பக்கங்கள்

Saturday, August 22, 2015

அவள் வழியில் அவன்.

படம்-www.worldtamilswin.com


இன்ன நேரத்தில்
இன்ன இடத்தில்
என்னை சந்திக்கவும்
காத்து இருக்கிறேன்
இப்போது வரவில்லை
என்றால் எப்போதும்
என்னை நீ....
சந்திக்க முடியாது.

உடனே வரவும்
என்ற செய்தி
கேட்டு அவன்
பதறி அடித்து
சென்ற போது
அவள் காத்து
இருக்க மனம்
இல்லாமல் போய்
சேர்ந்தாள்.........

எப்படியும் அவளை
சந்தித்தே தீர்வது
என்ற முடிவில்
அவள் வழியில்
அவன்...............

பின் குறிப்பு
அவளை அவன்
சந்தித்து விட்டான்
என்ற நிம்மதியில்
இருவரின் நட்புகள்.

அவனுக்காக காத்திருந்த
அவளையும் சந்திக்க
ஓடோடி வந்த
அவனையும்  கழுவிலே
ஏற்றி தம்
சாதி குலப்
பெருமையை நிலை
நாட்டிய விட்ட
பெருமையில் ஆதிக்கச்
சாதி வெறியர்கள்.

ஆக அவள்
வழியில் அவனை
அனுப்பி விட்டார்கள்


                                .......................................


16 comments :

 1. என்றும் தீராதவெறி சாதிவெறி.

  ReplyDelete
  Replies
  1. இந்தீயாவில் சாதி வெறிதான் தீராத வெறியாக இருக்கிறது

   Delete
 2. Replies
  1. வலியை நீக்க வழி இருக்கிறது. சாதி வெறியை ஒழிக்கும் மருந்தை உபயோகித்தால்.....

   Delete
 3. Replies
  1. வேதனைப்பட்டால்...நோய்க்காடு சாதி வெறிபோல வந்து சேருமாம்...

   Delete
 4. சிலரது குணங்களை மாற்றவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. மாற்ற முடியாதது எதுவுமில்லை அய்யா... சாதிவெறியை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.

   Delete
 5. இதற்கு விமோசனம் எப்போது ?

  ReplyDelete
  Replies

  1. புறத்தில்..அகத்தில் மாற்றம் ஏற்பட்டாலயொழிய இதற்கு விமோசனம் கிடையாது.

   Delete
 6. வணக்கம் வலிப்போக்கரே,
  இது தான் அனைத்திற்கும் அடிப்படையே. இதனைத் தாங்கிக்கொண்டும் சிலர்,,,,,,,,,,
  மாற்றம் என்பது மனதில் மட்டும் தான்.

  ReplyDelete
  Replies
  1. அகத்தில இருக்கும் மாற்றத்தை..புறத்தில்கொண்டு வர வேண்டும் என்பேதே...நல்லவர்களின் போராட்டம்....

   Delete
 7. வேதனையான விடயமே நண்பரே சாதீயை யார்தான் அணைப்பதோ....

  ReplyDelete
  Replies
  1. இந்து தீயை நல்லவர்களும் வல்லவர்களும் அணைப்பர் அப்போது சாதீ தீ இல்லாமல் ஒழியும்...நண்பரே...

   Delete
 8. வேதனை வேதனை....ஹும் என்னதச்க் சொல்ல அறிவு கெட்ட ...இல்லை வார்த்தைகள் தடிக்கின்றன...வேண்டாம் இங்கே..

  ReplyDelete
  Replies
  1. சாதீயை வளர்ப்பவர்கள் அறிவு கெட்டவர்கள்.இல்லை நண்பரே.....பட்டம் பெற்ற படித்த அறிவாலிகள் தான்...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com