பட்ம-https://ta.wikipedia.org/.. |
கொஞ்சுன்னு படித்த எனது நண்பர்
ஒருவர். என்னிடம் இப்படிக் கேட்டார்.
செவ்வாயக்கு ராக்கெட்டு.... அது
பேரு கூட...ம்ம் மங்கலயான் எதுக்கு அனுப்பினாங்கே........
எப்ப அனுப்பனாங்க...... அதப் போயி இப்ப கேட்குறீங்க..... கேட்டேன்.
அத எப்ப அனுப்புனா... என்னப்பா......எனக்கு தெரியும்போதுதானேப்பா கேட்கமுடியும் அத வுடு... எதுக்கு அனுப்புனாங்கே..அதச் சொல்லு” என்றார்.
அய்யே...... அது தெரியாம.... நீ ஒரு குடி மகனா இருக்கீயப்பா.... சே...
மானக் கேடுப்பா.......
இந்தாப்பா...நான் குடிமகனா இருக்கிறது. ஓனக்கு தெரியுமா....??? நீய்யும் குடிமாட்டே.... குடிக்கிறவனையும் குடிக்க் விட மாட்டுற..... அப்புறம் எப்படி குடி மகனா இருக்கிறது... சரி சரி.. சொல்லு.... எதுக்கு அனுப்புனாங்கே........
சரி...சரி.... எனக்கு தெரிஞ்ச சொல்றேன்.
நான் சொல்றது பேப்பர்ல எல்லாம் வராதது தெரியுமில்லே......
அடச்...சொல்லப்பா...... எதுக்கு அனுப்புனாங்கே......ன்னு
செவ்வாயிலே குடியேறும் எதிர்கால சந்ததியினர்க்கு..நம்ம நாட்டுல மாதிரி ரோட்டோரம், கம்மாக்கரை வரப்பு வயலுகாட்டுல ..மலஜலம் கழிக்கிற மாதிரி செவ்வாயில கழிக்க்கூடாதுன்னு.. கழிப்பறை கட்டுறதுக்கு மங்களயான அனுப்பி இருக்காங்கப்பா.....
“நெஜமாகவா..”......???
“இப்படி சந்தேகப்படுவீங்கன்னுதான் நா.... சொல்லுறதே....... இல்லப்பா”...
“அங்கே கட்டி முடிச்சுட்டாங்களா”.......????
“அங்க வேலைக்கு போனவங்கே.... இன்னும் திரும்பி வந்துட்டாங்களப்பா...”...???
“,வந்தாத்தான்..என்ன..பாக்க வந்துரவாங்கல்ல..............”
“அப்போ...இன்னும் வேல முடியல போலிருக்கு...”
“அப்போ...இன்னும் வேல முடியல போலிருக்கு...”
செவ்வாய்க்கு
அடுத்தப்படியா...... உங்க ஊருக்கு பக்கத்திலே.. கப்பல் ஊரிலே 4..50 இலட்சத்திலே கழிப்பறை கட்டி
இருக்காங்க.... அது தெரியுமா.. ஒனக்கு?
ஆ........ஆ....எங்க ஊரு பக்கத்திலா...????
வாய
பொளக்காத...... நா... சொல்ற கேளு... கேட்டுபுட்டு ஒங்க ஊருக்கு போகும்போது கப்பல்
ஊரில் இருக்கிற கழிப்பறையை பாரு... நா சொன்னது உண்மையா? பொய்யான்னு.....
என்னப்பா....
..“.ம்ம.
சரிப்பா....”
அது பேரு என்
வாயிலயே நுழையமாட்டுது..“ பயோ டை ஜஸ்டர் கழிப்பறை. அந்த கழிவறை கோப்பைகள் உள்ளே
கீழே வடிவமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் தொட்டியில் ஏராளமான பாக்கிடிரியாக்கள்
வளர்க்கப்படுகிறது. இந்தப் பாக்கிடீரியக்காள் சேர்ந்து மனித கழிவுகளை மட்கச் செய்து
தண்ணீரை சுத்தரித்து வெளியே தள்ளும், இந்த்த் தண்ணீரைக் கொண்டு, செடி கொடிகளை
வளர்க்கலாம். மேலை நாடுகளில் இந்த முறை கழிவறைகளைத்தான் அதிக அளவில் பயன் படுத்தகிறார்களாம். என்றபோது.
