திங்கள் 05 2015

மக்களும் விசித்தரமான இந்த நேரலையை பார்த்து கொண்டுதான் இருந்தார்கள்.

படம்-1

படம்-2







Govi Lenin 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.


பொதுமக்கள் இதுவரை பார்த்த நீதிமன்றக் ‘காட்சி’களில் வக்கீல்களின் வாதத்தில் அனல் பறக்கும். குற்றவாளியின் ஃப்ளாஷ்பேக் மனதை உருக்கும். சாட்சி சொல்பவரின் வார்த்தைகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும். 

நீதிபதி என்பவர் ‘யெஸ்..புரசீட்., கோர்ட் இஸ் அட்ஜர்ன்ட், ஆகவே, இ.பி.கோ செக் ஷன்படி தீர்ப்பளிக்கிறேன்’ என ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவராகக் காட்டப்பட்டு வந்தார். 

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பானபோதுதான், இத்தனை காலம் கண்ட காட்சிகளுக்கு நேர்மாறாக நீதிபதிகள் அதிக நேரம் பேசுபவர்களாகவும், வக்கீல்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரு சில வார்த்தைகளை வெளிப்படுத்தவே தயங்கக்கூடியவர்களாகவும் தெரிந்தனர்


. இரண்டு நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு் ஒருமித்த முடிவு ஏற்படாமல், தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான் திருப்பங்கள் நிறைந்த க்ளைமாக்ஸாக அமைந்தது. 


# நீதிமன்றம் மட்டுமல்ல, மக்களும் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.







                                                                 மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன் 


Shaji Chellan Lawyer
மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன் 
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. வன்னியர் ஜாதிக்கு நீதித் துறையில் அதிக ஒதுக்கீடு கேட்டுப் போராட என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். 


நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான் அடக்கம். 

இதில் யோக்கியர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அயோக்கியர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றேன்."

6 கருத்துகள்:

  1. //நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான் அடக்கம். //நீதி தலைவிரித்தாடுகிறது என்பது இதுதானா??

    நீதி விசாரனையை நேரலையில் காண்பித்தால் பல வண்டவாளங்கள் தெரியும்??

    அப்படிஒளிப்பரப்ப நிதி இல்லையாம்???

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே?

    நன்றி நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  2. இதன் தொடக்கம் மக்களிடமே இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இந்த இரண்டு ஜாதி எல்லாத் துறையிலும் இருக்கிறதே :)

    பதிலளிநீக்கு
  4. மாற்றங்கள் நிகழும் நேரம். இந்த நேரலை நான் பார்க்கத் தவறி விட்டேன்!

    பதிலளிநீக்கு
  5. சாதிக்கு நீதி கேட்ட காலம் போய்
    நீதிக்கு நீதி கேட்கும் காலம் இப்போது தோழரே!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. நேரலை பார்க்க முடியாமல் போய்விட்டதே...

    கீதா

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....