பக்கங்கள்

Monday, November 30, 2015

புனிதமற்ற காதல் அநாகரிமான முறையில் கொலை செய்யும்..

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
படம்--வினவு..அவன் பெயர் கார்த்திக் ராஜா..11ம் வகுப்பு படித்து வந்தான். அவள் பெயர் லோகேஸ்வரி அவளும் 11ம் வகுப்பு படித்து வந்தாள்... இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தார்கள்.

இவர்கள் நீண்டகாதலர்களாக இருந்ததால் முதல் கர்ப்பத்தை கலைத்த மாதிரி இரண்டாவது கர்ப்பத்தை அவர்களால்  கலைக்க முடியவில்லை... ஏனென்றால் லோகேஸ்வரியின் இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை கடந்து விட்டதால் கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்

இதனால்  காதலன் கார்த்திக் ராஜாவை தன்னை மணம் செய்யுமாறு லோகேஸ்வரி வற்புறுத்தினாள்...

முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தட்டி கழித்தான்.  உன் பெற்றோரை கேட்டா என்னை காதலித்து என்னைக் கர்ப்பமாக்கினாய் என்று கேட்டு மீண்டும் தன்னை மணம் செய்ய வேண்டும் என்று நச்சரித்தாள்.

காதலி லோகேஸ்வரியின் நச்சரிப்பினால் ஒத்துக் கொண்டவன் ..நம் காதலை என் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்... அதனால் நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றான்.

உண்மையாக அவனை  காதலித்த அந்த பேதைப் பெண்ணும்..தன் காதலனின் சொல்லை வேத வாக்காக நிணைத்து.. அவனுடன் பைக்கில் சவாரி செய்து ஒரு காட்டிற்குள்  சென்றாள்.

காட்டிற்குள் இருவரும் வந்தபின் அந்த பேதைப் பெண்“ எங்கே விசம்” என்று கேட்க... அந்தப் பேதைப் பெண்ணின் துப்பட்டாவைகே் கொண்டு அவளது கழுத்தை நெறித்துக் கொன்றான்.

தான் நேசித்த பெண்ணுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும் உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட கார்த்தீக் ராஜா என்பவன். ஈவு இரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கிக் கொன்றிருக்கிறான்.

புனிதமற்ற முறையில் காதலித்து...அநாகரிமான முறையில்  கொலை செய்த அந்தகாதலன் கைது செய்யப்பட்டபோதுதான்... புனிதமற்ற காதலன் ..தன் புனிதமான காதலியைகொலை செய்த விபரம் வெளியுலகிற்கு தெரிய வந்தன..

20 comments :

 1. இதன் பெயர் காதல் அல்ல!
  காமம்

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. கொல்வதற்கு முன் இருந்தது...காதல் என்று சொன்னார்கள்.. நண்பரே....

   Delete
 2. இது காதலே அல்ல, கொடிய குற்றவாளியின் செயல்.

  ReplyDelete
  Replies
  1. திட்டமிட்டுதான் காதல் செய்து இருக்கிறானோ....????

   Delete
 3. இது காதல் இல்லை. முறையற்ற காமம். பாவம் அந்தப் பெண்!

  ReplyDelete
  Replies
  1. காதலும் காமமும் ஒன்று காதல் அறிஞர்கள் சொன்னதாக கேள்வி நண்பரே.........

   Delete
 4. Replies
  1. இந்த பாவிகளுக்கெல்லாம் மோட்சம் கொடுக்கத்தான் கடவுள் என்று ஒன்று இருக்கிறது நண்பரே.......

   Delete
 5. நண்பரே அதற்குப்பெயர் காதலா?

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் ஊடகங்களும் திரைப் படங்களும் சொல்கின்றன நண்பரே..........

   Delete
 6. பேதைப் பெண்கள் ,,,,,,,,,,,, நம்புவது இப்படியானவர்களைத் தான்,
  நல்ல பகிர்வு,

  ReplyDelete
  Replies
  1. வளர்க்கிறவனை நம்பாமல்....அறுக்கிறவனை நம்பும் ஆடு மாதிரிதான் இந்தப்பேதைப் பெண்கள் நண்பரே.....

   Delete
 7. பெற்றோர்கள் மீது நம்பிக்கை வைக்காத பல பெண்களுக்கு இதுதான் நிலை....

  ReplyDelete
  Replies
  1. பெற்றோர்களும் பல பெண்களுக்கு எமனாகவும் இருக்கிறார்கள் நண்பரே........

   Delete
  2. //பெற்றோர்களும் பல பெண்களுக்கு எமனாகவும் இருக்கிறார்கள் நண்பரே........//
   சரியாக சொன்னிங்க சமூகத்தின் வலிபோக்கரே. இது, இந்த நேர்மை தான் உங்களிடம் என்னை கவர்ந்தது.

   Delete
  3. நன்றி! வேகநரியாருக்கு.

   Delete
 8. காமம் கண்ணை மறைக்கும் என்பது இதுதான் :)

  ReplyDelete
  Replies
  1. காதலும கண்ணை மறைப்பதாக.. அனுபவஸ்தர்கள்..சொல்லக்கேள்வி.....

   Delete
 9. இது புனிதமான காதல் அல்ல அல்ல அல்ல அதையும் தாண்டிக் கொடுமையானது குரூரமானது...(கமல் நினைவுக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ஹஹஹ் )

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com