அத்தி...அய்யோ..
அந்தத் தண்ணிய வச்சு செடி கொடிய வளக்குறாஙகளா...? என்று அய்யறப்பட்டார்..
யோவ்...ரெம்பவும்
அய்யரப்படாதே...... மதுரை மாநகரத்து சாக்கடை தண்ணீர் எல்லாம் அவனியாபுரம், கம்மாயில் போயி.. அங்கு விளையுற தானாப்பா... நீ சாப்புடுற...
கீரை வகைகள் எல்லாம் அங்க விளஞ்சுதான் முக்கால் வாசி விற்பனைக்கு
வருது .. தெரியுமா...ஒனக்கு..???
“ஏய்....
போப்பா..... அப்படி எல்லாம் இருக்காதுப்பா..”....
அப்படின்னா
செவ்வாயில... கழிப்பறை கட்டுறதுக்குத்தான் மங்கலயான் அனுப்பி இருக்கிறதும்
பொய்யா......
“அது ....உண்மையா இருக்கலாப்பா.”.......
“அப்ப...
கப்பல் ஊர்ல கழிப்பறை கட்டி இருக்கிறது...”
“ நா....
ஊருக்கு போவேன்ல... அப்ப பாத்துட்டு வந்து சொல்றேன்..
“அப்பச் சரி. ஒன் சந்தேகம் தீர்ந்ததுல.... இனி நான் போகலாம்மா.....”
அவர்.தாராளமாக போகலாம் என்றவுடன். வேறு ஒருவர் என்னைத் தேடி வந்து கொணடு இருநததைக் கண்டவுடன்.. சற்றும் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
.........................................................
நண்பா, அவங்கே இன்னுமா வரலே...
பதிலளிநீக்கு“,வந்தாத்தான்..என்ன..பாக்க வந்துருவாங்கல்ல.........நண்பா........”
நீக்குகழிவு நீர் சுத்திகரிப்பை பற்றிய விளக்கம் அருமை
பதிலளிநீக்குநன்றி! நண்பரே....
நீக்குஇப்போதுதான் கர்நாடகாவில் ஒரு பஞ்சாயத்துத் தலைவி 24 நாட்களில் 173 கழிவறைகள் கட்டி தன் கிராமத்தினருக்குச் சேவை செய்ததைப் படித்துவிட்டு வந்தேன்!
பதிலளிநீக்குசெவ் வாயில் இன்னும் கட்டி முடிக்கவில்லையே நண்பா....
நீக்குசில உண்மைகளை அறிந்து கொண்டால்... ம்ஹீம்...!
பதிலளிநீக்குசில அல்ல..பலஉண்மைகளைஅறிந்து கொண்டாலும்.....ம்ஹூம்.....
நீக்குகொஞ்சுன்னு ஆரம்பித்து உள்ளீர்கள் ,யாரை கொஞ்சுவது ?
பதிலளிநீக்குகழிப்பறை கட்டுவதற்க்காக செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவங்களைத்தான் கொஞ்ச வேண்டும்.. நண்பரே....
நீக்குஅந்தக் காலத்துல மட்டும் இல்ல இப்பக் கூடா வயக்காட்டு வரப்புல தானே உரம் பாச்சுறோம்...அதனால இந்த பயோ கழிவறை எவ்வளவோ மேல்..மேலை நாடுகளில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான்..
பதிலளிநீக்குஅப்படியாவது கழிப்பறைகள் வந்தால் நலம்..அம்மா படம் போட்டு ஊரே கழிப்பறைஎன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்..நண்பரே! ஹஹஹஹ்
அப்படியாவது கழிப்பறை வந்தால் நலம்தான்....நண்பரே.....
பதிலளிநீக்கு