீக்கு
  11. //என் தாய் மொழி தமிழையே பிழை யில்லாமல் எழுத முடியல...//
    அதானே!அதுக்கே பலர் வலைப்பூவில வகுப்பெல்லாம் எடுத்துட்டிருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வகுப்புக்கே ஒழுங்காக போனாத்தானே ஒழுங்கா எழுத வரும்..அய்யா......

      நீக்கு
  12. கூகிளுக்கு நாம் விரிவாக எழுத வேண்டும்..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள்தான் அவர்களுக்கு விரிவாக எழுத வேண்டும் நண்பரே....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....