பக்கங்கள்

Saturday, October 31, 2015

இனி சாராயம் குடிக்காதவர்களும் கைது செய்யப்படுவார்கள்

தோழர் கோவன்தமிழ்நாட்டு தெரு வீதிகளில் காட்டாற்று வெள்ளமாக  மம்மி ராணியின் டாஸ்மாக் சாராயம் பெருக்கெடுத்து ஓடி பெரும்பாலான குடும்பங்களும் மாணவ -மாணவிகளும் சிறுவர்களும் சாராய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருந்தனர்

இந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்த பலரும் போராடினார்கள்  அவர்களில்.   காந்திய வழியில் போராடிய சசிபெருமாள்..  மம்மி ராணியின் தர்பாரில் கொலலப்பட்டார்.

அடுத்து ஜனநாயக வழியில் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு மற்றும் முன்னணியினருடன்,பொதுமக்கள் பலரும கைது செய்யப்பட்டனர்.

சாராய மம்மியின் தர்பாரை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர். அடங்க மறுத்த ம்ம்மியை எதிர்த்து போராடிய போது... மம்மியின் காலாட் படையால் அடித்து பூட்சால் மிதிக்கப்பட்டு , சிறையிலும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

இப்படி மம்மியின் சாராய வருமானத்தை எதிர்த்தவர்களின் உயிர் பறிக்கப்பட்டும்,  போராடியவர்கள் அனைவரும் செருப்பாலும் . இரும்பு கம்பியாலும் அடிக்கப்பட்டும், பினை மறுக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டப் பின்னரும்......

மம்மியின் சாராய சீரழிவை எதிர்ப்பை.. திசை திருப்ப.. பெரியாரின் பேரன் வெளியிட்ட கருத்தை எதிர்த்து மம்மியின் அடிமைப் படை  குதியாட்டம், குத்தாட்டம் போட்டும்...

மம்மியின் சாராய எதிர்ப்பும்  போராட்டமும் எதிர்ப்பும் .. அடங்காமல், ஒடுங்காமல் பம்மாமல்   பெரும் வீச்சாக இருப்பதை கண்டு மனம் பொறுக்காமல் வெதும்பியது . மம்மியும். சாராய மமமியின் காலாட்படையும் ..

 இந்நிலையில் மம்மியின் சாராய விற்பனை வருமானத்தை  எதிர்த்து பாடல் பாடியதற்க்காக. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் .. கலைக்குழு கலைஞர் தோழர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  சிறையில் அடைத்துள்ளதின் மூலம்.  சாராய மம்மி..  சாராய தேசத்தின் தலைவியாக காட்டிக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக.. இனி... சாராய மம்மியின்  தர்பாரில் அரசு சாரயம்  குடிக்காமல் டேக்கா கொடுத்து தப்பிப்பவர்களும், காசில்லாமல் மம்மியின் சாராயம் குடிக்காமல் வழியில்லாமல் ஓடி ஒளிந்து கொண்டு இருப்பவர்களும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  மட்டுமல்ல இருக்கும் அனைத்து வகை சட்டத்தின்படியும் கைது செய்யப்படுவார்கள்..


பாடியவரைக் கைது செய்து விட்டார்கள்.
இனி பரப்பியவர்களைக் கைது செய்யட்டும்.
பாடலைக் கேட்பவர்களையும் கைது செய்யட்டும்.
நமது பாடல் கோட்டையை எட்டும்
கொடநாட்டையும் எட்டும்.
மூடு டாஸ்மாக்கை என்ற மக்கள் குரல் அவர்களை செல்லுமிடமெல்லாம் விரட்டும்.மேலும் பார்க்க.....தோழர் கோவன் கைது.......

