சனி 08 2015

முயற்சியாகுமா...? திருட்டாகுமா....?? ஒரு சந்தேகம் ...???

படம்-lkarthikeyan.wordpress.com


புளிய மரத்தில் தேன் கூடு
தேன் குடிகக ஆசை தான்
தேன் கூடு உயரத்தில் இருக்கிறது

மரத்தில் ஏறினால்அதன் சொந்தக்காரர்
சத்தம் போடுவார் தேன் அவருக்கு
சொந்தமாம் அவர் இல்லாத நேரத்தில்
மரம் ஏறினால்......அது.....

ஆசைப்பட்டதை அடைய நிணைக்கும் எனக்கு
முயற்சியாகுமா....? திருட்டாகுமா...???

18 கருத்துகள்:

  1. ஆசை என்றால் என்ன...? பேராசை என்றால் என்ன...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுக்கும் பொங்கலை பெற்றுக் கொள்வது ஆசை, சட்டியிலுள்ள எல்லா பொங்கலையும் கேட்பது பேராசை..---. இப்படித்தான் எங்க வாத்தியார் சொன்னார் சார்.....

      நீக்கு
    2. சார்...இப்படியும் சொல்ல லாம் சார்,
      இத்துணுன்டு பொங்கலுக்கு காத்திருப்பது ஆசை...

      மொத்த சட்டியிலுள்ள பொங்கலும் கிடைக்க வேண்டும் என்று நிணைப்பது பேராசை சார்......சரியா சார்

      நீக்கு
  2. இதே மரம் நம்முடையதாக இருந்து பிறர் ஏறினால் நாம் என்ன செய்வோம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டைக்காரனாக இருந்தால்.. கொளவியே அவனை கடிகட்டும் என்பேன். ஏனெனறால் அவனுடன் சண்டை போட்டு போலீசு நிலையத்தில் தண்டம கடடுவதைவிட கொளவி கடியே அவனுக்கு தண்டனைதான். .வேறு ஒருத்தா் என்றால். 50+50 என்று ஒப்பந்தம் செய்து கொள்வேன் ...சார்.....

      நீக்கு
  3. ஆசைப்பட்ட எல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம் :)

    பதிலளிநீக்கு
  4. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஜக்கி! இப்போதெல்லாம் அத்தனைக்கும்தான் ஆசைப்படுகிறோம் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனைக்கும் ஆசைப்ப்டடா.... எதுவுமே கிடைக்காது சார்.

      நீக்கு
  5. ஒருவருக்கு முயற்சி. மற்றவருக்கு திருட்டு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வலிப்போக்கரே,
    திருட்டு தான்,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெற்றிக் கண்ணை திறந்தாலும் திருட்டு திருட்டுதான்.. நன்றி! நண்பரே...

      நீக்கு
  7. அடுத்தவர் எல்லை என்றால் நம்முடையது அல்லவே. ஆசையில் விழுந்தால் கிடைக்கும் துன்பம் வலிது என்றால்...எதற்கு ஆசைப்படுகிறாய் ராஜகுமாரா...(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா?!! ஹஹ)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் ராஜகுமாரன் எதற்குமே ஆசைப்படாதவன்... ஆசைபபடுவது தவறு என்று தெரியும் அரசே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....