பக்கங்கள்

Wednesday, August 05, 2015

நேற்று தடை, இன்று நீக்கம், நாளை...?? நீடிக்காத.. மகிழ்ச்சி..???

படம்-tamil.oneindia.com

இணையதளத்தில் உள்ள சந்து பொந்துகளில் அதாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கைப்போல்  ஆபாசககடைகளை திறந்து கல்லா கட்டிவந்திருந்த  இணையதள சாராயக்கடைகளான  (காம போதைக் கடைகள்) 857-கடைகள்  இழுத்து மூடப்பட்டுள்ளன.என்ற செய்தி கேட்டு


வியாபாரக் கடைகள் இருப்பதால்தானே  சிறுசு முதல் பெரிசுகள் வரை வாடிக்கையாளர்களாக மாறுகிறார்கள். கடையை இல்லேன்னா..வியாபாரியே இல்லேன்னா... வாடிக்கையாளர்கள்  உருவாக வாய்ப்பே இல்லையே... என்று

பெரியவர்கள், சிறுவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள்..  இணைய உலகத்தில் நிம்மதியாக.,காத்து கருப்பு பயமின்றி, தைரியமாக உலா வரலாம்.என்று மகிழ்ச்சியில் மிதந்த நேரத்தில்

ஆபாச இணையதள தடை திடீர் நீக்கம் என்ற திடீர் செய்தி மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் செய்துவிட்டது.

பார்க்க-- முன்வந்த செய்தி....
 இந்தியாவில் நீங்கள் பார்க்கமுடியாத 857 ஆபாச போதை இணையதளங்களுக்கு தடை!!

14 comments :

 1. தோழரே ! எல்லாம் சரிதான்! கம்யூனிசவாதியான நீங்கள் இந்த தளங்களின் இணைப்பை உங்கள் தளத்தில் சுட்டுவது சரிதானா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

  ReplyDelete
  Replies

  1. தவறுதான்...அதனால்தான் எனதுதளத்தில் காட்டாமல் மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்க்காக...சுட்டுவதை சரிசெய்துள்ளேன்.

   Delete
 2. இங்கு எல்லாவ்வற்ருக்கும் எதிர்ப்பு!செய்தால் எதிர்ப்பு ;செய்யாவிட்டாலும் எதிர்ப்பு! எனவே இப்படியெல்லாம் நடக்கவே செய்யும்

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் போதையோடு இநதப் போதையையும் ஒழிக்க வேண்டும் அய்யா...

   Delete
 3. வாலிபர்கள் இதையே பார்த்துக் கிடந்தால் ,நமக்கு எதிராக போராடவர மாட்டார்கள் என்ற நல்ல எண்ணம்தான் இதற்கு காரணமாய் இருக்குமோ :)

  ReplyDelete
  Replies
  1. தாஙகள் சொல்வது போல் எல்லாம் அநத நல்ல எண்ணம்தான் நண்பரே....

   Delete
 4. கலிகாலம் வேறென்ன......

  ReplyDelete
  Replies
  1. கலிகாலம் தொடங்கிவிட்டதா?அல்லது முத்தி விட்டதா ?? எனறு தெரியவில்லை நண்பரே...

   Delete
 5. இவ்வளவு அவசரமாக அந்தத் தடையை நீக்கிக்கொள்ள என்ன காரணமோ!

  ReplyDelete
  Replies
  1. அது ஒலக ரகசிமாய் இருககலாம் நண்பரே...

   Delete
 6. வணக்கம் வலிப்போக்கரே,
  தாங்கள் அந்த கட்சியா?

  ReplyDelete
  Replies
  1. நான்., அந்தக் கட்சியை சேர்ந்தவன் மாதிரியா தங்களுக்கு தெரிகிறேன் நண்பரே

   Delete
 7. இதெல்லாம் சகஜமப்பா...கொண்டுவருவாங்க அடுத்த நாளே நீர்த்துவிடும்....நம்ம ஊரில் சட்டம் என்பதே தேவையில்லை என்று எண்ண வைக்கும்....பல சமயங்களில்...

  ReplyDelete
 8. உத்தரவு போடும் நீதிமன்றமே சட்டம் போடும்போது..நம்ம ஊரில் எந்தச் சட்டமே தேவையில்லை நண்பரே...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com