ம.க.இ.கவின் மைய கலைக் குழுத் தோழர் கோவன் மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக “மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய குற்றத்திற்காக தேசவிரோத வழக்கில் கைதானதும், அதனை ஒட்டி நாடு முழுக்க கண்டன குரல்கள் எழும்பியுள்ளதும் நாம் அறிந்ததே! இது தொடர்பாக மக்களுக்கு தங்களது நிலையை தெளிவுபடுத்தும் வகையிலும், இதனை எப்படி எதிர்கொள்வது என்ற வகையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, மக்கள் அதிகாரத்தை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மீனாட்சி ஆகியோர் நேற்று (31-10-2015) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.
பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை பலரும் கண்டித்துள்ளனர். பலரும் கண்டிக்காவிட்டால், மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் தோழர் கோவனை தமிழ்நாடு போலீசு என்கவுண்டர் செய்திருக்கும். ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மக்களும் தோழர் கோவன் கைதைக் கண்டிக்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை தீவிரப்படுத்தி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும்.
முதற்கட்டமாக, எதிர்வரும் 02-11-2015 திங்கட்கிழமை சென்னை, மதுரை, கோவை, விழுப்புரம், நெல்லை, திருச்சி, தர்மபுரியில் அனைத்துக் கட்சிகளின் ஜனநாயக சக்திகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம்
மேலும் படிக்க---தோழர் கோவன் கைது : மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது ,காத்திருப்போம் !
பதிலளிநீக்கு6ந்தேதி தெரிந்துவிடும் நண்பரே....
நீக்குநடக்குமா ஜி...
பதிலளிநீக்குகண்டிப்பா நடக்கும் ஜி...
நீக்கு//பலரும் கண்டிக்காவிட்டால், மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் தோழர் கோவனை தமிழ்நாடு போலீசு என்கவுண்டர் செய்திருக்கும்.//
பதிலளிநீக்குஉண்மை தான். அனைத்து ஜனநாயக சக்திகளும் மக்களும் தோழர் கோவன் கைதை அவசியம் கண்டிக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் கண்டிப்பவர்தான்.. ஜனநாயகவாதி நண்பரே...
நீக்குவணக்கம் வலிப்போக்கரே!
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டே உள்ளேன்.
தற்பொழுதுதான் வினவு தளத்தில் கோவன் அவர்களின் பாடலைப் பார்த்தேன்.
பேச்சுரிமையின் கருத்துரிமையின் குரல்வளை நெறிக்கப்படும் அரசியலும் ஆட்சியமைப்பும் எத்துணை அபாயகரமானது என்பதை நாடு கண்ணுறுகிறது.
காணொளிக்கு நன்றி.
காணொளியை கண்டு உண்மையை அறிந்த தங்களுக்கு நன்றி! நண்பரே.....
நீக்குஇப்பொழுது இந்தியாவில் மன்னர் ஆட்சிதான் நடக்கிறது நண்பரே....
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே...பேரரசு இந்தியாவை கொலைகார பேரரசரும்.. குருநிலமான தமிழ்நாட்டை சாராய சாம்ராச்சியத்தின் அல்லி ராணியும் ஆட்சி செய்கிறார்கள் நணபரே
பதிலளிநீக்குமக்கள் விரோத அரசு!
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே....
நீக்கு