பக்கங்கள்

Wednesday, September 16, 2015

குடிகெடுத்த புனிதவதியின் வரலாற்றை மறக்காமல் வந்து சொன்ன அண்ணன்...


முன்கதை படிக்க---...என்னப்பா.....நடக்குது...நாட்டில...

இந்தா வந்து சொல்றேன்பா..என்று சொல்லிவிட்டு போன அண்ணன் 

பின்னர் ஒருநாள் ..அவரின் கட்சி தலைவர். கன்டிசன் பெயில் முடிந்து சென்ற பிறகு வந்தார். கூட்டமாக கூடியிருந்த தம்பிகளிடம் வந்து நின்றார். அதில் ஒரு தம்பி அண்ணன் சொன்னதை மறக்காமல்

“அண்ணே...குடிகெடுத்த  புனிதவதியின்  வரலாற்றை சொல்றேன்னு  சொன்னிங்களே  ...அண்ணே.. என்றார்.

ஆ..... அந்த புனிதவதியைப்....பத்தின வரலாறுதானே.......??? என்றார்.

ஆமாண்ணே..என்றனர்..தம்பிமார்கள்.

நான் சொல்வதை விட உங்களுக்கு கூடுதலாக வரலாற்றை கொண்டு வந்திருக்கேன் தம்பி மார்களே...!!  என்று கூறியபடி ...  தன் கையில் மடித்து வைத்திருந்த  புத்தகத்தை காட்டி இந்த புத்தகமே உங்களுக்கு புட்டு புட்டு வைக்குமடா..என்றுவிட்டு அந்தத் தம்பிமார்களில ஒருவனை... அந்தப் புத்தகத்தை கொடுத்து.... இதிலிருந்து  ...சத்தமா  படிடா... என்றார்.

“புதிய ஜனநாயகம்” என்ற அந்தப் புத்தகத்தை வாங்கிய தம்பி அண்ணன் சொல்லிய பகுதியிலிருந்து    சத்தத்துடன்  படித்தான்.

puthiya-jananayagam-september-2015
தமிழகத்தில் பொறுக்கி அரசியலின் பரிணாம வளர்ச்சி !

அண்ணா-கருணாநிதியின் வெறும் சினிமா கவர்ச்சி அரசியலாகச் சீரழிந்து, இறுதியில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கும்பலின் பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலாகப் பரிணமித்தது. இப்போது அதை சாராயம்-கறி பிரியாணி-ரூபாய் நோட்டு பரிமாறுவதும், ரிக்கார்டு டான்சு, சினிமா நடிக-நடிகைகளின் காமெடி, கவர்ச்சிப் பேசசுகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் என்று மக்களது ஆதரவைத் திரட்டுவதும், இவற்றுக்கு ஏற்பாடு செய்யும் பிரமுகர்களையே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மேயர்களாகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பதும், போலீசு, அரசு அதிகாரிகள், நீதிபதிகள் இலஞ்ச-ஊழலில் தாராளமாக மிதக்க அனுமதிப்பதும், இவர்களையெல்லாம் வைத்துத் தேர்தல் தில்லுகளில் தன்னை யாரும் வெல்ல முடியாதவாறு பிழைப்புவாதப் பொறுக்கி அரசியலை ஜெயலலிதா உச்சத்துக்குக் கொண்டுபோய்விட்டார்.


ஜெயா வழிபாடு
படம்-வினவு

பழைய சினிமாக்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருடன் அரைகுறை ஆடையுடன் தான் போட்ட கவர்ச்சி ஆட்டங்களைக் கூச்சநாச்சமின்றி இன்னமும் ஒளிபரப்பித் தனது ரசிகர்களுக்குக் கிளுகிளுப்பூட்டிவரும் புரட்சித் தலைவியை இளங்கோவனுடைய பேச்சு அவமானப்படுத்தி விட்டதாகக் கூறித் தமிழகமெங்கும் மேற்படிக் கூத்துகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஜெயலலிதா என்னவெல்லாம் பேசி இப்போதைய நிலைக்கு வந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற துணிச்சலில் இப்படி ஆட்டம் போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயாவின் அரசியல் தலைவர் என்பதற்கு மேல் என்ன உரிமையில், உறவில் அவரது பிண வண்டியில் ஏறித் தலைமாட்டில் உட்கார்ந்து அடாவடி செய்தார்!

