பக்கங்கள்

Saturday, September 05, 2015

மச்சான்களுக்கு சேவை செய்ய வருகிறார். வேண்டாம் மச்சான்.



படம்-Maalaimalar Tamil மாலைமலர் தமிழ்



இதுபற்றி அவர்,   நிருபர் மச்சானிடம், வேண்டாம் மச்சான் கூறியதாவது:-


“நான் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டேன். அதற்குப்பதில், பீட்சா, ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுவேன். என் உடல் எடை கூடியதற்கு அவைதான் காரணம் என்று கருதுகிறேன். 



உடல் எடையை குறைப்பதற்கு நவீன சிகிச்சை மையம் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். 1½ மணி நேரத்தில் 1½ கிலோ எடை குறைந்தேன். அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பயிற்சியை மே மாதம் வரை தொடர்ந்தேன். அதன் விளைவு 18 கிலோ எடை குறைந்திருக்கிறேன். 



தொடர்ந்து பயிற்சிகள்



நான் இப்போது அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதற்காக இன்னும் 8 கிலோ எடை குறையவேண்டும். தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருகிறேன். இப்போது நான் அரிசி உணவு எதுவும் எடுத்துக்கொள்வதில்லை. டீ, காபி அருந்துவதில்லை. என்னை பாதித்த மனஅழுத்தமும் குறைந்துவிட்டது”.



இவ்வாறு  வேண்டாம் மச்சான் கூறினார்.



மீண்டும் ,மச்சான் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு  வேண்டாம் மச்சான் அளித்த பதில்களும் 







மச்சானின் கேள்வி:- படவாய்ப்புகள் இல்லையென்றால், மற்ற கதாநாயகிகள் சொந்த ஊருக்கு பறந்திருப்பார்கள். கடந்த 5 வருடங்களாக உங்களுக்கு படவாய்ப்புகள் இல்லையென்றாலும், சென்னையைவிட்டு போகவில்லையே ஏன்?



சேவைக்கு வரும் வேண்டாம் மச்சானின்  பதில்:- என்மீது அன்புகொண்ட தமிழ் மக்கள்தான் காரணம். எனக்கு இங்கு நிறைய மச்சான்கள் இருக்கிறார்கள். அவர்களைவிட்டு நான் போகமுடியாது. என் வாழ்க்கை முழுவதும் தமிழ்நாடு என்று ஆகிவிட்டது. வடஇந்திய பண்டிகைகள் எனக்கு மறந்துபோய்விட்டன. பொங்கல், தீபாவளி தான் நினைவில் உள்ளது.



அரசியல் பற்றி மச்சான் கேட்ட கேள்வியும் அதற்கு வேண்டாம் மச்சான் அளித்த பதில்களும்,



கேள்வி:- திருமணம் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?( இந்தக் கேள்வி அரசியலாம்ப்பா)



பதில்:- திருமணத்துக்காக நான் உடல் மெலியவில்லை. படத்தில் நடிப்பதற்காகத்தான் நான் மெலிந்திருக்கிறேன், என்றாலும் நான் திருமணம் செய்துகொள்வேன். ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. எளிமையானவராக இருந்தால் போதும். திருமணத்துக்குப்பின் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வேன்.



கேள்வி:- நீங்கள் அரசியலில் ஈடுபட போவதாக பேச்சு அடிப்பட்டதே?



பதில்:- அரசியல் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது என் ஆசை. இரண்டு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை தேர்வு செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக நான் பிரசாரம் செய்வேன்.



மேற்கண்டவாறு மச்சான் கேள்வி கேட்க வேண்டாம் மச்சான்  நமீதா பதில் அளித்தார். 

ஏற்கனவே... புர்ச்சி தல்வரின் வா....வா.....ர்ரிசு...... புச்சி தலவி....தாலிக்கு தங்கம் கொடுத்து தாலிய அத்துக்கிட்டு இருக்கு.... வேண்டாம் மச்சான் வந்து எந்த சேவை செய்யப் போகுதோ... மச்சான்களுக்கே.... வெளிச்சம்.....!!!!






