பக்கங்கள்

Sunday, May 31, 2015

ஆகா... அரசுப்பள்ளி! ஐயோ!‘..தனியார் பள்ளி..??

பள்ளி மாணவர்கள்
படம்-வினவு


ஆகா...ஓகோ...அரசுப்பள்ளி
அய்யோ.... கொள்ளை தனியார் பள்ளி
அனைத்தும் கொடுக்குது அரசுப்பள்ளி
தாலி அறுக்குது தனியார் பள்ளி
அரசுப்பள்ளி நமது பள்ளி!
தனியார் பள்ளி அந்நியப்பள்ளி

போகாதே போகாதே!
தனியார் பள்ளிக்கு போகாதே!
ஆங்கிலம் வருமுன்னு ஏமாத்துறான்!
அறிவு வருமின்னு ஏமாத்துறான்!
வேலை கிடைக்குமுன்னு ஏமாத்துறான்!

புள்ளய கூட்டிக்கிட்டு போகாதே!
பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு போகாதே!
காசு துட்டுன்னு புடுங்குறான்!
கட்டலைன்னா அடித்து துரத்துறான்!
சொத்தைப் பிடுங்கிடுவான் போகாதே!
நகை நட்டையும் பிடுங்கிடுவான் போகாதே!
தனியார் பள்ளிக்கு போகாதே!

எல்லாம் இருக்குது அரசுப்பள்ளியில்
எதுக்கு ஓடற தனியார் பள்ளிக்கு?
ஐ.ஏ.எஸ் ஆனவரு அரசு பள்ளியில்படிச்சவரு.
வக்கீல்,நீதிபதி விஞ்ஞானிஆனவரெல்லாம்
அரசு பள்ளியில் படிச்சவரு..

விவசாயியும் தொழிலாளியும்
அரசு பள்ளியில படிச்சவரு
தொழில் அதிபரும் அரசுப் பள்ளியில படிச்சவரு.
அரசுப்பள்ளி நமது பள்ளி
தனியார்பள்ளி அந்நிய பள்ளி
வாங்க வாங்க அரசுபள்ளிக்கு
பெருமையல்ல பெருமையல்ல
தனியார் பள்ளி பெருமையல்ல
அனுமதிக்காதீர்! அனுமதிக்காதீர்!!
கல்வி வியாபாரத்தை அனுமதிக்காதீர்!!!

கல்வி- வியாபாரமும் அல்ல
நமது பிள்ளைகள் கடைச்சரக்கும் அல்ல..!!!!

சிந்தனைக்கு--- ஆங்கில வழியில் படித்தா.... திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார்...??????????????

நன்றி!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.

மெட்ரிக் சுரண்டல்
மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்


16 comments :

 1. ஆங்கில வழியில் படித்தா.... திருவள்ளுவர் திருக்குறளை படைத்தார்... ???????

  நெத்தியடி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நெத்தியடி அடித்தாலும் பலருக்கு சொரனை வரமாட்டேன்கிறது நண்பரே....

   Delete
 2. எல்லோரும் அரசு பள்ளியை சேர்க்க ஆரம்பித்தால் ,தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளை தடுக்கப் படும் !

  ReplyDelete
  Replies
  1. பகல் கொள்ளை தடுக்கப்படுவதோடு..அரசு ஆசிரியர்களின் பொருப்பின்மையும் தடுக்கப்படும் நண்பரே

   Delete
 3. தனியார் பள்ளிகள் கொள்ளைகாரர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மறுக்க முடியாத உன்மை நண்பரே......

   Delete
 4. கடைசியிலே ஒரு கேள்வி கேட்டீங்களே... அங்கே நிற்கிறீங்க...! பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. நான் கேள்விய கேட்டுட்டு அங்கயேதான் நிற்கிறேன்..யாரும் பதிலைச் சொல்லி என்னை நகர விடவில்லை நண்பரே..தங்களின் பாராட்டுக்கு நன்றி! நண்பரே......

   Delete
 5. தனியார் பள்ளி கொள்ளையைப் பற்றி அருமையான கவிதை. ஆனாலும் மக்கள் திருந்த மாட்டார்கள். பெரிய வீடு, பெரிய கார் போல நிறைய பணம் கொடுத்து தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது பெருமையான விஷயம். மதுரையில் ஒரு பள்ளி +1 அட்மிஷனுக்கு 2.5 லட்ச ரூபாய் கேட்கிறது. இரண்டு வருடம் படிக்க 5 லட்சம். அந்த பெற்றோர்கள் யாரும் கொள்ளையடிக்கிறான் என்று சொல்லவில்லை. இவ்வளவு பணம் கட்டி சேர்த்திருப்பதை பெருமையாகத்தான் சொல்கிறார்கள். இப்படி பெருமை பேசும் மக்கள் இருக்கும் வரை கொள்ளையடித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. இருக்கப்பட்டவர்கள் அவர்களின் பகுமானத்தை வெளியே காட்டி பீத்திக்கொள்ளட்டும்..ஆனால் அதை பார்த்து இல்லாதவர்களும் பின்பற்றவதுதான் கொடுமையாக இருக்கிறது..

   Delete
 6. அய்யா தங்கள் வேதனை சரி, ஆனா நாங்க கேட்பதில்லை என்று காதை அடைத்துக்கொண்டால் என்ன செய்வது. அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை எங்கு படிக்க வைக்கிறார்கள் என்று கேளுங்கள்.
  வேலை மட்டும் அரசுபள்ளியில்,தன் பிள்ளைகள் மட்டும் தனியார் பள்ளியில்,
  இவர்கள் தான் முதலில் மாற வேண்டும்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வது உண்மைதான்.. அரசு வேலையில் உள்ளவர்கள்தான் மாற வேண்டும்.

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அய்யா...

   Delete
 8. ஆகா...
  படிப்போருக்கு
  அரசுப்பள்ளியே நல்லம்!
  ஓகோ...
  தனியார் பள்ளி...
  பணமுள்ளவருக்கு

  ReplyDelete
  Replies
  1. பணமுள்ளவர்கள் படிப்பதற்க்காக பணமில்லாதவர்கள் படிக்கும் அரசுப்பள்ளியையே ஒழித்துக்கட்டுகிறார்களே அய்யா..

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com