திங்கள் 14 2015

போதையேற்ற அறிவை பயன்படுத்திய விதம்...

படம்-valaiyukam.blogspot.com


அவன் இந்தாண்டு பத்தாவது தேர்வு எழுதப் போகிறவன். யார் கற்று தந்த பாடமோ...,,அல்லது கண்ணால் கண்ட கற்றுணர்ந்ததோ..தெரியவில்லை.

அவனின் நண்பர்கள் குழு ஒன்று போதையேற்றுவதை முன்னிட்டு, சரக்கு வாங்க இவனை அனுப்பி வைத்தார்கள் ...

 சரக்கு கடையான அரசின் டாஸ்மாக்குக்கு வந்த அவனோ.. சர்வ சாதரணமாக ஒரு பிராண்டின் பெயரைச் சொல்லிக் கேட்டான்.

சரக்கு விற்பனையாளன். சட்டென்று அவன் சொன்ன பிராண்ட்-டை எடுத்தவன் திடிரென்று அவன் போதை தெளிந்தவன் போல்..

“ டேய் சின்னப்பயலுக்கு, பள்ளிக்கூடம் போற பயலுக்கு எல்லாம் சரக்கு கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு..போடா” என்று சத்தம் போட்டு விரட்ட.

அவனோ.... அண்ணே... எனக்கு இல்லேண்ணே...அதோ..அங்க நிக்கிறாரு பாருங்க..அவருக்குண்ணே... அவருக்கு தெரிஞ்சவுங்க அங்கிட்டு நிக்கிறதால என்னய வாங்கி வரச் சொன்னாருண்ணே....என்று அளந்து விட்டான்.

இவனின் கதையை நம்பிய சரக்கு விற்பனையாளன். தெளிந்த போதை மீண்டும் ஏறியவனாக...“எங்க  அவர. என்னய பாத்து சொல்லச் சொல்லுடா என்று சொல்ல.....

கடையை விட்டு விரைவாக வந்த மாணவன். சரக்கு விற்பனையாளரிடம் சுட்டி காட்டியவரிம் வந்து..“அண்ணே..ஐநூறு ரூபாயக்கு சில்லரை கேட்டேண்ணே...இல்லேண்ணுட்டார்ண்ணே.. நீங்கச் சொன்னா தருவாறுண்ணே....ஒரு கையை மட்டும் ஆட்டிசொல்லுங்கண்ணே என்று சொன்னான்.

மாணவனின் கதை தெரியாத அந்த அண்ணனோ.... தெரிந்த பையன்தான் கொடுங்க என்று  கை அசைத்தான்.....

சரக்கு விற்பனையாளரோ..... தமக்குள் முனங்கியவாரே.... இந்தாடா.... வாங்கிட்டு ..போ.....இனி உன்னய வாங்கச் வரச் சொன்னா...  இனிமேல் எனக்கு தரமாட்டங்கன்னு சொல்லிவிடு என்றபடியே..அவன் கேட்ட சரக்கை எடுத்துக்
கொடுத்தான்

சரக்கை பெற்ற மாணவனோ.... சிட்டாய் ஓடி மறைந்தான்.

மறுநாள் போதையேறி மாணவன் செய்த அளப்பறையில்..மாணவர்களின் பெற்றொர்கள் புலம்பிய புலம்பலில் தெரிந்தது.. மாணவன் போதையேற்ற தன் அறிவை பயன்படுத்திய விதம் தெரிந்தது.


14 கருத்துகள்:

  1. போதை, எல்லா மொள்ளமாரித் தனத்தையும் செய்யச் சொல்லும் :)

    பதிலளிநீக்கு
  2. நம் மாணவர்கள் நல்லதுக்குத்தான் அறிவை உபயோகிப்பதில்லை.
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. இவன் பெரிய அரசியல்வாதியாக வந்துருவான் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. அறிவு பெரும்பாலான சமயங்களில் தப்பு வழிக்குத்தான் பயன்படுகிறது!
    தம +1

    பதிலளிநீக்கு
  5. இதற்கும் அரசியல் தானா? நண்பரே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசைப் பற்றிய இயல்தான் அரசியல்... இதை ஓட்டுக் கட்சிகள்...அற..சீயலாக ஆக்கிவிட்டார்கள்...அரிசியில்கூட அரசியல் இருக்கிறது நண்பரே..

      நீக்கு
  6. அடப்பாவிகளா
    உங்கள் அறிவு இப்படியா பாழ்பட்டுப் போகணும்
    படமும் சொல்லிச் சென்றவிதமும்
    அடி மனம் சுட்டது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி வளர் சமூகத்தை பாழ்பட வைக்கும் மூல காரணத்தை அறிந்து அழித்தால்... சமூகம் தப்பிக்கும் அய்யா....

      நீக்கு
  7. அறிவு இப்படியா பயன்பட வேண்டும் ஆனால் இப்படித்தான் பயன்படுகின்றது என்ன செய்ய? அதனால்தான் நாம் இன்னும் முன்னேறாமல் இருக்கின்றோமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று பழக்கிவிட்டார்களே...அய்யா...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...