20 comments :

 1. இவர் வந்தாவது தமிழ் நாடு காப்பற்றப்படும் என்று நம்புவோம் நண்பா.

  ReplyDelete
  Replies
  1. ஒங்களுக்கு அம்புட்டு நம்பிக்கை இருககா...நண்பரே......

   Delete
 2. ஒரே ஒரு நடிகய வச்சுகிட்டு நாங்க படுற பாடுபோதாதா? இதுல நீ வேறய! வர்ற போறவ எல்லாம் பங்கு போட இது உங்க அப்பன் வூட்டு சொத்தா? மூனு முளத்துணியே ஓடிபோயிறு!!!! நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
  Replies
  1. இப்பவே..விரட்டுவதற்கு ஆயத்தமாகிவிட்ட நண்பருக்கு நன்றி!!

   Delete
 3. இவர் சேவை செய்ய மாட்டார். நூடுல்ஸ்தான் செய்வார்!!

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க... ஏற்கனவே.. வந்து குந்தி இருக்கும் நடிகை. சாரய விற்பனை சேவையில் கொடி கட்டி பறக்கும்..போது... ........

   Delete
 4. Replies
  1. கொடுமைதான் அய்யா...ஏற்கனவே..ஒரு கொடுமையை ஆடிக்கிட்டு இருக்கும்போது இன்னொரு கொடுமைதான் இது...

   Delete
 5. நமிதாவின் பேட்டி வீடியோ http://goo.gl/sI8mJJ

  ReplyDelete
  Replies
  1. அடடா... என்ன..பரந்த மனது உங்களுக்கு..........

   Delete
 6. மக்கள் தெரிவு செய்தால் தானே
  அமைச்சராகலாம்

  ReplyDelete
  Replies
  1. எந்தக் காலத்தில் மக்கள் நடிக-நடிகையை தெரிவு.... செய்யாமல் இருந்தார்கள்.....அய்யா....

   Delete
 7. அஹ்ஹஹஹ் ஒன்றும் சொல்வதற்கில்லை...

  சில சமயங்களில் இது போன்ற ஊடகச் செய்திகளை நம்பவும் முடியவில்லை.....பத்திரிகைகள் பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லையே நண்பரே! பரபரப்புக்காக தலைப்பு எழுதி பின்னர் சிறிய எழுத்துக்களில் செய்தி அடியில் விரிவாக வெளியாவது என்பது அதுவும் அந்த விரிவாக்காத்தில் சில இல்லாததையும் கலந்து கட்டி...என்று...

  ReplyDelete
 8. அய்யா...நீங்க...இப்படிச் சொல்வீங்க என்றதான்.. நண்பர் காமராஜ் அவர்கள் “வேண்டாம் மச்சான் ”பேசிய வீடியோவின் சுட்டியை கொடுத்திருக்கார்.

  ReplyDelete
 9. வணக்கம் வலிப்போக்கரே,
  நடிகர் எல்லாம் தங்களுக்கு நினைவுக்கு வருவேதே இல்லியா?

  ReplyDelete
  Replies
  1. ஓ..... வரவார்களே....... அவர்கள் வரும்போது..கையில் கத்தி அருவாள் மற்றும் துப் ....பாக்கியுடன் வருவதால்.... சற்று.....பயம் ...............

   Delete
 10. எப்பொழுது சாக்கடை மணம் எப்படி இருக்கும் என்று தெரிந்தவரை தலைவனாக்க போகின்றீர்கள், நீங்கள் சாக்கடை மணம் இல்லாத வீதியால் செல்வதற்கு.

  ReplyDelete
  Replies
  1. சாக்கடையாக மாற்றிய சாலையை மாற்றுவது நல்லவர்களின் கடமை அய்யா.....

   Delete
 11. நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் :)

  ReplyDelete
 12. எது மச்சான்களுக்கு சேவை செய்ய வருவதா.....??? நண்பரே...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!