திங்கள் 17 2015

வெறிநாய் கடியிலிருந்து உயிர் பிழைத்த முதல் மனிதனின் கம்பீர மரணம்.

Louis Pasteur.jpg
படம்-https://ta.wikipedia.org/s/13g -லூயி பாஸ்டர்

வெறி நாய்கடிக்கான தடுப்பு  மருந்தை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு மருத்துவ விஞ்ஞானி லூயி பாஸ்டர் . தான் கண்டுபிடித்த மருந்தை ஒரு மனிதனின் மீது செலுத்தி சோதித்துப் பாரப்பதில் பெரிதும் தயங்கியவர், மனித உயிரின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பிற்கு அதுவே சன்றாக இருந்த்து.

1885 ஆண்டு ஜூலை 6ந்தேதி ஜோசப் மெய்சர் என்ற 9 ஒன்பது வயது சிறுவனின் உடலில் தனது மருந்தைச் செலுத்தி,வெறி நாய்கடி நோயிலிருந்து அவனை குணமாக்கினார் லூயி பாஸ்டர்.

வெறி நாய் கடியிலிருந்து உயிர் பிழைத்த உலகின் முதல் மனிதர் ஜோசப் மெய்சர்தான். லூயி பாஸ்டர் மறைந்த பின்னும் லூயி பாஸ்டர் இறந்த பின்னும் லூயி பாஸ்டரின் ஆய்வக் கூடத்தின் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

1940-ல் பாரீஸ் நகரை ஆக்கிரமித்த இட்லரின் படை, லூயி பாஸ்டின் ஆய்வுக் கூடத்தில் நுழைந்தது. “ பிரெஞ்சு தேசத்து நாயகன்என்று மக்களால் போற்றப்பட்ட லூயி பாஸ்டரின் உடலை கல்லரையிலிருந்து தோண்டி எடுத்து , வெளியில் வீசுமாறு காவலாளி ஜோசப் மெய்சருக்கு ஆணையிட்டது இட்லரின் பாசிச படை..

பாசிஸ்டு வெறிநாய்களுக்கு அடிபணிய மறுத்த மெய்சர் லூயி பாஸ்டருடைய கல்லறையின் எதிரியிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை, களவாடி, அவற்றை முடக்கி தமது லாப வெறிக்காக  மக்களை கொல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

ஜெர்மன் நாசிகள் செய்ய முயன்ற அவமதிப்பைக் காட்டிலும். இழிந்த முறையில் அந்த மாபெரும் விஞ்ஞானியை அவமதிக்கின்றன். இன்றைய ஏகாதிபத்திய வெறிநாய்கள்....

நன்றி!  மருத்துவ அரசியல்கீழைக்காற்று வெளியீடு.

12 கருத்துகள்:

  1. வெறி நாயை விட கீழானவர்கள் பன்னாட்டு முதலாளிகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறி நாயைவிட கீழானவர்கள் என்பது உண்மைதான் நண்பரே....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....