ஞாயிறு 06 2015

ஆசிரியர் தினம் என்ற பெயரில் அண்ணல் வ.உ.சி.யை மறைத்த கொடூரம்...



Mathimaran V Mathi (வே. மதிமாறன்)


                                         இவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
தத்துவத்திற்கான அடிப்படை தகுதிகூட இல்லாத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக உலகெங்கும் பிரச்சாரம் செய்த சர்வபள்ளி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் தினமாக அறிவித்தது முதல் தவறு. அந்த தவறின் சரியான தொடர்ச்சிதான் இந்துத்வ குறியீடான ‘குரு உத்சவ்’ என்கிற சொல்.

நிறைய படித்த இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். ‘இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே இந்துத்வவாதிகளால் அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்படுகிறவர். அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்ததால் அவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். 

அவர் பெரிய தத்துவமேதை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சொந்தமாக என்ன தத்துவம் சொன்னார் என்பதை மட்டும் இன்று வரை யாரும் சொல்லவில்லை.

ஆனால், ஒரு முறை அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது’ என்ற தத்துவத்தை உதிர்த்தார். 
அதற்கு தந்தை பெரியார் இப்படிக் கேட்டார்,

‘பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதனாலேயே ஒரு விசயம் உயர்வாகி விடுமா? கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா?’ என்று

 பெரியார் கேட்ட கேள்விக்கு தத்துவமேதை (!) ராதாகிருஷ்ணனிடம் பதில் இல்லை. இன்றுவரை பெரியாரின் அந்தக் கேள்வி, அப்படியேதான் இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அது அப்படியேதான் இருக்கும்.


டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்த பொதுவான பார்வை ஊடகங்கள் மூலம் எழுதபட்டவை ...அவரது ஆசிரியர் பணியில் எந்த குறையும் இல்லை ..ஆனால் வாழ்நாள் முழுவதும், இந்துத்துவ கருத்துகளை திணித்தவர் அவர்.. ஒரு இந்துத்துவவாதியின் பிறந்த தினமே, இந்நாட்டின் ஆசிரியர் தினமாக கொண்டாடபடவேண்டும் என்னும் நோக்கத்தில் திணிக்கபட்டதுதான் இந்த தினம் எந்த கொள்கையையும் மாணவர்கள் மீது திணிக்காத உண்மையான ஆசிரியர்கள் பலர் இந்த நாட்டில் உண்டு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை எதிர்த்து அர்ப்பணிப்போடு போராடிய வ.உ.சி யின் 144ஆவது பிறந்த நாள் இன்று. ஆசிரியர் தினம் என்ற பெயரில் வ.உ.சி. யின் பெயர் மறக்கடிக்கப்பட்டதான் சோகம்.






ரு

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அண்ணல் சிதம்பரனாருக்கு
 தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் கடுங்காவல், தேச துரோக தண்டனை பரிசளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், எந்த ஒருவருக்கும் அண்ணல் சிதம்பரனார் அவர்களுக்கு கொடுத்தைதைப் போல இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட வரலாறு இல்லை.

மழைக்கும் கூட ஒதுங்காத வடுக அரசியல் வல்லாண்மை குடிகொண்ட போது கலங்காமல் வாழ் நாள் சிறையினை நெஞ்சினில் தாங்கி துரோகத்தை உயிரினில் தாங்கிய அண்ணலின் வாழ்வு ஈகத்தின் மெய் நிலை விளக்கம்.

செக்கிழுத்தற்கும், கப்பலோட்டியதற்கும், அவர் தம் வாழ்வின் பணிகள் மகத்தானது.

உலகில் இவரைப் போன்று வேறு ஒரு பன்முகப் பண்பு கொண்ட, ஆளுமை கொண்ட ஒரு அரசியல் தலைவரை இதுவரை பெற்றதில்லை.

நமக்கு பலன் அடைந்து அவரையும் பெருமைப்படுத்த முடியாத அளவிற்கு Tamil Nadu Politics சாக்கடை, மலமும் நம்மை அழுத்தியுள்ளது.






நன்றி!
ALAGAPPAN ARUMUGAM 

12 கருத்துகள்:

  1. செக்கிழுத்த செம்மல் வ உ சி பாவம்! பிழைக்கத் தெரியாத் மனிதர்! அவருக்கு அரசியல் தெரியாது. ஏனென்றால் பண்பாளர்! நம்ம ஊர்ல நேர்மையான பண்பாளர்களை மறந்து, மறைப்பதுதானே நடந்து வருகின்றது! ..வேதனையான விசயம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைக்கத் தெரியாத் மனிதர்! அல்ல..அய்யா.... அடிமைப்பட்ட மக்களுக்காக இரக்கப்பட்ட மனிதர்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அனைத்து அடிமை மக்களுக்காக போராடியவர்களை..சாதியத்தலைவர்களாக சுறுக்கி இருக்கும் கேள்விகளுக்கு இன்னம் பதிலே இல்லை அய்யா

      நீக்கு
  3. திருவுபடுத்தப்பட்டு மறைக்கப்படும் தமிழரின் வரலாறுகளின் உண்மைநிலையை உணர்த்தும் பதிவுகளில் ஒன்று. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அய்யா...

      நீக்கு
  4. தேசத்திற்காக செக்கு இழுத்தவரை சாதிக்காரர்களே இழுக்கு உண்டாகி விட்டார்களே !

    பதிலளிநீக்கு
  5. அந்த வருத்தத்தோடு... அவருடைய பெருமையை குலைக்கும் வண்ணம் அவர் பிறந்த நாளை வேறாக அறிவித்து முடக்குவதும் அநியாயமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்,,,,,,,,,
    அருமையான பகிர்வு, எப்படி விட்டேன் எனத் தெரியல, மன்னிக்க,,,,

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....