சனி 26 2015

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அவர்கள்...!!!



விடுதலைப் போரின் வீர மரபு
படம் -வினவு
அதோ

தூக்கு மேடையை எதிர் நோக்கி காத்திருக்கிறார்   பகத்சிங். தன்னை விடுவிப்பதற்க்காக, ஆங்கில அரசிடம் கருணை மனு போட்ட தன் தந்தையை “ வேறு யாரும் இதை செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்” என்று கோபம்  தெறிக்க கண்டிக்கிறார் பகத்சிங்.



திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
                                                                         திப்பு சுல்தான்
 மார்பில் குருதி கொப்பளிக்க போர்க் களத்தில் சரிந்து கிடக்கிறார் திப்பு.  “மன்னா, யாரேனும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்” என்று கூறிய தன் பணியாளரை  “ முட்டாள்.....வாயை மூடு” என்று எச்சரிக்கிறார் திப்பு.


குண்டடிப்பட்டு,மகன்கள்,பேரன்கள்,சகவீரர்கள் என நூற்றுக் கனக்கானருடன்
தூக்குக்காக காத்திருக்கிறார் சின்ன மருது. “சமாதானம் பேசலாம்” என்று ஆசை காட்டுகிறான் துரோகி கௌரி வல்லப உடையத் தேவன் . தனது குடி வழியே தூக்கில் தொங்கப் போகும் காட்சி மணக்கண்ணில் தெரிந்தும் அந்தத் துரோகியை காறி உமிழ்கிறார் சின்னமருது.



கைகளைப்  பின்புறம் பிணைத்து கட்டபொம்மனை துாக்கு மேடையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள் கும்பனிச் சிப்பாய்கள் சுற்றிநிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறார். கட்டபொம்மனின் தலை தொங்கி சரிந்த பின்னரும்..கட்டபொம்மனின் விழிகள் சரியவில்லை.

இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் உறைந்து நிற்கிறது கட்டபொம்மனின் ஏளனப் பார்வை.


 நன்றி!!கீழைக்காற்றின்... “விடுதலைப்போரின் வீர மரபு” லிருந்து

12 கருத்துகள்:

  1. நன்றி நன்றி நண்பரே!! உண்மைதான் இன்றும் ஏளனப் பார்வை நிற்கிறது இவர் பிறந்த நாட்டில்தான் "தாரகை "பார்வைக்கு தவமிருக்கிறார்கள்?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கத் தாரகை என்பதால்.....தவமிருக்கிறார்கள் நண்பரே...

      நீக்கு
  2. மேல் மக்கள் மேல்மக்கள் தான் தாழ்ந்து போகாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டென்ன ,இருநூறு நூறாண்டுகள் ஆனாலும் இவர்களின் வீரம் சரியாது !

    பதிலளிநீக்கு
  4. தமிழன் உள்ளவரை வீரபாண்டிய கட்டப்பொம்மனின் புகழும் வாழும்

    பதிலளிநீக்கு
  5. எப்போதும் உள்ள வரலாற்றுக் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....