பக்கங்கள்

Wednesday, October 14, 2015

நீங்கள் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்.....

படம்-Prpc Milton Jimraj

ஆவின்றி அமையாது உலகு!
நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்

“மாடு ஒரு வாழை மரம்” என்று பொருத்தமாக வருணித்தார் ஒரு கால்நடை மருத்துவர் . மாட்டிடம் கிடைக்கும் நாமறிந்த பாலும், இறைச்சியும் அதன் பங்களிப்பில் ஒரு பகுதி மட்டுமே. இது தவிர மாட்டின் கொம்பு முதல் குளம்பு வரை எல்லா பாகங்களும் பல துறைகளில் முதன்மையாகவும், துணையாகவும் பயன்படுகின்றன. உணவு, பற்பசை, அழகு சாதனங்கள், மருத்துவம், தொழிற்ச்சாலை, ஊர்திகள், விமானம் என மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் மாடின்றி வாழ்க்கையில்லை.


மாட்டை சாணி போடும் ஒரு புனித மிருகமாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களே அதைக் கேவலப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆநிரை மேய்த்தலுடன்தான் மனித வாழ்க்கை துவங்கியது. மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, ஆறறிவு உயிரினமாக வடிவமைத்துக் கொண்டதில் கால்நடை இறைச்சி ஒரு முக்கியக் காரணமாகும். அதன்பின் பரிணமித்த நாடோடி வாழ்க்கையிலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி கால்நடைகள், குறிப்பாக மாடு மனித குலத்திற்கு அளப்பரிய சேவையை செய்தன.


மனிதனது அறிவு, அனுபவம், வாழ்க்கை அனைத்திலும் மாடுகள் கொண்டிருக்கும் உறவென்பது இன்று நேற்றல்ல, பல்லாயிராமாண்டு பழமை வாய்ந்தது. ஏடறியாத வரலாற்றின் தொன்மைக் காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சியும், புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் கண்டம் விட்டுக் கண்டம் நடந்த மனிதனோடு மாடுகளும் நடந்தன. இன்றும் ஜெட் விமானங்களின் இயந்திர உராய்வைத் தடுக்கும், மசகு எண்ணெயில் கலந்திருக்கும் கொழுப்பின் மூலமாக மாடுகளும் மனிதனை ஏந்திப் பறக்கின்றன.

மாட்டிறைச்சியின் மகத்துவம்
மாட்டின் வயிறு நான்கு அடுக்குகளாய்ப் பிரித்து உணவுப் பொருளைக் கட்டம் செரிக்கின்றது. மனிதன் எளிதில் உட்கொள்ள முடியாத, ஆனால் மனித உடலுக்குத் தேவையான பல்வேறு தாவரங்களை மாடு உட்கொள்கிறது. மாட்டிறைச்சியை உண்ணும்போது நாமும் அந்த சக்தியைப் பெறுகிறோம். மேலும் ஏனைய இறைச்சிகள், தாவரங்களைக் காட்டிலும் மாட்டிறைச்சியில்தான் அதிகமான இரும்பு மற்றும் துத்துநாக சக்தியும்(Iron & Zinc) இருக்கின்றன். பசலைக் கீரையின் சாறு ஒரு லிட்டரில் இருக்கும் இரும்புச் சத்தை பெற மாட்டிறைச்சியின் 90 கிராமே போதுமானது.

மேலும் இச்சத்துக்கள் மனிதனது வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடற்சக்திக்கும், சோர்வின்மைக்கும், நினைவுத் திறனுக்கும் அவசியமானவை. அடுத்து, இச்சத்துக்களை தாவரங்களிலிருந்தே பெறலாமென சைவ உணவு வெறியர்கள் வாதிடுகின்றனர். உன்மை என்னவென்றால் தாவரங்கள் மற்றும் அதன் மருந்து வகைகளிலிருந்து மனித உடல் 3 சதவீத்தை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் மாட்டிறைச்சியிருந்து 23 சதவீதசத்தை நமது உடம்பு ஏற்கிறது. மேலும் அன்றாடம் மாட்டிறைச்சியை உண்ணும்போது நமது உடல் தாவரங்கள் மற்றும் அதன் மருந்துகளிலிருந்து மேலதிக சக்தியை உறிஞ்சும் ஆற்றலையும் பெறுகிறது.

நையாசின், வைட்டமின் டி போன்ற சத்துக்களும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் ‘வைட்டமின் 12’(இந்த வைட்டமின் ஏனைய தாவர, விலங்குகளிடம் அதிகம் கிடைக்காத ஒன்று) மாட்டிறைச்சியில் அபரிமிதமாக கிடைக்கின்றன.

