செவ்வாய் 06 2015

“மரியா”...காமத்தின் புதிய தேவதை...


puka6_sex_oct_15_wrapper
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு

லகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015




16 கருத்துகள்:

  1. இங்கு கிடைத்தால் வாங்கலாம் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தொலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..99411 75876, 97100 82506,

      நீக்கு
  2. உக்ரைனிலும் இந்த நிலைமை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உக்ரைனில்தான் என்று அட்டைப்படக் கவிதை குறிப்பிட்டு இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  3. செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ //ரெம்ப தேவைதான் அவஸ்தைபடும்போதும் மட்டும்!
    இங்கும் இருக்கிறதுதானே நண்பா??

    பதிலளிநீக்கு

  4. தோழரே!
    வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது.
    நிச்சயம் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரை உதவி செய்யுமென நம்புகிறேன்.
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஒரு அறிமுகம். கிடைத்தால் வாசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .99411 75876, 97100 82506,..இரு நம்பர்களை தொடர்பு கொண்டால் கிடைக்கும் நண்பரே............

      நீக்கு
    2. இன்றைய நடப்பு இதுவே!! திருத்தவே இயலாது!

      நீக்கு
    3. அடித்துக் கொண்டே இருந்தால் அம்மியும் நகருமாம் அய்யா....

      நீக்கு
  6. வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது.
    நல்ல விமர்சனம்,,,,,

    பதிலளிநீக்கு
  7. அறிமுகத்திற்கு நன்றி..நல்லதொரு நூல் போல் தோன்றுகின்றது...உக்ரைனுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா..கவிதையில் உக்ரைன் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது அய்யா.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....