                                      மூடு டாஸ்மாக்கை மூடு
பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
மூடும் வரை பா…டு
பாடு அஞ்சாதே – பாடு
எத்தனை கைது… எத்தனை சிறை…
எத்தனை அடி… எத்தனை உதை…
எத்தனை பெண்கள் கண்ணீரு
எத்தனை வீடுகள் சுடுகாடு
எதிர்த்துக் நிற்க ஏன் தயங்கணும்
இப்பவே கேளு ஏன் நடுங்கணும்
போதை தெளிய தமிழனுக்கு
பாட்டு ஒண்ணு பாடினதுக்கு
தேசத்துரோக வழக்கெதற்கு
தேடித்தேடி கைது எதற்கு
எங்க பாட்டை நிறுத்த முடியாது
வாய் பூட்டு  போட முடியாது
பூட்டணும்னா கடைய பூட்டு
மிடாஸுக்கு விலங்கை மாட்டு
பாடல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

19 comments :

 1. புகழுக்கு சிலர் அடம்பிடிக்க
  போதைக்கு பலர் அடம்பிடிக்க
  இடையில் நாம் விழிக்க
  என்ன சொல்லி யார் திருத்த ...!

  வரு "மானம் "குறைஞ்சா குடிக்காதவங்களையும் கைது பண்ற காலம் வெகுதூரமில்லை நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வந்த வருமானத்தில்தான் நண்பரே.. 1000கோடிக்கு தியேட்டர் வாங்கி இருக்காங்க... நண்பரே.....

   Delete
 2. பாட்டிலேயே பதில் இருக்கே #எங்க பாட்டை நிறுத்த முடியாது
  வாய் பூட்டு போட முடியாது#

  ReplyDelete
 3. டாஸ்மார்க் பாஸ் மார்க் போடாதீர்
  த ம +
  நட்புடன்,
  புதுவை

  ReplyDelete
 4. மது மூலம் வருமானம் மிகப் பெரிய கேவலம். எல்லாவற்றுக்கும் அம்மா பெயரை வைத்தவர்கள் இதற்கும் அம்மா ஒயின்ஸ் என்று பெயர் வைத்திருக்கலாமே!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. குடிக்காதவர்களை கைதுசெய்யும்போது மம்மி ஒயின்ஸ் குடிக்காமல் தப்பித்துசென்றதால் லபக்கென்றோ விரட்டி பிடித்தோம் என்றோ சொல்வார்கள் நண்பரே...

   Delete
 5. என்ன சொல்றதுன்னே தெரியலயே ?😢

  ReplyDelete
  Replies
  1. நல்லாயிருப்பவர்களால்யே... ஒன்னும் சொல்லத் தெரியாமல் தவிக்கும்போது படிக்காத பாமரர்கள் ,குடித்தே நொந்தவர்களை என்ன சொல்வது அய்யா.....

   Delete
 6. பாட்டு அருமை நண்பரே.. மக்கள் என்றுதான் உணரப்போகின்றார்களோ....

  ReplyDelete
  Replies
  1. மக்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை அடிமைகளாய் ஆட்டி வைத்திருக்கும்போது எப்படி உணர வழி பிறக்கும் நண்பரே....

   Delete
 7. நல்ல பகிர்வு நண்பரே,

  ReplyDelete
 8. "பாடு அஞ்சாதே பாடு – மக்கள்
  தாலி அறுக்கும் டாஸ்மாக்கை
  மூடும் வரை பா…டு
  பாடு அஞ்சாதே – பாடு" என்பதே
  என் நிலைப்பாடு - எவரும்
  என் நிலைப்பாட்டை மாற்ற இயலாதே!

  ReplyDelete
  Replies
  1. என் நிலைப்பாட்டையும் நிச்சயமாக மாற்ற இயலாதுதான் நண்பரே

   Delete
 9. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்....

  ReplyDelete
  Replies
  1. இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது நண்பரே....

   Delete
 10. ஆம் உண்மைதான். சாராயம் குடிக்காவிட்டாலும் திருட்டு,வழிப்பறி, கொள்ளை, கொலை, லஞ்சம் வாங்குவது, மோசடி செய்வது ,பொது சொத்துக்களை சூறையாடுவது , பொது சொத்துக்களை கபளீகரம் செய்வது,போன்ற நல்ல செயல்களுக்காகவும் கைது செய்யப்பட்டு உடனே பிணையில் வெளி வரவும் சில ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெறவும் வழி வகை செய்யப்படும்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com