பக்கங்கள்

Monday, October 19, 2015

இவர்கள் ஏமாறுவதும் .... அவர்கள் ஏமாற்றுவதும்...ஏனோ.???

படம்-www.lksri.com


1) .உசிலம்பட்டியைச் சேர்ந்த மதிவாணனும் அவரது மனைவி ஷிலா மற்றும் 5 பேர்கள் , மதுரை ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமாரை. அனுகி ஆஈஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றனர்.

ஆனால் சொன்னபடி அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தரவில்லை.. கொடுத்த பணத்தை கேடடபோது  கொலை மிரட்டல்தான் கிடைத்தது.

2) மதுரை கொட்டாம்பட்டி அருகே வயிரவன்பட்டியைச் சேர்ந்தவர் மாயழகன் இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா, ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து 

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக..ஆசை காட்டி1 லட்சத்து 37 ஆயிரத்தை பெற்றனர். இவர்களும் சொன்னபடி மாயழகனுக்கு சிங்கப்பூரீல் வேலை வாங்கித் தரவில்லை.. வேலைக்காக கொடுத்த பணத்தையும் கொடுக்க வில்லை...

3)  வாடிபட்டி பக்கத்தில் உள்ள கச்சிராயிருப்பை சேர்ந்தவர் பாரத்.. இவரை கூடல் புதூர்க்கு  அருகிலுள்ள அதலையைச் சேர்ந்தவர் ஆண்டிவேலன்.சந்தித்து உனக்கு இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார்.

இதனை நம்பிய பாரத் இரண்டு தவனையாக 60 ஆயிரத்தை தந்தார். பணத்தை வாங்கிய ஆண்டி வேலன் இதுவரை  பாரத்துக்கு வேலை வாங்கித் தரவில்லை.. தந்த பணத்தையும் தரவில்லை...

ஆக..இப்படியாக சின்னத்திரை தொலைக்காட்சியின் தொடராக போய் கொண்டு இருக்கிறது..

இதில் இவர்களை ஏமாற்ற சொன்னதும் .. அவர்களை ஏமாறச் செய்ததும் எதுவோ..???
13 comments :

 1. ஆசைதான்! சீக்கிரம் கார் பங்களா இத்யாதிகளுடன் சொகுசாக வாழனும் என்கிற முட்டாள்தனமான போராசைதான் காரணம்! ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவக்கு கொண்டாட்டம்தான் நண்பரே! அறியாமையும் ஒருகாரணம் ஏன் எதற்கு எப்படி என கேட்பதே இல்லை!!

  ReplyDelete
  Replies
  1. அந்த அறியாமைக்கும் ஆசைக்கும் யார் காரணம் நண்பரே....

   Delete
 2. என்ன செய்வது ஆசை மதியை மயக்கி விடுகிறது
  மேலே போதைகூட மதியை கெடுத்து விடுகிறது நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. அந்த ஆசைக்கும் அந்த போதைக்கும் எது காரணம் நண்பரே....

   Delete
 3. என்னிடமும் இப்படி ஒரு
  ஏமாந்த ஏமாற்றிய விஷயம் இருக்கிறது
  பதிவு செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. உடனே பதிவு செய்யுங்கள்..அய்யா... பரபரப்பில் பின் வேண்டாம் என்று மனநிலை மாறிவிடும் அய்யா...

   Delete
 4. இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஏமாறுவதை விட ,அதே பணத்தினால் ஏதாவது தொழில் செய்துப் பிழைக்கலாம் என்று உணருவதில்லை ஏனோ ?

  ReplyDelete
  Replies
  1. தொழில் செய்து பிழைக்க வழி தெரியவில்லையோ.?.அல்லது தொழில் செய்தால் பிழைக்க முடியாதோ? என்ற சிந்தனையாக இருக்கலாமோ...? நண்பரே....

   Delete
 5. வெளிநாட்டு வேலை என்கிற கவர்ச்சிக்கு மயங்கி விடுகிறார்கள். பாவம். உள்நாட்டில் ஒழுங்காய் வேலை கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படி வெளிநாட்டுக்கு அலையப் போகிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. அந்த வெளிநாட்டு ஆசையை தூண்டியவர்கள் யாரோ...நண்பரே.........

   Delete
 6. என்ன தான் சொல்ல வரிங்க இப்ப,,,,

  ReplyDelete
  Replies
  1. சம்பவத்த சொல்லி ஏன்? இப்படின்னு .... கேட்கிறேனுங்க

   Delete
 7. வணக்கம் நண்பரே,இதற்கு அடிப்படை காரணம் மோகம் தான்.ஒன்று பண மோகம்,இரண்டு கௌரவ மோகம்,மூன்று கலாச்சார மோகம்.இதில் பண மோகம் என்பது அங்கு ஒரு ரூபாய் சம்பாதித்தால் இங்கு இரண்டு ரூபாயாகும் என்பது.கௌரவ மோகம் என்பது வெளிநாட்டில் போய் சாணி அள்ளினாலும் நம் நாட்டில் கௌரவமாக பீற்றிக்கொள்ளலாம்.கலாச்சார மோகம் என்பது நம் நாட்டின் தட்ப வெப்பத்திற்கு கதர் ஆடை தான் நல்லது ஆனால் ஆங்கிலேய நாட்டில் குளிருக்காக கோட்டை உடுத்துகிறார்கள்.ஆனால் நாம் அதை உடுத்திக்கொண்டு பெருமை பீற்றுவோம்.அவசரம்,சோம்பேறித்தனம் எல்லாம் கை கோர்த்து நிக்கும் போது ஏமாற்றுபவர்கள் சரியாக அந்த தருணத்தை பயன்படுத்துகிறார்கள்.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com