பக்கங்கள்

Thursday, September 17, 2015

“சோறு விற்பனைக் கடை வந்த வரலாறு"..

தலைப்பைச் சேருங்கள்

அம்மாத்தாய் என்ற பெயரைச் சுறுக்கி “அம்மா மெஸ்என்று பெயரிட்ட சோற்று விற்பனைக் கடையை கவி நாட்டு  பேரரசர் திறந்துவைத்து உரையாட்டிய செய்தியை பார்த்தபோது.. பெரியார் சிலைக்கு எதிரே உள்ள ஒரு சோறு  என்ற  அசத்தல் பெயரிட்ட சோறு  கடையையும் பார்க்க நேரிட்டது.

ஆரம்பத்தில் சோறு விற்பனை கடை பற்றி படித்தது என் நிணைவுக்கு வந்தது...வந்த நிணைவு   மறந்துவிடும் என்பதால் இந்தப்பதிவு....

விசய நகர பேரரசர் காலம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டு சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு..பின்னர்ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் எனப்படும். உணவு விற்பனைக் கடைகள் தொடங்கப்பட்டன.

கடந்த நூற்றாண்டின் பிற்ப்பகுதியில்தான் நகரங்களிலும் கிராமங்களிலும் காசுக்கு சோறு விற்கும் கடைகள் உண்டாகின.

அப்பொழுதுகளில்கூட நாலுவர்ணசாதி மதத்தைச்சேர்ந்த பிராமணர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர் சாதியினரும், முஸ்லீம் மத்த்தைச் சேர்ந்தவர்களுமே..தங்கள் தங்கள் சாதியினருக்கு மட்டுமே உரிய சோற்றுக் ( உணவங்கள்) கடைகளை நடத்தி வந்திருக்கின்றனர்.

போலிச் சுதந்திரத்துக்குப் பின்னரும் பிராமணர்கள் நடத்தும் கடைகளில் பிராமணர்கள் மட்டுமே உண்ணும் கடைகள் இருந்தன.

இவற்றை எதிர்த்து பெரியாரும், பெரியாரின் தொண்டர்களும் விடப்பிடியான மறியல், மற்றும் போராட்டங்கள் செய்த பின்னர்தான. சாதிக்காரர்களுக்கான  சோறு விற்கும் அவ்வழக்கம் ஒழிக்கப்பட்டது..


நனறி! பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் “ பண்பாட்டு அசைவுகள்என்ற நூலிருந்து..


12 comments :

 1. அறியாத தகவல்கள் நண்பரே நன்றி

  ReplyDelete
 2. "அவ்வழக்கம் இன்னும் ஒழிக்கப்படவில்லை நண்பரே!! ஒட்டு வாங்கியவர்கள் "இறக்குமதி அரிசியையும் ஒட்டு போட்டவர்கள் கூப்பன்கடை அரிசியயும் சாப்பிடுகிறார்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாமா ? நண்பரே....

   Delete
 3. உணவு உலா வந்த செய்தியை
  உமது பாணியில் தந்தமைக்கு நன்றி தோழரே!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 4. அறியாத தகவல் நண்பரே,,,
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. ஹோட்டல் ஆர்யாக்கள் நிரம்பியிருப்பது நம்ம மாநிலத்தில்தானே /என் பதிவிலும் இன்று இதுதானே :)

  ReplyDelete
  Replies
  1. அப்படியா.!!....தங்கள் பதிவிலும்..இதுதானா....!!!

   Delete
 6. புதிய தகவல்கள் தெரிந்து கொண்டோம் நண்பரே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com