வாழ்க்கை முழுவதும் அரைப்பட்டினி நிலையிலேயே வாழும் தலித் மக்களின் ஆரோக்கியத்தை ஓரளவேனும் பராமரிப்பது மாட்டிறைச்சி என்றால் மிகையல்ல. உண்மையில் தரமான மாட்டிறைச்சியைக் குழந்தைப் பருவம் முதல் சாப்பிட்டு வந்தால் இந்திய மக்களின் சராசரி உடல் எடை, உயரம் அதிகரிப்பதோடு நோயற்ற ஆயுள் சராசரியும் வெகுவாக நீளும். பசுவின் புனித மென்ற பெயரில் பார்ப்பனியம் நமது உடல் நலனுக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைத்திருக்கிறது என்பதை அறிக.

இதுவரை சைவமென்று நினைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு உணவுப்பொருட்களில் மாடு உள்ளது. மாட்டு எலும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் என்ற புரதக் கூழைச் சேர்த்தே ஐஸ்கிரீம், இனிப்புத் தயிர்க்கட்டி (யோகர்ட்) தயாராகிறது. மேலும் சாக்லேட், சூயிங்கம், பழச்சாறு, ஒயின், பீர், பிஸ்கட் வகைகளிலும் மாடு கலந்திருக்கிறது. மனிதனால் செரிக்க முடியாத மாட்டின் பாகங்கள் கால்நடை, செல்ல விலங்கு, கோழி, மீன் ஆகியவற்றின் தீவனமாக நுகரப்படுகிறது.
மாட்டின் மருந்துப் பொருள்கள்
மருத்துவ உலகம் தான் கண்டுபிடித்திருக்கும் பல அரிய உயிர் காக்கும் மருந்துகளுக்காக மாட்டுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இம்மருந்துகளில் சிலவற்றை செயற்கை முறையில் தயாரிக்க முடியுமென்றாலும் அவற்றின் விலை அதிகமாகும்.
உலகின் சர்க்கரை நோயாளிகளில் அதிகம் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்து மாட்டின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. ஒவ்வாமை, மூட்டு முடக்குவாதம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான ‘ஹெபரின்’ மருந்து, தைராய்டு சுரப்பிகளை இயங்க வைக்கும் ‘தைராபிடின்’, டெட்டனஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ‘பாரா தைராய்டு ஹார்மோன்கள்’, அறுவைச் சிச்சையின்போது ரத்தப்பெருக்கை குறைத்து உறையை வைக்கும் ‘க்ளுக்கோன்’, காயங்களை சுத்தம் செய்யும் ‘ட்டிரிப்சின்’ மற்றும் ‘குரோமோட்டிப்சின்’ , புண்களின் சீழை வடிய வைக்கும் ‘டிஅக்ஸி ரைபோ நியூக்கிலியேஸ்’, இருதயத்தின் ரத்த அடைப்பை நீக்கும் ‘பிப்ரிநோலெஸிக்’ போன்ற அரிய மருந்துகளையும் மாடு அளிக்கின்றது.
மேலும் எய்ட்ஸ் நோய்க்கு பயன்படும் ‘பிடல் காப் சீரம்’ புற்றுநோய் சிகிச்சைக்கான ‘ஆல்புமின்’ ஆகியவற்றையும் மாடு தருகின்றது. பசுவை புனிதத்தின் பெயரில் ஒதுக்கி வைத்தால் அவ்வரிய மருந்துகள் கிடைக்காது என்பதோடு, ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுவர்.
தோல் பொருட்கள்

அதிகமான கால்நடைகள் வாழும் இந்தியா இயல்பாகவே தோல் உற்பத்தியால் முண்னணி வகிக்கின்றது. காலணி, கைப்பை, பெட்டி, பர்ஸ், தொப்பி, பெல்ட், துணிவகை, செல்போன் உறை, கார் இருக்கை உறை, விலங்குகளின் கழுத்து, இடுப்பு பட்டைகள் முதலானவை மாட்டின் பங்களிப்பகளாகும்.

அழகு சாதனப் பொருட்கள்
மாடின்றி அழகு சாதனப்பொருட்கள் ஒன்று கூட தயாரிக்க முடியாது. முகச்சவர கிரீம்கள், லோசன்கள், குளியல் மற்றும் சலவை சோப்புகள் , சிவப்பழகு களிம்புகள் , பற்பசைகள், மணம் வீசும் செண்டுகள், கூந்தலைப் பராமரிக்கும் ஷாம்புகள், தலைக்கு பூசப்படும் பல வண்ணச் சாயங்கள் அனைத்திலும் மாடு இருக்கிறது.
இதர பயன்பாடுகள்
பெயிண்ட், டிஸ்டம்பர், பிளைவுட், புகைப்படச் சுருள், மெழுகுவர்த்தி, பென்சில்கள், கோட்டு பட்டன்கள், இசைக்கருவி நரம்புகள், டயர், மசகு எண்ணெய், கீரிஸ், பிளாஸ்டிக் சிமெண்ட் அச்சுகள், வெடிமருந்து, உரம், அச்சு மை, தாளின் வழவழப்பு, சலவை நோட்டின் விறைப்பு, தீயணைப்பு பொருட்களின் நுரை ஆகியவற்றில் மாட்டின் பாகங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சரி, ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் சரி, மாடு இல்லாமல் எவரும் வாழ முடியாது.
\ஒருவேளை இந்து மதவெறியர்கள் இப்படியும் கூறலாம். “இதுவரை மாட்டின் மூலம் கிடைக்கின்ற மருந்துகள், பொருட்களை அறியாமல் பயன்படுத்தி விட்டோம். இனி மறந்தும் கூடப் பயன்படுத்த மாட்டோம்”. அப்படி உறுதியாகப் பின்பற்றினால் இந்து மதவெறி அமைப்புகளை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியும் பணியை நாம் செய்ய வேண்டியதில்லை. ‘கோமாத’ வே பார்த்துக் கொள்ளும்.
-ஸ்பார்ட்டகஸ்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2003

