பக்கங்கள்

Tuesday, December 01, 2015

ஒரு காதல் பாட்டில் சொக்கி போன மனது.....

மழை விடுவதாக இல்லை..பஸ்சும் வருவதாக தெரியவில்லை.. ஆட்டோதான் சர்புர்ர்னுஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நின்றது. அவசரத்துக்கு கூட ஆட்டோவில் பயனிப்பது..இல்லை.. பஸ் அல்லது நடை ராஜாதான் எனது பானி... மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் நடை ராஜா பானியை தொடர முடியவில்லை.. 

பஸ் நிறுத்தத்தின அருகே உள்ள கடையின் வாசலில்  மழையில் நணையாமல் நின்று கொண்டு இருந்து பஸ் வரும் திசையை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தேன்.ஒரு பஸ் வந்தது, மழை பெய்வதால் நின்றால் நணைந்து விடுவோம் என்று பஸ் நிணைத்ததோ..அல்லது பஸ் டிரைவர் நிணைத்தாரே... பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விட்டது.

 இப்படியாக  இரண்டு. மூன்று பஸ்கள் சென்றுவிட்டது. நான்தான் மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே..எரிச்சல்படாமல் முனு முனுக்காமால் அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்தேன். ஒரு பஸ் வந்தது. எனக்காக நிற்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் அந்த நிறுத்தத்தில் இறங்கியதால்  பஸ் மழையில் நிணைந்தவாறு நின்றது.. பஸ்ஸில்உள்ளே நுழைந்த போது பஸ் சீட் எல்லாம் மழையில் நணைந்திருந்தது. 

நிற்க முடியாதவர்கள். எல்லாம்  தலைவிதி என்று உட்கார்ந்து இருந்தனர். உட்கார்ந்தால் நம் அணிந்திருக்கிற உடை நாரிப் போயிரும் என்று நிணைத்த வீராதி வீரர்கள் எல்லாம்  முதுகுக்கு முட்டு கொடுத்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களுள் ஒருவனான எனக்கு  முட்டுக்கொடு க்க இடமில்லாததால் ஓட்டுனர் பக்கத்தில் போய் நின்றேன். பஸ்ஸில் இருந்த எப்எம்  ரேடியோவில் இசைஞானியின் சூப்பர் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன... எல்லாப் பாடல்களையும் கேட்டு இரசித்த எனக்கு அதில் ஒரு பாட்டும் மட்டும்  என் மூளையில் பதிவாகியது... அந்தப் பாட்டின் முழுவரிகளும் தெரியாத போதும் ஒலித்த இசையையே  சில நாட்களாக ஒலித்தேன்... அடுத்தப் பாடல்  என் மூளையில் பதிவாகும்வரை இந்தப்பாடல்தான் என்னையும் அறியாமல் ஒலித்தது.

இந்தப்பாடல் வந்த புதிதில் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்தாக ஒரு நண்பர் டிவிட்டரில் சொல்லியிருந்தார்...நான் இப்பொழுதான் கேட்டு இருப்பதாக என்னை கிண்டலடித்தார். உண்மைதான்  அன்று எனக்கு இசை ரசனை இல்லை இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக.....

அந்தப்பாடல் இதுதான்.. Movie: Karumbu Vil (1980) || Language: Tamil || Singer: K.J.Yesudas || Actors: Sudhakar and Subhashini || Music: Ilayaraja

16 comments :

 1. "மழை வரும் நாளில் வலிப் போக்கர்
  பாட்டில் பார் வலம் வருகின்றார்!"

  'கரும்பு வில் 'லை பிழிந்து பானமாக இனிக்க இனிக்க தந்த தோழரின் தோள்களுக்கு
  பாராட்டுப் பொன்னாடை.
  நன்றி தோழரே!

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. பொன்னாடை பெறுவதற்க்கெல்லாம் எனக்கு த..தகுதியில்லை நண்பரே....

   Delete
 2. ஓஹோ அதான் ஒரே காதல் பதிவா,,,,,,
  சும்மா,,,,

  ReplyDelete
  Replies
  1. திட்டமிட்டு பதிவு எழுதுவதில்லை ..நண்பரே...எதார்த்தமாக செய்தி பத்திரிகையை படித்தபோதும் பயணத்தின் போது ம் உதித்தவை நண்பரே...

   Delete
 3. Replies
  1. கேட்கம்போது பாடல் எனக்கு நல்லா இருந்ததால் இந்த பதிவு .சித்தரே......

   Delete
 4. அன்புள்ள அய்யா,

  நல்ல பாடலை மீண்டும் கேட்க வைத்தீர்கள். கேட்டு மகிழ்ந்தேன்.

  நன்றி.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. பயணத்தின் போது நான் கேட்டதால் ..வந்த பதிவு அய்யா.....

   Delete
 5. பாடல் அனைத்தும் ஸூப்பர் ஆனால் படம் பெரிய தலைவலி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. படத்தை நான் பார்க்கவில்லை. நண்பரே...பாடல் கேட்க நன்றாக இருந்தது... அதனால்தான் இந்த வீடியோவை பதிவு செய்தேன் நண்பரே.......

   Delete
 6. ஆடியோ வரவில்லை ,மீன்கொடி தேரில் மன்மத ராஜனின் ஊர்வலத்தை ரசிக்காதவர்கள் யார் :)

  ReplyDelete
  Replies
  1. அதனால் தான் ஆடியோவில் தேடியபோது கிடைக்கவில்லையோ....????

   Delete
 7. வணக்கம்.

  காதல் பாடலில் வலிப்போக்கர் மயங்கியது வியப்பு தான்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எதோ...காலம் கடந்து ரசனை வந்திருக்கிறது..நண்பரே.............

   Delete
 8. ஐயோ அருமையான பாடல்...எத்தனை முறை ரசித்திருக்கின்றோம் அப்போதே....மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி என்ன ஒரு பாடல்....

  கீதா: மோஹனம் ராகத்தில் அமைந்த அருமையான பாடல் சகோ......தாஸேட்டனின் குரலில்....ராஜாவின் இசையில் ..நன்றி நன்றி

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com