பக்கங்கள்

Saturday, November 21, 2015

அப்பட்டமான நடிப்பும்... கடைந்தெடுத்த பொய்யும்...


படம்-Barathi Thambi


'மக்களுக்கு ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்கள் கொடுக்கத்தான் நாங்கள் சரக்கு விற்கிறோம். மற்றபடி, இந்தக் கருமத்தை விற்க வேண்டும் என எங்களுக்கு என்ன தலையெழுத்தா?’ என ஏதோ வேண்டாவெறுப்பாக, மக்கள் நலனை முன்வைத்து, இந்த வேண்டாத வேலையைச் செய்வதைப்போல பேசுகிறார்கள். 

இது பச்சையான பாசாங்கு; அப்பட்டமான நடிப்பு; கடைந்தெடுத்த பொய்.

ஆண்டு ஒன்றுக்கு இலவசப் பொருட்களுக்கு அரசு செலவிடும் பணத்தைக் காட்டிலும், மிடாஸ் சாராயக் கம்பெனிக்குக் கிடைக்கும் லாபம் பலமடங்கு அதிகம். மிடாஸுக்கு மட்டும் அல்ல... டாஸ்மாக்குக்கு சரக்கு விநியோகிக்கும் கம்பெனிகளின் ஆதாயத்துக்காகத்தான் டாஸ்மாக் நடத்தப்படுகிறதே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல. 

'எதை விற்றேனும் மக்களுக்கு நல்லது செய்தே தீர வேண்டும்’ என நாடி நரம்பு எல்லாம் மக்கள் நலன் பொங்கி வழிந்தால், சாராயக் கடையை மூட வேண்டியதுதான் அதற்கு முதல் நிபந்தனை.


மேலும் படிக்க...கிளிக் செய்க....பூங்கொத்தை விட மலிவான மனித உயிர்கள்


15 comments :

 1. பிறகு எப்படி அரசியல்பிழைப்பு நடத்துவது??

  ReplyDelete
  Replies
  1. இப்படி பிழைப்பு நடத்துவது ..மானமில்லா பொழப்பு.........

   Delete
 2. இலவசம் இனி வேண்டாம்
  மக்கள் சொன்னாலும்
  மாண்புமிகு சொல்ல மாட்டார்கள்
  பணம் படுத்தும் பாடு!
  சொன்னால் வெட்கக் கேடு!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. சொன்னால்தானே.. வெட்கக்கேடு பற்றி மானமுள்ளவர்களுக்காகவது தெரிய வரும் நண்பரே.....

   Delete
 3. Replies
  1. எந்த இணைப்பு என்று தெரியயவில்லை... சித்தரே.... தெரியாவிட்டாலும் வருகைக்கு நன்றி! வலைசித்தரே....

   Delete
 4. தங்களுடைய மானத்தை விற்றவர்களுக்கு இது பெரிதல்ல அய்யா

  ReplyDelete
  Replies
  1. மானத்தை விற்றவர்கள் தமிழராக இருக்க மாட்டார்கள் அதோடு மனிதர்களாகவும் இருக்க வாய்ப்பில்லை....... வருகைக்கு நன்றி! நண்பரே...........

   Delete
 5. தவறுகளின் தொடக்கமே மக்களிடம்தான் இருக்கின்றது நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. ஏமாந்தாவர்கள் எப்பொழுதுமே...ஏமாந்தா இருப்பார்கள் நண்பரே..........

   Delete
 6. சுய நலத்தை விடவா மக்கள் நலன் பெரிது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது சுயநலந்தானே பெரிது என்று செயல்படுகிறார்கள்..

   Delete
 7. விகடனின் கட்டுரை நன்றாக இருந்தது...உங்கள் ஆதங்கம் புரிகிறது

  ReplyDelete
 8. அருமையான கட்டுரை.....ஆட்சியாளர்கள் சுயநலவாதிகளாக இருப்பதைப் பாமரமக்கல் புரரிந்து கொண்டு புரட்சி செய்தால் ஒழிய நல்லது நடக்க்ப் போவதில்லை....பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com