படம்- |
சிக்னலில் நாலு மூனு
ரெண்டு சக்கர வாகனங்கள்
நின்று இருக்க.. இருவர்
மூவர் ஒவ்வொரு திசையில்
பிச்சை கேட்டு நடக்க...
இரு சக்கர வாகனத்தில்
இருந்த கனவான் ஒருவர்
தன் பனப்பெட்டியை திறந்து
அதில் ஒரு பத்து
ரூபாய் தாளை எடுத்து
தனக்கு பின்னால் அமர்ந்து
இருந்த பெண்ணிடம் நீட்ட
அந்த பெண்ணொ பாதுகாப்புக்கு
கணவனின் வயிற்றை பிடித்து
இருந்த கரங்களால் நீட்டிய
பணத்தை பெற்று பிச்சை
கேட்டவரின் உண்டியில் போட்டார்
இதை சைட் அடித்து
நின்ற மூனு சக்கர
வாகன ஓட்டி ஒருவர்
பிச்சை போட பணத்தை
எடுத்தவன் தான் போடாமல்
தன் மனையாளிடம் கொடுத்து
போடச் சொல்கிறானே இதில்
எதாவது விசயம் இருக்கும்
என நிணைத்து அவன்
சோசியன் ஒருவனிடம் கேட்க.
பெண் பிச்சை இட்டால்
பாவம் செய்த கணவனக்கு
புன்னியம் கிடைக்கும் எனறான்
அது கேட்டு சோசியனுக்கு
அறிமுக கார்டு அடித்து
கொடுக்க வந்தவன் கேட்டான்
அப்படி என்றால் ஆளுகின்ற
ஆட்சியாளர்கள் ஓடாத பேன்
கிரைண்டர் உடைந்து போன
மிக்ஸி கொடுப்பது அவர்கள்
ஊழல் மறைந்து மோட்சம்
கிடைக்கத்தானா..என்று வினவ
ஆம் எனற் சோசியன்
பிச்சை மற்றும் இலவசம்
கொடுப்பது புன்னியத்துக்கும்
மோட்சம் கிடைக்கத்தான் என்றான்
இலவசம் கொடுப்பவனுக்கும் பிச்சை
போடுபவனுக்கும் புன்னியம் மோட்சம்
கிடைக்கும் என்றால் இலவசம்
வாங்குபவர்களுக்கும் பிச்சை கேட்பவர்களுக்கும்
நரகம்தானே கிடைக்கும் என்றபோது
சோசியன் கண் சிமிட்டினான்...
குறிப்பு :- பிச்சை, இலவசம், அன்னதானம் போன்றவைகள் வரிசையில் ”உதவி” என்பது சேராதாம்....
ஆஹா இது எங்கேயோ.. உதைக்கிறதே நண்பரே...
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே.....
நீக்குஹஹஹஹ கடைசியில் சொன்னது செம...இலவசம் எல்லாமே வேஸ்ட்...அதற்கு உருப்படியாக ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்தால் நல்லது..அது நடக்காத ஒன்று என்ன சொல்ல
பதிலளிநீக்குமனிதர்கள் ஆட்சிசெய்தால் நல்லது கிடைக்கும்,,,,???
நீக்குசேதாரம்,, நல்லா இருக்கு,
பதிலளிநீக்குநன்றி! நண்பரே.....
நீக்குபாவ புண்ணியம் எல்லாம் இல்லை ,இரு தரப்புக்கும் வோட்டு பிச்சை தான் :)
பதிலளிநீக்குவோட்டு பிச்சை எடுப்பவர்களுக்கு நரகம் கிடையாதே.....
நீக்குநன்றி! ஜி
பதிலளிநீக்குபிச்சை போடுவதும் தவறு
பதிலளிநீக்குபிச்சை எடுப்பதும் தவறு
நன்றி! நண்பரே........
நீக்குசரியாகச்சொன்னீர்கள்...
பதிலளிநீக்குநன்றி! நண்பரே......
நீக்கு