12 comments :

 1. Replies
  1. வருகைக்கு நன்றி! தோழரே...

   Delete
 2. அருமையான தகவல்கள்!! வாயில்லா ஜிவராசிகளுக்கு இருக்கும் அறிவும் பயனும், இந்த மனுச பயல்களுக்கு இருந்தால் ஏன்??????
  மதவெறி பிடித்து அலையப்போகின்றான் நண்பரே!!

  ReplyDelete
  Replies
  1. அது இல்லாத காரணத்தால்தான் இப்படி அலையுறான் நண்பரே....

   Delete
 3. நிறைய தகவல்கள் அறிந்தேன் நண்பரே.... நன்றி

  ReplyDelete
 4. சில விவரங்கள் தெரியும். மேலும் பல விவரங்கள் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 5. இந்த விளக்கம் மர மண்டையில் ஏறுமா :)

  ReplyDelete
  Replies
  1. அதான் நீங்களே சொல்லி விட்டீர்களே!! மர மண்டை என்று அந்த மண்டையில் எப்படி ஏறும் நண்பரே......

   Delete
 6. எந்த பார்ப்பணனாவது காவடி எடுக்கிறானா? தீ மிதிக்கிறானா? எச்சில் இலை மேல் உருள்கிறானா? அலகு குத்திக்கொள்கிறானா? தெருவில் உருண்டு புரள்கிறானா? மண் சோறு உண்டிருக்கிறானா? சாமியின் நகைகளை திருட மட்டும் செய்கின்ற பார்ப்பணன் சாமிக்கு நகை செய்து போட்டிருக்கிறானா? சாமிகளுக்கு வேட்டி,புடவை வாங்கி போட்டிருக்கிறானா? கூழ் காய்ச்சி ஊத்தீ இருக்கிறானா? தேர் இழுத்திருக்கிறானா? கோவிந்தா கோவிந்தா என கத்துகிறானா? ஐயப்பனுக்காக மாலை போட்டுக்கொள்கிறானா? தெருவில் பூசனிக்காய் உடைக்கிறானா? சாமியாடுகிறானா? அருள் வாக்கு சொல்லுகிறானா? வேப்பிலை கட்டிக்கொண்டு ஆடுகிறானா? ஆடு கோழி பலி கொடுத்திருக்கிறானா? கோயில் கட்டியிருக்கிறானா? கோயில் திருவிழா நடத்தியிருக்கிறானா? கும்பாபிசேசத்துக்கு பணம் தந்திருக்கிறானா? கோயில் பராமரிப்புக்கு பணம் தந்திருக்கிறானா? கோயில் உண்டியலிலாவது பணம் போடுகிறானா? பரிவட்டம் கட்டிக்கொண்டிருக்கின்றானா? மொட்டை அடித்துக் கொள்கிறானா? பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் அவன் சிலவில் பிள்ளையார் சிலை செய்து கொடுத்திருக்கிறானா? எந்த சாமி ஊர்வலத்திலாவது ஆடி பாடி கோஷமிட்டிருக்கிறானா? பார்ப்பணன் செலவில் பாலாபிஷேகம் என்ற பெயரில் கடவுள் சிலைகளின் மேல் குடம் குடமாக ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஊற்றி வீணடித்திருக்கிறானா?
  ஏன்? ஏன்? ஏன்? பார்ப்பணனனுக்குதான் தெரியும் எல்லாம் என்ன? என்று.


  பசுவின் பெண்குறியில் லட்சுமி குடியிருக்கிறாள் என்று அதற்கு கோயிலில் கர்ப்பக கிரகத்தில் கடவுள்களுக்கு செய்வது போல் பசுவின் பெண்குறிக்கு கர்ப்பூர தீபம் காட்டும் பார்ப்பணன் மாட்டின் மூத்திரத்துக்கு புண்ணிய தீர்த்தம் கோமியம் என்று பெயர் சூட்டி குடிக்க சொல்லுபவன் ஏன் அதே கோமியத்தை சாமி சிலைகளின் மேல் குடம் குடமாக ஊற்றி அபிஷேகம் செய்யக்கூடாது?

  FACEBOOK: Suthandhira Paravai

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தெரிந்தவர்களே..ஏகாம்பரமாக கோலோச்சும்போது, ஒன்றுரெண்டு மற்றும் எதுவுமே தெரியாதவர்களை என்னவென்று சொல்வது

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com