பக்கங்கள்

Thursday, December 17, 2015

மீண்டும் “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்”

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
படம்-.அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள்அன்று
“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். 

இன்று......
சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.


இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட பெரியாரின் வழிவந்த அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

10 comments :

 1. ஸூப்பர் போஸ்ட் நண்பரே..

  ReplyDelete
 2. பொருத்தமான தலைப்பு.

  ReplyDelete
 3. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் உள்ளது இந்த தீர்ப்பு :)

  ReplyDelete
  Replies
  1. ஆம் அப்படித்தான் நண்பரே...

   Delete
 4. மீண்டும் “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்”
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com