பக்கங்கள்

Tuesday, October 20, 2015

தெய்வம் இல்லாத கோயில்....

படம்-தமிழச்சி --படிக்காத  தாய்
தன் மகனை
படிக்க வைத்தார்.

படிக்க பள்ளி
சென்று வந்த
மகனோ ஒரு
நாள் வந்து

அம்மா கடவுள்
என்னை காப்பார்
என்று சொன்னது
தப்பு அம்மா..

கடவுள் என்று
ஒன்று  இல்லையாம்
அம்மா..  என்னை
காப்பது நீதான்
அம்மா.. எனக்கு
நீதான் தெய்வம்
அம்மா.. என்றான் ......

தன் மகனின்
அறிவை கண்டு
மகிழ்ந்த அந்தத்
தாய்  தன்
மகனுக்கு தெய்வமாக
திகழ்ந்தார்  ஒரு
கட்டத்தில்  அந்தத்
தாய் மறைந்தார்.


அந்தத் தாய்
வாழ்ந்த வீடு
இன்று தெய்வம்
இல்லாத கோயிலாக
காட்சி அளிக்கிறது.
அந்த மகனுக்கு....

18 comments :

 1. கவிதை வரிகள் நன்று நடந்தை மறக்க முயற்சியுங்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பரே....ஒரு மாதம் ஆகிவிட்டதால்... வந்த நிணைவு நண்பரே.......

   Delete
 2. தாய்தானே அந்த கடவுளை அறிமுகப்படுத்துகிறாள்! அசையா கடவுள் நம்மை காக்கும் என்கிற நம்பிக்கையைவிட அசையும் கடவுளே தாய்! தாய் இல்லாத வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் அவர் பெயரை சொல்லும் நண்பரே!!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே............

   Delete
 3. தெய்வம் இருந்த வீடு எனவும்
  சொல்லலாமே !

  ReplyDelete
  Replies
  1. அந்தத் தெய்வம் இருந்த வீடுதான் அய்யா... தெய்வம் இல்லா விடாகிவிட்டது...

   Delete
 4. இது ஈடு செய்ய முடியாத இழப்பு.அம்மாவுக்குப் பின்தான் மற்றவை எல்லாம்.

  ReplyDelete
 5. உங்களின் தாய்ப்பாசம் , மெய்சிலிர்க்க வைக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. ஒன்று இரண்டு வருடங்கள் தவிர... 55 வருடங்களில் ..தாய் சொல்லைத் தட்டாதவன்,தந்தை இறந்தது கூட தெரியாதவன்...தாயை விட்டு பிரிந்தவன் இல்லை... அந்தத்தாயும் மகனை பெற்றெடுத்த நாளிலிருந்து மகனை விட்டு பிரிந்தது இல்லை .... நண்பரே.....

   Delete
 6. முதலில் என்னை மன்னியுங்கள்
  வலிப்போக்கரே

  வலிப்போக்கருக்கும்
  வலி இருக்கும் எனும் உண்மை

  அறியா மடந்தை தான் நான்
  தங்கள் நிலை பற்றி பகவானே

  நேரில் வந்து
  சொன்னபோதும்

  தங்கள் சோகம் அறியாமல்
  வாசித்து விட்டு தங்கள் வலியறியாமல்

  சென்ற என் அறியா மெய்யை மன்னிப்பீர்...
  வழக்கமாக

  இதுவும் ஒரு கலக அரசியல் விளையாட்டு பதிவு
  என்ற நினைப்பிலேயே வந்தேன்..

  தங்கள் உளமறிந்து மனம் நொந்தேன்..
  யாரும் தவற விடக்கூடாத பரிசு

  அவர்தான் தாய்... அவர்
  தம் மக்கள் எதைக்கேட்டாலும் தருபவரே தாய்..

  தம் மக்கள் கெட்டாலும் காப்பவரே நல்லதாய்..
  நல்லதோ கெட்டதோ சரிசெய்ய முயல்பவரே நல்லதாய்....

  கேட்டும் கேளாமலிருப்பவர் எவ்வகையிலும் தாயாக வாய்ப்பில்லை..

  அவ்வகையில் தங்களை ஈன்றவர் நல்லதாய் இனியேனும் மெய்படட்டும் இம்மாதிரி நல்ல'தாய்'களின் கனவுகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் வருகைகக்கும் நன்றி! அய்யா.....

   Delete
 7. தெரியாமலா சொல்லி வைத்தார்கள் 'தாயிற் சிறந்த கோவிலுமில்லை' என்று.. அம்மாவின் நினைவை எப்படி மறக்க முடியும்?

  ReplyDelete
  Replies
  1. நல்ல மகனால்.......நல்ல அம்மாவின் நினைவை எப்படி மறக்க முடியும்?.....................

   Delete
 8. தாயின் சிறப்பை சொல்வதற்கு வார்த்தை வர வில்லை தோழரே!
  உன்னத பதிவு! உயிர் தந்த உயர் பதிவு!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com