அவரோடு சேர்த்து உடன்கட்டைப் பேச்சுப் பேசினார்! எம்.ஜி.ஆருக்கு பாலில் விஷம் கொடுத்துக் கொன்றதாக ஜானகி மீது பழிபோட்டார்;

எம்.ஜி.ஆரின் முன்னாள் நாயகி சரோஜாதேவியை மோர்க்காரி என்று வசைபாடினார்.

‘இராஜீவைக் கொன்ற குற்றவாளி’ கருணாநிதியுடன் தேர்தல் கூட்டுவைத்த சோனியாவைப் பத்தினியா என்று கேட்டு, அவரது இத்தாலி பூர்வீகத்தைக் கேலி செய்தார்.

சட்டமன்றத்தில் தன்னைத் தி.மு.கழகத்தினர் மானபங்கபடுத்தி விட்டதாகத் தலைவிரி கோலத்துடன் நாடகமாடினார் அந்தப் புனிதவதி,

தன் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடச் செய்தார் என்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்துக்குத் தனது மகளிரணியை ஏவிவிட்டு, சுப்பிரமணியசுவாமி முன்பாக ஆடையைத் தூக்கிக் காட்டி, ஆபாசக் கூச்சல் போடச் செய்தார்;

சொத்துக் குவிப்பு வழக்குக்கு அனுமதியளித்தார் என்பதற்காக ஆளுநர் சென்னாரெட்டி தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாகப் பகிரங்கமாகப் புளுகினார்.

இப்படித் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளும் மாதரசியை இளங்கோவன் அவமானகரமாகப் பேசிவிட்டார் என்று கொந்தளித்துப் போகிறார்கள், அவரது கூலிப்படையினர்.
பணம் வாங்குவதற்காகவே தம்மைக் கற்பழித்துவிட்டதாக போலீசு மீது புகார் கூறுகிறார்கள் என்று வெட்கமின்றி, மனச்சாட்சியின்றி தமிழ்ப் பெண்கள் மீது பழிபோட்டவர்தான், இந்த ஜெயலலிதா!

இதையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லுங்கள்! எதையாவது செய்து, யாரையாவது அவதூறாகப் பேசி தன் மீது கவனத்தை ஈர்த்து அரசியல் ஆதாயம் அடைவது என்கிற ஜெயாவின்

அதே அதிரடிப் பொறுக்கி அரசியல் உத்தியைத்தானே இளங்கோவன் கையிலெடுத்துக் கொண்டுள்ளார்! இதற்காக நாமோ தமிழக மக்களோ ஏன் அக்கறைப்பட வேண்டும்!


தம்பி ..படித்து முடித்தவுடன்... தயாராக கையில் வைத்திருந்த தேநீரை கொடுத்து குடிக்க வைத்த அண்ணன். தம்பிகளை பார்த்துக்  சொன்னார்.

மையில நணச்சு பேப்பரில் அடிச்சா மறுத்து பேச ஆளில்லை...மாதிரி இல்லப்பா...இந்த புத்தகத்துல படிச்சது ...அம்புட்டும் உண்மையான  20,21 நூற்றாண்டு நடந்த வரலாறுப்பா... என்று சொல்லிவிட்டு... நகர்ந்தார்.....

கூட்டத்திலிருந்து  ஒரு தம்பி சொன்னார்..

டேய்.....இது வரலாறு இல்லடா.........குடிகெடுத்த  புனிதவதியின்  அசிங்கம்டா ........?ஃஎன்றார்.

9 comments :

 1. இத்தனை அசிங்கம் தெரிந்தும் மறுபடி மறுபடி புனிதவதியைத்தான். கைகட்டி குனிவதும், குலவிலக்கே என்று குமுறும் பைத்தியகாரர்கள் அதிகம் உள்ள நாடு நம் தமிழ்நாடு!! நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. சமுக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

   Delete
 2. வயித்தெரிச்சலாக இருக்கு நண்பரே என்னைக்குத்தான் நம்மஆளு உணருவானோ.... விநாயகா..... நீதான் நண்பர் வலிப்போக்கன் மூலம் சொல்லி விடனும்...

  ReplyDelete
  Replies
  1. அந்த விநாயகரையே நம்ம ஆளுதான் காப்பாத்துறான் நண்பரே.....

   Delete
 3. நம்ம ஆளுங்க திருந்துவாங்க?? ஹும் நடக்காத ஒன்று...

  ReplyDelete
 4. என்றாவது ஒரு நாள் திருந்தவார்கள்...நண்பரே....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com